கெட்ட நீர் வெளியேற

கெட்ட நீர் உடலில் தேங்குவதால் அமில மாற்றங்கள் உடலில் ஏற்படுவதும், அதனால் எலும்பு தேய்மான, வீக்கம் என பல தொந்தரவுகள் தோன்றும். அஜீரணம், சீரற்ற உணவு உட்பட பல காரணங்களால் கெட்ட நீர் வெளியேறாமல் உடலில் தேங்கும். இவை இரத்தத்தை அசுத்தமாகுவதும், சிறுநீரகத்தில் தொந்தரவுகளை ஏற்படவும் காரணமாகிறது. அதனால் உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை அதாவது கெட்ட நீரை வெளியேற்றுவது அவசியமானது.

சுத்தமான நீர்

முதலில் உடலில் கழிவுகள் அதுவும் சிறுநீரகம், பித்தப்பையில் கழிவுகள் தேங்குவதை தடுக்கவும் உடலில் இருக்கும் கெட்ட நீரை வெளியேற்றவும் சுத்தமான குடிநீரை குறையில்லாமல் தேவைக்கேற்ப குடிக்க வேண்டும். இதனுடன் ஏதேனும் ஒரு மூலிகை, சீரகம், சோம்பு போன்ற வீட்டிலிருக்கும் பொருட்களையும் சேர்த்து நீர் பருகலாம். காலையில் முதல் வேளையாக தேவைக்கேற்ப மண்பானை நீர் அருந்த உடல் கழிவுகள் வெளியேறும்.

மிகு வியர்வை குணமாக

காக்கிரட்டான் இலைசாறு, இஞ்சி சாறு கலந்து குடிக்க நல்ல ஒரு பலன் கிடைக்கும்.

துர் நீர் கழிய

உடலில் தேவையில்லாத நீர் அதிகமாக இருக்க அதனால் மற்ற சில பிரச்சனைகளும் ஏற்படும். இதனை சீராக்க நீர்முள்ளி விதை, நெருஞ்சில், வெள்ளரி விதை ஆகியவற்றை இடித்து கசாயம் செய்து பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க வெளியேறும்.

வாத நீர் வெளியேற / குத்தல் வலி குணமாக

வாதம் சார்ந்த பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு ஆங்காங்கே உடலில் வீக்கங்கள் வருவதை பார்க்க முடியும். இந்த வீக்கங்களில் வலி ஏற்படுத்தக் கூடியதாகவும், உடல் பாகங்களை அசைக்க முடியாத அளவு வலியையும் ஏற்படுத்தும். இதனை குணமாக்க விழுதி இலை, பூண்டு, மிளகு, சீரகம், விளக்கெண்ணெயில் தாளித்து ரசம் செய்து சாப்பிட தீரும்.

இவை மட்டுமல்லாமல் நெருஞ்சில், மூக்கிரட்டை, சோம்பு, சாம்பல் பூசணி போன்றவற்றையும் எடுத்துக் கொள்வதால் உடலில் தேங்கியிருக்கும் கெட்ட நீர் வெளியேறும்.

அதிக சர்க்கரை உணவுகள், உப்பு, காரம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது உடல் கழிவுகள் தேங்குவதை தடுக்கும். அதிகமாக பழங்கள், காய்கறிகள் குறிப்பாக நீர்க் காய்கறிகள் உட்கொள்வது சிறந்த பலனைத் தரும்.

(5 votes)