மூல நோய்க்கு சிறந்த கருணைப் பொடி

பொடிகளில் பல வகைகள் உள்ளது, அவற்றில் நீரிழிவிற்கு பயன்படும் பாகற்காய் பொடி, எள்ளுப் பொடி, புதினா கீரை பொடி, கருவேப்பிலை பொடி, கத்திரிக்காய் பொடி, அருகம்புல் பொடி, முருங்கை கீரை சாத பொடி, கரிசலாங்கண்ணி பொடி ஜூஸ், நெல்லிக்காய் பொடி, தனியா இட்லி பொடி, கருப்பு உளுந்து பொடி என பல பொடிவகைகளை பார்த்தோம். இந்த பொடிகளை சுடு சாதத்தில் கலந்தும் உண்ணலாம், இட்லி தோசை போன்ற பலகாரங்களுடனும் சேர்த்து உண்ணலாம் அல்லது ஜூஸ் செய்தும் உண்ணலாம்.

அந்த வரிசையில் மூல நோய்க்கு சிறந்த கிழங்கான கருணை கிழங்கைக் கொண்டு எவ்வாறு பொடி செய்வது என்பதைப் பார்போம். இந்த கருணை பொடியை மிக எளிதாக வீட்டில் தயார் செய்து வைத்துக் கொண்டு அன்றாடம் சுடு சாதத்தில் சேர்த்து உண்ண சிறந்த பலனை பெறலாம். மூல நோய்க்கு மிக சிறந்த மருந்தாகவும் இந்த பொடி இருக்கும். கிழங்கு கிடைக்கும் காலத்தில் இவ்வாறு தயாரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவதால் வருடம் முழுவதும் கருணைக் கிழங்கின் பயனைப் பெறலாம். மேலும் பல பயன்களைக் கொண்ட கருணைக் கிழங்கின் நன்மைகளையும் தெரிந்துக் கொள்வோம்.

மூல நோய் மட்டுமல்லாமல் மலச்சிக்கல் உள்ளவர்களும் இதனைப் பயன்படுத்த சிறந்த பலனை பெறலாம். கிழங்கு வகைகளிலேயே உடலுக்கு நன்மையை அளிக்கும் ஒரே கிழங்கு என்றால் அது கருணைக் கிழங்கு தான். அதனால் இந்த கருணைக் கிழங்கு பொடியை அனைவரும் பயன்படுத்த உடல் கழிவுகள் வெளியேறும், உடல் பலப்படும். இதனை சுத்தமான முறையில் நல்ல கிழங்கைக் கொண்டு வீட்டிலேயே செய்து பயன்படுத்துவது நல்ல பலனை அளிக்கும்.

Piles Treatment, karunaik-kilangu-powder, karunai kilangu piles powder, piles home remedy;

தேவையான பொருட்கள்

  • கருணைக் கிழங்கு – பெரிதான நான்கைந்து கிழங்கு
  • மிளகு – 2 ஸ்பூன்
  • தனியா – 4 ஸ்பூன்
  • கல் உப்பு
  • நல்லெண்ணெய் – 4 கரண்டி

செய்முறை

  • முதலில் கருணைக் கிழங்கை நன்கு சுத்தப்படுத்தி வேகவைத்துக் கொள்ளவேண்டும்.
  • வெந்த பின் தோல் நீக்கி சிறிது சிறிதாக வட்ட வடிவில் நறுக்கிக்கொள்ள வேண்டும்.
  • இதனை நல்ல உச்சி வெயிலில் உலரவைக்க வேண்டும். நீர்த்தன்மை இல்லாத அளவு உலர்த்த வேண்டும்.
  • பின் ஒரு வாணலியில் மிளகு, தனியா, உப்பு ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவேண்டும்.
  • வறுத்தவற்றை ஒரு தட்டில் எடுத்து விட்டு அந்த வாணலியில் நல்லெண்ணெய் விட்டு நன்கு உலர்ந்த கருணையை சிவக்க வறுக்கவும்.
  • இவை அனைத்தும் நன்கு ஆறியதும் மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
  • கருணைக் கிழங்கு பொடி தயார். இதனை சுடு சாதத்தில் நெய்சேர்த்து உண்ணலாம்.
  • கருணை லேகியம் சாப்பிட்ட பலன் கிடைக்கும்.

மூல நோய் தொந்தரவு உள்ளவர்கள் மிளகைப் பயன்படுத்தவும், மற்றவர்கள் மிளகாய் வற்றை சேர்த்து தயாரித்துப் பயன்படுத்தலாம்.

5 from 1 vote

கருணைக் கிழங்கு பொடி

மூல நோய் மட்டுமல்லாமல் மலச்சிக்கல் உள்ளவர்களும் இந்த கருணைக் கிழங்கு பொடியை பயன்படுத்த சிறந்த பலனை பெறலாம். கிழங்கு வகைகளிலேயே உடலுக்கு நன்மையை அளிக்கும் ஒரே கிழங்கு என்றால் அது கருணைக் கிழங்கு தான். அதனால் இந்த கருணைக் கிழங்கு பொடியை அனைவரும் பயன்படுத்த உடல் கழிவுகள் வெளியேறும், உடல் பலப்படும்.
ஆயத்த நேரம் : – 3 days
சமைக்கும் நேரம் : – 15 minutes
மொத்த நேரம் : – 3 days 15 hours

தேவையான பொருட்கள்

  • பெரிதான நான்கைந்து கிழங்கு கருணைக் கிழங்கு
  • 2 ஸ்பூன் மிளகு
  • 4 ஸ்பூன் தனியா
  • கல் உப்பு
  • 4 கரண்டி நல்லெண்ணெய்

செய்முறை

  • முதலில் கருணைக் கிழங்கை நன்கு சுத்தப்படுத்தி வேகவைத்துக் கொள்ளவேண்டும்.
  • வெந்த பின் தோல் நீக்கி சிறிது சிறிதாக வட்ட வடிவில் நறுக்கிக்கொள்ள வேண்டும்.
  • இதனை நல்ல உச்சி வெயிலில் உலரவைக்க வேண்டும். நீர்த்தன்மை இல்லாத அளவு உலர்த்த வேண்டும்.
  • பின் ஒரு வாணலியில் மிளகு, தனியா, உப்பு ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவேண்டும்.
  • வறுத்தவற்றை ஒரு தட்டில் எடுத்து விட்டு அந்த வாணலியில் நல்லெண்ணெய் விட்டு நன்கு உலர்ந்த கருணையை சிவக்க வறுக்கவும்.
  • இவை அனைத்தும் நன்கு ஆறியதும் மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
  • கருணைக் கிழங்கு பொடி தயார். இதனை சுடு சாதத்தில் நெய்சேர்த்து உண்ணலாம்.
  • கருணை லேகியம் சாப்பிட்ட பலன் கிடைக்கும்.
(1 vote)

2 thoughts on “மூல நோய்க்கு சிறந்த கருணைப் பொடி

  1. Pandian

    5 stars
    There is some confusion among our people regarding Karunaik Kizhangu… In some places Senai Kizhangu also called Karunai – ie . SattikKarunai. This small Karunai is called Pidi Karunai. Clear Photographs will help to distinguish.

    1. admin Post author

      Added Photos. In some place its called as pidi karunai. This is the only tuber which is good to health and also for piles. Thnk u

Comments are closed.