கரிசலாங்கண்ணி பொடி ஜூஸ் / Karisalankanni Recipe

நுரையீரல், கல்லீரல், கண்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் சிறந்த பானம். பித்தம் அகலும். சளியை அகற்றும். கண்களில் ஏற்படும் தொந்தரவுகளை அகற்றும். காலையில் ஒரு நேர உணவாக சாப்பிட ஏற்றது. பிராண சக்தியை அளிக்கும் அற்புத ஜூஸ். உடலுக்கு பலத்தையும், தெம்பையும் அளிக்கும். சிறந்த மலமிளக்கியாகவும் இருக்கும்.

உடலில் ஏற்படும் பல பிணிகளை அகற்றும் அற்புத சாறு. எளிதாகவும் தயாரிக்கக் கூடியது. நகரங்களில் இருப்பவர்களும் எளிமையாக பச்சை கீரைகளை தேடாமல் பொடிகளையே பயன்படுத்தி மிக எளிதில் இந்தஜூஸ் தயாரித்து பருகலாம். உடல் கழிவுகளையும் எளிமையாக வெளியேற்றும் அற்புத பானம். கெட்ட கொழுப்பை அகற்றும். நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.

தேவையான பொருட்கள்

  • 2 ஸ்பூன் கரிசலாங்கண்ணிப் பொடி
  • ½ ஸ்பூன் தூதுவளைத் தூள்
  • ¼ ஸ்பூன் முசுமுசுக்கைத் தூள்
  • 2 சிட்டிகை சீரகத் தூள்
  • 4 ஸ்பூன் வெல்லம்
  • 1 கப் தேங்காய்ப் பால்

செய்முறை

  • நாட்டு மருந்து கடைகளில் கரிசலாங்கண்ணி, தூதுவளை, முசுமுசுக்கை பொடிகள் கிடைக்கும் அல்லது வீட்டிலேயே பச்சையாக கிடைத்தால் அதனையும் பயன்படுத்தலாம். அதிகம் கிடைக்கும் பொழுது அவற்றை உலர்த்தி பொடித்தும் வைத்துக் கொள்ளலாம்.

  • கரிசலாங்கண்ணி பொடி, தூதுவளை பொடி, முசுமுசுக்கை பொடிகளையும் அதனுடன் சீரகத் தூள், வெல்லம் கலந்து ஒன்றாக சிறிது தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊறவைக்கவேண்டும்.
  • சிறிது நேரம் கழித்து இவற்றை வடிகட்டி தேங்காய்ப் பாலுடன் கலந்து பருகலாம்.
  • நுரையீரல், கல்லீரல், கண்களுக்கு சிறந்தது.
5 from 1 vote

கரிசலாங்கண்ணி ஜூஸ்

நுரையீரல், கல்லீரல், கண்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் சிறந்த பானம். பித்தம் அகலும். சளியை அகற்றும். கண்களில் ஏற்படும் தொந்தரவுகளை அகற்றும். காலையில் ஒரு நேர உணவாக சாப்பிட ஏற்றது.
ஆயத்த நேரம் : – 20 minutes
மொத்த நேரம் : – 20 minutes

தேவையான பொருட்கள்

  • 2 ஸ்பூன் கரிசலாங்கண்ணிப் பொடி
  • ½ ஸ்பூன் தூதுவளைத் தூள்
  • ¼ ஸ்பூன் முசுமுசுக்கைத் தூள்
  • 2 சிட்டிகை சீரகத் தூள்
  • 4 ஸ்பூன் வெல்லம்
  • 1 கப் தேங்காய்ப் பால்

செய்முறை

  • நாட்டு மருந்து கடைகளில் கரிசலாங்கண்ணி, தூதுவளை, முசுமுசுக்கை பொடிகள் கிடைக்கும் அல்லது வீட்டிலேயே பச்சையாக கிடைத்தால் அதனையும் பயன்படுத்தலாம். அதிகம் கிடைக்கும் பொழுது அவற்றை உலர்த்தி பொடித்தும் வைத்துக் கொள்ளலாம்.
  • கரிசலாங்கண்ணி பொடி, தூதுவளை பொடி, முசுமுசுக்கை பொடிகளையும் அதனுடன் சீரகத் தூள், வெல்லம் கலந்து ஒன்றாக சிறிது தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊறவைக்கவேண்டும்.
  • சிறிது நேரம் கழித்து இவற்றை வடிகட்டி தேங்காய்ப் பாலுடன் கலந்து பருகலாம்.
  • நுரையீரல், கல்லீரல், கண்களுக்கு சிறந்தது.

1 thought on “கரிசலாங்கண்ணி பொடி ஜூஸ் / Karisalankanni Recipe

  1. Amala

    5 stars
    Easy and Healthy to make with powders. God Bless

Comments are closed.