கத்திரிக்காய் பொடி

திருமணமாகாத ஆண்களுக்கு அடிக்கடி வெளி உணவு சாப்பிடுவதால் உடல் நலக் குறைவும், உடலில் ஆரோக்கியக் கேடு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அவ்வாறு உணவிற்காக அடிக்கடி வெளியில் செல்பவர்களுக்கு ஒரு அற்புதமான வரபிரசாதம் இந்த கத்திரிக்காய் பொடி. அவர்கள் வெறும் சாதத்தை மட்டுமே வீட்டில் வைத்துக் கொண்டு குழம்பு பொரியல் என்று தனித்தனியாக செய்யாமல் காய்கறிகளை சேர்த்து காய் கத்திரிக்காயை சேர்த்து செய்யக்கூடிய இந்த பொடியை கூட ஒரு வேளை உணவிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தப் பொடியை ஒரு முறை தயாரித்து வைத்துக் கொண்டாலே போதும் பல நாட்களுக்கு எளிதாக உட்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் கத்தரிக்காய்
  • 10 மிளகாய் வற்றல்
  • ¼ கப் மல்லி
  • உப்பு
  • நல்லெண்ணெய்

செய்முறை

  • முதலில் கத்திரிக்காய்களை சுத்தம் செய்து நான்காக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின் கத்தரிக்காய்களை உப்பு போட்டு அவித்து வெயிலில் உலர்த்த வேண்டும்.
  • நான்கு நாட்களில் கத்திரிக்காய்கள் நன்கு காய்ந்து தயாராக இருக்கும்.
  • பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் காய்ந்த கத்தரிக்காய்களை வடகம் போல் இளம் சிவப்பு நிறம் வரும் வரை வேகவிட்டு எடுக்க வேண்டும்.
  • மிளகாய் வற்றல், மல்லி ஆகியவற்றையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

  • பின் இவை எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து மிக்சியில் அரைக்க வேண்டும்.
  • கத்திரிக்காய்களில் ஏற்கனவே உப்பு இருப்பதால் தேவைபட்டால் மட்டுமே அரைக்கும் பொழுது உப்பு சேர்க்க வேண்டும்.
  • நைஸாக அழைக்காமல் கத்தரிக்காய் சின்ன சின்ன துண்டுகளாக இருக்க நல்ல சுவையாக இருக்கும்.
  • அவ்வளவுதான் சுவையான கத்திரிக்காய் பொடி தயார்.
  • இதை அப்படியே சாதத்தில் போட்டு நெய்விட்டு பிசைந்து சாப்பிடலாம், நல்ல சுவையாக இருக்கும். நல்லெண்ணெய் விட்டும் சாப்பிடலாம்.

கத்தரிக்காய் பொடி

உணவிற்காக அடிக்கடி வெளியில் செல்பவர்களுக்கு ஒரு அற்புதமான வரபிரசாதம் இந்த கத்திரிக்காய் பொடி.