முருங்கை கீரை சாத பொடி / Murungai Keerai Podi

அதிக சத்துக்களை கொண்ட கீரை வகைகளில் மிக முக்கியமான கீரை முருங்கை கீரை. அன்றாடம் அளவோடு இதனை உண்பதால் எந்த தொற்று நோய், தொற்றாத நோய்களும் நம்மை தாக்காது. ஏதேனும் உடல் நல பாதிப்புகள் இருந்தால் விரைவில் அதிலிருந்து வெளிவர உதவக்கூடியதாகவும் இருக்கும். ஆனால் அன்றாடம் இதனை கீரையாக செய்து சாப்பிடமுடியாது. அதனால் எளிதாக இதனை பொடியாக தயாரித்துக் கொண்டு சாதத்தோடு முருங்கைக் கீரை சாதப் பொடியாக தயாரித்து வைத்துகொண்டு அன்றாடம் சுடு சாதத்தில் கலந்து உண்ண எளிதில் சத்துக்களை பெறலாம். இவ்வாறு தயாரித்துக் கொடுக்க குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.

முருங்கைக் கீரையின் பயன்கள் நன்மைகள்

https://www.youtube.com/watch?v=3tUCqp06EF0&t=2s

தேவையான பொருட்கள்

  • 2 கப் முருங்கைக் கீரை
  • 1 ஸ்பூன் கருப்பு எள்
  • 2 ஸ்பூன் துவரம் பருப்பு
  • 2 ஸ்பூன் கருப்பு உளுந்து
  • ½ ஸ்பூன் மிளகு
  • ½ ஸ்பூன் சீரகம்

  • சிறிது பெருங்காயம்
  • 4 வரமிளகாய்
  • சிறு துண்டு கொடம்புளி
  • உப்பு
  • கடுகு
  • நல்லெண்ணெய்

செய்முறை

  • முதலில் முருங்கைக் கீரையை நன்கு அலசி சுத்தம் செய்து ஆய்ந்து நிழல் காய்ச்சலாக இரண்டு மூன்று நாட்கள் காயவைத்துக் கொள்ள வேண்டும்.
  • இரண்டு மூன்று நாட்களில் சீதோஷ்ண நிலையை பொருத்து நன்கு சலசலவென சத்தம் வரும் வரை காய வைத்துக் கொள்ள வேண்டும்.
  • முருங்கைக்கீரை நன்கு காய்ந்த பின் ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு துவரம்பருப்பு சேர்த்து வறுக்கவும்.
  • துவரம் பருப்பு நன்கு வாசனை வந்த பின் நிறம் மாறிய பின் அதனுடன் கருப்பு உளுந்து சேர்த்து வறுக்கவும்.
  • கருப்பு உளுந்து நன்கு வாசனை வந்த பின் அதனுடன் மிளகு சீரகத்தை சேர்க்கவும்.
  • அதனுடன் பெருங்காயம் சேர்த்து லேசாக வறுத்து கொடம்புளி, உப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  • இவற்றை ஆறவைத்து அதனுடன் காயவைத்த முருங்கை கீரையையும் சேர்த்து அரைக்கவும்.
  • இறுதியில் சிறிது எள்ளலை வறுத்து அரைத்தவற்றுடன்சேர்த்து ஒரு சுற்று அரைத்து எடுக்கவும்.
  • பின் ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து கடுகு தாளித்து அரைத்த முருங்கைக் கீரை பொடியுடன் சேர்க்கவும்.
  • நல்ல மணமான நல்ல சுவையான முருங்கைக் கீரை சாதப் பொடி தயார். நெய் அல்லது நல்லெண்ணையுடன் அன்றாடம் சுடு சாதத்தில் சேர்த்து உண்ணலாம்.

முருங்கை கீரை சாத பொடி



முருங்கைக் கீரை சாதப்பொடியாக தயாரித்து வைத்துகொண்டு அன்றாடம் சுடு சாதத்தில் கலந்து உண்ண எளிதில் சத்துக்களை பெறலாம். 


⏲️ ஆயத்த நேரம்
10 mins

⏲️ சமைக்கும் நேரம்
10 mins

🍴 பரிமாறும் அளவு
20

🍲 உணவு
பொடி


தேவையான பொருட்கள்
  • 2 கப் முருங்கைக் கீரை
  • 1 ஸ்பூன் கருப்பு எள்
  • 2 ஸ்பூன் துவரம் பருப்பு
  • 2 ஸ்பூன் கருப்பு உளுந்து
  • ½ ஸ்பூன் மிளகு
  • ½ ஸ்பூன் சீரகம்
  • சிறிது பெருங்காயம்
  • 4 வரமிளகாய்
  • சிறு துண்டு கொடம்புளி
  • உப்பு
  • கடுகு
  • நல்லெண்ணெய்
செய்முறை
  1. முதலில் முருங்கைக் கீரையை நன்கு அலசி சுத்தம் செய்து ஆய்ந்து நிழல் காய்ச்சலாக இரண்டு மூன்று நாட்கள் காயவைத்துக் கொள்ள வேண்டும்.
  2. இரண்டு மூன்று நாட்களில் சீதோஷ்ண நிலையை பொருத்து நன்கு சலசலவென சத்தம் வரும் வரை காய வைத்துக் கொள்ள வேண்டும்.
  3. முருங்கைக்கீரை நன்கு காய்ந்த பின் ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு துவரம்பருப்பு சேர்த்து வறுக்கவும்.
  4. துவரம் பருப்பு நன்கு வாசனை வந்த பின் நிறம் மாறிய பின் அதனுடன் கருப்பு உளுந்து சேர்த்து வறுக்கவும்.
  5. கருப்பு உளுந்து நன்கு வாசனை வந்த பின் அதனுடன் மிளகு சீரகத்தை சேர்க்கவும்.
  6. அதனுடன் பெருங்காயம் சேர்த்து லேசாக வறுத்து கொடம்புளி, உப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  7. இவற்றை ஆறவைத்து அதனுடன் காயவைத்த முருங்கை கீரையையும் சேர்த்து அரைக்கவும்.
  8. இறுதியில் சிறிது எள்ளலை வறுத்து அரைத்தவற்றுடன்சேர்த்து ஒரு சுற்று அரைத்து எடுக்கவும்.
  9. பின் ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து கடுகு தாளித்து அரைத்த முருங்கைக் கீரை பொடியுடன் சேர்க்கவும்.
  10. நல்ல மணமான நல்ல சுவையான முருங்கைக் கீரை சாதப் பொடி தயார். நெய் அல்லது நல்லெண்ணையுடன் அன்றாடம் சுடு சாதத்தில் சேர்த்து உண்ணலாம்.

https://www.youtube.com/watch?v=Bnfb4lguM8E