விளக்கெண்ணை / ஆமணக்கு எண்ணெய் / Castor Oil

Ricinus communis; ஆமணக்கு

40-50 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் பெருவாரியான மக்கள் பயன்படுத்திய சமையல் எண்ணெய். உடலுக்கு ஆரோக்கியத்தையும் குளிர்ச்சியையும் அளிப்பதுடன் உடல் கழிவுகளை நீக்கவும் அதிகம் பயன்படும் எண்ணெய். வயிற்றுப்புண், வாய்ப்புண், உடல் வலி, கருப்பை தொந்தரவுகள், மலச்சிக்கலுக்கு சிறந்தது. ஆமணக்கு விதைகளில் இருந்து பெறப்படுகிற விளக்கெண்ணெய், எண்ணற்ற பயன்களைக் கொண்டுள்ளது.

கீழ் தட்டு மக்கள் அதிகம் இந்த ஆமணக்கு எண்ணெயை மட்டுமே பயன்படுத்தினர். ஆறு, வாய்க்கால், வயல்வெளி மற்றும் ஏரிக்கரைகளிலும் தன்னிச்சையாக வளர்ந்து கிடந்த சிற்றாமணக்கு செடிகளிலிருந்து விதைகளை சேகரித்து வீட்டு அடுப்பாங்கரையிலேயே காய்ச்சி எண்ணெய் தயாரித்து அதையே சமையலுக்கும், உடலுக்கும் சேர்த்து தைலமாக தயாரித்து பயன்படுத்தி வந்துள்ளனர். இதனை கொட்டமுத்து என்றும் கிராமங்களில் கூறுவதுண்டு. இரவு நேரங்களில் விளக்கெரிக்க இந்த எண்ணெயைத்தான் பயன்படுத்தினர். அதனால் தான் ஆமணக்கெண்ணெய் விளக்கெண்ணெய் என ஆனது. இந்த எண்ணெய் புகையின்றி எரியக்கூடியது. கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கக் கூடியது.

ஆமணக்கு விதைகளை இடித்து தண்ணீரில் கொதிக்க வைத்து எண்ணெய் பெறுவது சிறந்தது. இவ்வாறு செய்வதால் ஆமணக்கில் இருக்கும் நச்சுக்கள் நீங்கி சுத்தமான எண்ணெய்யை நாம் பெறமுடியும். இந்த முறையில் தயாராகும் எண்ணெயே மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதனை ஊற்றின எண்ணெய் என்றும் அழைப்பதுண்டு.

விளக்கெண்ணை பயன்படுத்தும் முறை

  • பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை ஆண்கள், பெண்கள், கர்ப்பிணி என அனைவரும் அன்றாடம் இரவு படுக்கும் முன் உச்சந்தலை, தொப்புள் மற்றும் உள்ளங்கால்களில் ஒரு சொட்டு விளகெண்ணையை வைக்க உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய்கள் அகலும்.
  • இந்த விளக்கெண்ணையில் கண்களுக்கு மை தயாரித்து பயன்படுத்த கண்பார்வை பளிச்சிடும். கண்சார்ந்த நோய்களுக்கு மிக சிறந்த மருந்து.
  • சட்னி, தோசைக்கும் பயன்படுத்தலாம்.
  • அன்றாடம் சமையலில் இடம்பெறும் அற்புத எண்ணெய்.
  • துவரம் பருப்பு வேகவைக்கும் போது அரை டீஸ்பூன் விளக்கெண்ணைய் சேர்த்து வேகவிட பருப்பிலிருக்கும் வாயுக்கள் அகலும்.
  • பருப்பு சேர்க்காத குழம்பு வகைகளை தாளிக்க அந்த காலத்தில் விளக்கெண்ணை சேர்த்து தயாரித்த தாளிப்பு வடாகம் பயன்படுத்தினர். உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும் மாமருந்தாக இருந்தது.
  • அசைவ சமையலுக்கு மசாலா வதக்க விளக்கெண்ணெய் உபயோகித்தால் சுவையும் மணமும் சிறக்கும்.
  • கருப்பை கோளாறுகளை நீக்கும் எண்ணெய். மாதவிடாய் சமயங்களில் அடிவயிற்றில் தேய்க்க வலிநீங்கும். உடல் சூடு குறையும்.
  • மூல நோய் உள்ளவர்கள் இந்த விளக்கெண்ணையை குளியல் எண்ணெய்யாகவும் நல்லெண்ணையுடன் கலந்து பயன்படுத்தலாம். அவ்வபொழுது இந்த எண்ணெயில் உச்சந்தலை முதல் உள்ளங்கால்கள் வரை தேய்த்து குளிக்கலாம். அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும். கவனம் தேவை.
  • வருடம் இரண்டு முறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி விளக்கெண்ணையை பருகி சுகபேதி மேற்கொள்ள ஜீரண மண்டலத்தில் ஏற்படும் நோய்கள், இரத்தத்தில் ஏற்படும் நோய்கள், சருமத்தில் ஏற்படும் நோய்கள் அகலும்.
  • வருடத்துக்கு நாப்பது நாட்கள் தினமும் இரவு உணவுக்கு ஒரு மணி நேரத்துக்குப் பின் 5 சொட்டுகள் வெந்நீரில் கலந்து மிதமான சூட்டுடன் பருகி வருவதன் மூலம் கீழ்க்காணும் நன்மைகள் கிடைக்கும்.

விளக்கெண்ணை பயன்கள்

  • உடலுக்கு குளிர்ச்சி தரும்.
  • மலச்சிக்கல் தீரும்.
  • இரத்தத்தில் ஏற்படும் நோய்களுக்கு சிறந்தது.
  • உடல் வலிக்கு சிறந்தது.
  • கருப்பை தொந்தரவுகளை நீக்கும்.
  • மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் அடிவாயிற்று வலியை நீக்கும்.
  • மூல நோய்க்கு சிறந்த மருந்து.
  • வயிறு சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.
  • வாயுத்தொல்லை நீங்கும்.
  • வயிற்றுப் புண் நீங்கும்.

  • வயிற்றில் உள்ள கசடுகள் நீங்கும்.
  • வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.
  • மிருதுவாக மசாஜ் செய்து கொள்ள முகச் சுருக்கம் மறையும்.
  • கரும்புள்ளிகள் மறையும்.
  • கண்களை சுற்றியுள்ள கருவளையம் மறையும்.
  • தலைமுடி, கண் முடி, புருவம் அடர்ந்து வளரும்.
  • கை கால், முட்டி வலி மற்றும் வயிற்று வலிகளுக்கு சிறந்த நிவாரணி.
  • இரவில் படுக்கும் போது புருவத்தில் முகத்தில் தேய்த்துக் கொள்ளலாம்.
(12 votes)