புதினா கீரை பொடி

இரும்பு சத்துக்கள் உட்பட பல சத்துக்களைக் கொண்டிருக்கும் அற்புதமான கீரை புதினா கீரை. இரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. இருதயத்தை பாதுகாக்கும் அற்புத கீரை. மேலும் புதினாவின் பயன்கள், நன்மைகளை தெரிந்துக் கொள்ள இங்கு இணையவும். புதினாவை பொடியாக (புதினா கீரை பொடி) தயாரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

இந்த புதினா கீரையை அவ்வப்பொழுது உணவில் சேர்த்துக்கொள்ள உடல் நலத்திற்கு சிறந்தது. இந்த கீரையை பொடியாக தயாரித்துக் கொண்டு வைத்துக்கொண்டால் சுடு சாதத்துடனும், இட்லி, தோசைக்கும் சேர்த்து உண்ணலாம். உடலில் ஏற்படும் சத்துக் குறைபாடு என்ற தொந்தரவே வராது. வீட்டில் எளிதாக புதினாவை வளர்த்து பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.

தேவையான பொருட்கள்

  • ஒரு கட்டு புதினா கீரை
  • 4 மிளகாய் வற்றல்
  • சிறிது புளி
  • தேவையான அளவு உப்பு
  • நல்லெண்ணெய்

செய்முறை

  • முதலில் புதினாவை நன்கு ஆய்ந்து, சுத்தம் செய்து நிழலில் பரப்பி நன்கு காயவைத்துக் கொள்ள வேண்டும்.
  • நான்கைந்து நாட்களில் புதினா நன்கு காய்ந்துவிடும்.

  • சலசலவென்று சத்தம் வரும் வரை காயவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பின் மிளகாய், புளி, உப்பு ஆகியவற்றை லேசாக நல்லெண்ணையில் சிறிது வறுத்து எடுக்க வேண்டும்.

  • தேவைப்பட்டால் புதினாவையும் சிறிது நல்லெண்ணையில் வறுத்துக்கொள்ளலாம் அல்லது அப்படியே காய்ந்ததை பயன்படுத்தலாம்.
  • புதினாவை வறுக்காமல் அப்படியே நிழலில் காய்ந்த புதினாவை பயன்படுத்துவது கூடுதல் சத்துக்களை அதிலும் கூடுதல் உயிர் சத்துக்களை அளிக்கும்.

  • ஆறியவுடன் காய்ந்த புதினா, புளி, மிளகாய் வற்றல், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • புளி சேர்த்திருப்பதால் புதினா பொடியின் சுவை அபாரமாக இருக்கும்.

  • இந்த புதினா பொடியை நல்லெண்ணெய் விட்டு சுடு சாதத்தில் சாப்பிட சுவையாக இருக்கும்.
  • இட்லி, தோசை போன்ற பலகாரங்களுடனும் அற்புதமாக இருக்கும்.
  • இந்த புதினா பொடியில் சிறிது நீர் விட்டு கரைத்துக்கொண்டு அதில் கடுகு தாளித்து சட்னியாகவும் பரிமாறலாம். இட்லி தோசைக்கு இது அபாரமாக இருக்கும்.
  • இதனை சேர்த்து வத்த குழம்பும் தயாரித்தும் உண்ணலாம்.

புதினாக் கீரை பொடி



புதினா கீரையை பொடியாக தயாரித்துக் கொண்டு வைத்துக்கொண்டால் சுடு சாதத்துடனும், இட்லி, தோசைக்கும் சேர்த்து உண்ணலாம். உடலில் ஏற்படும் சத்துக் குறைபாடு என்ற தொந்தரவே வராது.



தேவையான பொருட்கள்
  • ஒரு கட்டு புதினா கீரை
  • 4 மிளகாய் வற்றல்
  • சிறிது புளி
  • தேவையான அளவு உப்பு
  • நல்லெண்ணெய்
செய்முறை
  1. முதலில் புதினாவை நன்கு ஆய்ந்து, சுத்தம் செய்து நிழலில் பரப்பி நன்கு காயவைத்துக் கொள்ள வேண்டும்.
  2. நான்கைந்து நாட்களில் புதினா நன்கு காய்ந்துவிடும்.
  3. சலசலவென்று சத்தம் வரும் வரை காயவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  4. பின் மிளகாய், புளி, உப்பு ஆகியவற்றை லேசாக நல்லெண்ணையில் சிறிது வறுத்து எடுக்க வேண்டும்.
  5. தேவைப்பட்டால் புதினாவையும் சிறிது நல்லெண்ணையில் வறுத்துக்கொள்ளலாம் அல்லது அப்படியே காய்ந்ததை பயன்படுத்தலாம்.
  6. புதினாவை வறுக்காமல் அப்படியே நிழலில் காய்ந்த புதினாவை பயன்படுத்துவது கூடுதல் சத்துக்களை அதிலும் கூடுதல் உயிர் சத்துக்களை அளிக்கும்.
  7. ஆறியவுடன் காய்ந்த புதினா, புளி, மிளகாய் வற்றல், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
  8. புளி சேர்த்திருப்பதால் புதினா பொடியின் சுவை அபாரமாக இருக்கும்.
  9. இந்த புதினா பொடியை நல்லெண்ணெய் விட்டு சுடு சாதத்தில் சாப்பிட சுவையாக இருக்கும்.
  10. இட்லி, தோசை போன்ற பலகாரங்களுடனும் அற்புதமாக இருக்கும்.
  11. இந்த புதினா பொடியில் சிறிது நீர் விட்டு கரைத்துக்கொண்டு அதில் கடுகு தாளித்து சட்னியாகவும் பரிமாறலாம். இட்லி தோசைக்கு இது அபாரமாக இருக்கும்.
  12. இதனை சேர்த்து வத்த குழம்பும் தயாரித்தும் உண்ணலாம்.