வெண்பூசணி – பல நோய்களுக்கு சிறந்த மருந்து

பற்று கம்பிகளை கொண்டு படரும் ஒரு கொடி வகை இந்த வெண்பூசணி கொடிகள். சாதாரணமாக கிராமங்களில் அனைத்து இடங்களிலும் மேல் கொடிபோல படர்ந்து இருக்கக்கூடியது. தனி இலைகள் மாற்றிலையடுக்கத்தில் காணப்படும். உள்ளங்கை போன்ற பிரிவு உடையது. தனி மலர்கள் இலைக் கோணங்களில் தோன்றும். மலர்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடியது.

வெண்பூசணி காய்கள் பெரிதாக நீள்வட்ட வடிவமாகவும் மேல் தோல் பச்சையாகவும் சாம்பல் பூசிய வாறும் இருக்கக்கூடியது. காய்கள் உட்பக்கம் வெள்ளை நிறத்துடன் சதைப்பற்றுடன் இருக்கும்.
தடியங்காய், சாம்பல் பூசணி, பூசணி, கல்யாண பூசணி, பெரும் பூசணி என பல பெயர்களைக் கொண்டு இருக்கக்கூடியது. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு முறையில் இதனை அழைப்பதுண்டு.

வெண்பூசணியின் நன்மைகள்

இதன் விதையும் காயும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. இனிப்பு சுவையை கொண்டிருக்கக்கூடியது. உடலில் ரத்தத்தை விருத்தி செய்யவும், உடலுக்கு நல்ல ஒரு பலத்தை கொடுக்கவும், சிறுநீரைப் பெருக்கக்கூடிய ஆற்றலும் நிறைந்தது. இதில் கொழுப்பு சத்து நிறைந்த எண்ணெய் சத்துக்கள் அதிகம் உள்ளது. அது மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான பலவிதமான சத்துக்களையும் கொண்டுள்ளது.

ரத்தத்தை சுத்திகரிக்கவும், உள்காய்ச்சல், வெள்ளை, வெட்டை, நீரிழிவு, பித்தத்தால் ஏற்படும் ஜுரம், மனக்கலக்கம் போன்ற நோய்களுக்கு சிறந்த ஒரு மருந்து. மலச்சிக்கலை சீராக்கக் கூடியது. உடலில் தோன்றும் பலவிதமான நோய்களுக்கும், செல்களில் வரக்கூடிய பல விதமான பிரச்சனைகளுக்கும் சிறந்த ஒரு மருந்து. உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக்களை நார்ச்சத்துக்களை அளிக்கக் கூடிய ஒரு அற்புதமான காய். ரத்த வாந்தி, நஞ்சுகள், புண்கள், தட்டைப் புழுக்கள் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணத்தை அளிக்கக்கூடியது.

வெண்பூசணி உணவு

  • அன்றாடம் ஒரு 50 கிராம் அளவிற்கு பூசணியை தோல் சீவி அப்படியே உண்பதால் உடலில் ஏற்படும் மலச்சிக்கல், மூலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்லது. மலச்சிக்கல் மறையும், மூல நோய்க்கு மிக சிறந்த மருந்து.
  • பூசணியைக் கொண்டு பல விதங்களில் பூசணி ஜூஸ் செய்தும் அன்றாடம் பருகலாம். பூசணி வெள்ளரி ஜூஸ், வெண்பூசணி ஜூஸ், பூசணி ஜூஸ்.

வெண்பூசணியை எவ்வாறு உண்பது

  • வெண்பூசணி சாறு எடுத்து தினமும் அருந்தி வருவதால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கக் கூடியதாகவும் ரத்த வாந்தி, வெள்ளை, வெட்டை, நீர் எரிச்சல், இளைப்பு நோய்களுக்கு சிறந்த மருந்தாகவும் இருக்கும்.
  • உடலில் தேங்கியிருக்கும் கெட்ட நீரை வெளியேற்றும்.
  • வெண்பூசணி அடிக்கடி பச்சையாக உண்டு வர பல நோய்கள் மறையும். மேலும் உடல் பலம் பெறும். உடலும் பருக்கும். புற்றுநோய்க்கு கூட மிகச்சிறந்த மருந்தாக இது உள்ளது.
  • வெண் பூசணி விதையை அரைத்து வெறும் வயிற்றில் கொடுத்து மூன்று மணி நேரத்தில் விளக்கெண்ணை கொடுக்க தட்டைப் புழுக்கள் வெளியேறும்.
  • வெண்பூசணி பழத்தை வேக வைத்து நன்கு மசித்து அதனை புண் உள்ள இடத்தில் கட்டி வர விரைவில் புண் மறையும்.
  • வெண்பூசணியே சிறிய துளையிட்டு (பொதுவாக திருஷ்டிக்கு செய்யப்படுவது போல் துளையிட்டு) அதில் பத்து பதினைந்து செம்பருத்திப் பூக்களை வைத்து மூடி விட வேண்டும். ஒரு நாள் கழித்து அதிலிருந்து வடியும் நீரை எடுத்து அத்துடன் இனிப்பு சேர்த்து 30 மில்லி வீதம் தினமும் 2 வேளை பருகி வர வெட்டை, வெள்ளை, நீர் எரிச்சல், அலர்ஜி, சொட்டு மூத்திரம், சிறுநீர் குழாய் ரணங்கள் மறையும். உடல் சூடு நீங்கி உடல் குளிர்ச்சியடையும்.
(8 votes)