எள்ளுப் பொடி

வைத்தியத்திற்கு கொடுக்கும் காசை வாங்கி வாணிபனுக்கு கொடு‘ என்று ஒரு பழமொழி இருக்கிறது.

நல்லெண்ணெய் ஆட்டி விற்பனை செய்பவன் வாணிபன். நோய் தீர செலவழிப்பதை விட அதற்கு முன்னதாகவே நோய் வராமல் இருக்க நல்லெண்ணையை வாங்கி உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் அவ்வாறு சொன்னார்கள். நல்லெண்ணெயின் வித்து எள்ளு. எல்லாவற்றிற்கும் உகந்தது எள் என்று சொல்வார்கள். எள்ளுப் பொடி போட்டு சாதம் சாப்பிட்டால் விரைவில் ஜீரணமாகும். நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும், மூட்டுவலி, எலும்புகளில் ஏற்படும் தொந்தரவுகளுக்கு சிறந்தது. சுண்ணாம்பு சத்துக்கள் உட்பட பல தாதுச் சத்துக்களும் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பையும் சீராக உடலுக்கு அளிக்க அற்புதமான ஒன்று எள்ளு. ஜீரணத்தை அதிகரிக்கக் கூடியது.

தேவையான பொருட்கள்

  • கருப்பு எள் – 1/4 கப்
  • மிளகாய் வற்றல் – 10
  • தேங்காய்த் துருவல் – 2 ஸ்பூன்
  • உப்பு

செய்முறை

  • முதலில் எண்ணெயில் மிளகாய் வற்றலையும் தேங்காய்த் துருவலையும் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு வெறும் வாணலியில் எள்ளை மட்டும் போட்டு வறுக்கவும்.
  • எள் வெடித்ததும் இறக்கி காற்றாட பரப்பி விடவும்.
  • ஆறிய பிறகு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • சுவையான எள்ளு பொடி தயார்.

  • எள்ளு பொடியை சாதத்தில் போட்டு நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
  • மேலும் இந்த எள்ளு பொடியை சனிக்கிழமை தோறும் சாதத்தில் போட்டு இலையில் வைத்து சனீஸ்வரனை வணங்கி சமர்பித்து அதை காக்கைக்கும் வைக்க முன்னோர்களுக்கு அது சமர்ப்பணமாகும்.

எள்ளுப் பொடி

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும், மூட்டுவலி, எலும்புகளில் ஏற்படும் தொந்தரவுகளுக்கு சிறந்தது. சுண்ணாம்பு சத்துக்கள் உட்பட பல தாதுச் சத்துக்களும் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பையும் சீராக உடலுக்கு அளிக்க அற்புதமான ஒன்று எள்ளு. ஜீரணத்தை அதிகரிக்கக் கூடியது.
ஆயத்த நேரம் : – 10 minutes
மொத்த நேரம் : – 10 minutes

தேவையான பொருட்கள்

  • கருப்பு எள்
  • மிளகாய் வற்றல்
  • தேங்காய்த் துருவல்