Welcome to HealthnOrganicsTamil !!!

சிறுதானியங்கள் – பயன்கள், நன்மைகள்

சத்து நிறைந்த புன்செய் தானியங்கள்

ஆறு மாத குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை யாவரும் உண்ண உகந்த தானியங்கள் நம் சிறுதானியங்கள். இத்தானியங்களில் இரும்பு, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் போன்ற தனிமங்கள் மிகுந்திருக்கின்றன.

இந்த சின்ன தானியங்களால் (சிறுதானியங்களால்) ஆன உணவு குளுகோஸை சிறிது, சிறிதாக நீண்ட நேரத்துக்கு வெளியிடுவதால் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. 

க்ளுட்டன் எனும் புரோட்டீன் மாவுச்சத்து இத்தானியங்களில் அறவே இல்லை.

இத்தானியங்கள் குருதியில் உள்ள ட்ரைகிளிசிரைட்ஸ் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

ஆகா களைப்பு, அசிடிட்டி, உடல்பருமன், புற்று நோய், வயிற்றுப்போக்கு போன்றவை புன்செய் தானிய உணவை உண்ணும்போது ஏற்படுவதில்லை.  

வரகு / வரகரிசி / Kodo Millet

Organic Foods, Diabetic Food, Weight Loss Diet foods, kuruntaniyam, Healthy Millets, Millet Foods

சிறுதானியங்களில் முக்கியமானது வரகு. இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உடகொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். வரகில் மாவுச்சத்தும் குறைவாக காணப்படுவதால், இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.

இது பைட்டிக் அமிலம் குறைந்தும் நார்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் பி வைட்டமின்கள் கொண்டதாகவும் உள்ளது. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும். மேலும்…

சாமை / சாமை அரிசி / Little Millet

Organic Foods, Diabetic Food, Weight Loss Diet foods, kuruntaniyam, Healthy Millets, Millet Foods

சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடாக இந்தியா கருதப்படுகிறது. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்குவகிப்பது நார்சத்து. நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை.

இதனை உணவாக உட்கொள்ளும் போது நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். சாமையில் இரும்பு சத்து அளவிட்டால் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் அதிகம். இது இரத்தசோகை வருவதற்கான வாய்பினைக் குறைக்கிறது. இளம் பெண்களின் முக்கிய உணவாக சாமை அமைவது அவசியமான ஒன்று. மேலும்…

தினை / தினை அரிசி / Foxtail Millet

தொன்றுதொட்டு, மக்களால் அதிகளவில் விரும்பி, வரவேற்கப்பட்ட பலவகையான மூலிகைகள், தானியங்கள் நாட்கள் செல்லச் செல்ல தெய்வீக முக்கியத்துவமும் புனிதத்துவமும் பெற்றதாக வரலாறு கூறுகின்றது. அவ்வாறு புனிதத்துவம் பெற்ற தானியங்களில் ஒன்று தான் தினை.

இனிப்புச் சுவை கொண்ட இந்த தானியம் உடலை வலுவாக்கும். வாயு நோயையும், கபத்தையும் போக்கும். பசியை உண்டாக்கும் குணம் கொண்டது. இதனை சாதமாகவும், களியாகவும், கஞ்சியாகவும் செய்து உண்ணலாம். மாவாக அரைத்து சூடான பால் சேர்த்து, உடல் குளிர்ச்சியடைந்தவர்களுக்குக் கொடுக்க நன்மைப்பயக்கும். தேனும் தினை மாவும் யாவரும் அறிந்த சிறந்த உணவு. மேலும்…

குதிரைவாலி / குதிரைவாலி அரிசி / Barnyard Millet

குதிரையின் வாலைபோன்ற கதிர்களால் குதிரைவாலி ஆனது இந்த தானியம். மிருதுவான இத்தானியத்தில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளது.

உடலை சீராக வைக்க உதவுகிறது. சர்க்கரை அளவினை குறைக்க வல்லது. ஆண்டி ஆக்ஸிடன்டாக வேலை செய்கிறது. மேலும்…

பனிவரகு

Panivaragu-Millet-Proso-Millet in Tamil, Millet

புரதச்சத்து நிறைந்த தானியம் பனிவரகு. இவ்வாறான உணவுகளை விதவிதமாக பனிவரகில் சமைத்து உண்பதால் அஜீரணம், வயிறு உப்புசம், உடல் பருமன் என பல நோய்கள் மறையும். சிறந்த நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்ககூடியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உணக்கூடியது. மேலும்…

கம்பு / நாட்டுக் கம்பு / Bajra / Pearl Millet

வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு என்றும் இருந்து வந்துள்ளது. அதோடு அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும்.

இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும். அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். மேலும்…

கேழ்வரகு / ராகி / கேப்பை / Finger Millet

கேழ்வரகு மிகவும் சத்தான தானியங்களுள் ஒன்றாகும். இது உடலை ஆரோக்கியமாகவும் உடல் எடையை கட்டுப்பாட்டிலும் பராமரிக்க உதவும். கேழ்வரகு ஈடு இணையில்லா சுண்ணாம்பு (கால்சியம்) சத்தை பெற்றுள்ளது. கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.

கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, ரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது. கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளலாம். மேலும்…

சிறு சோளம்

புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், தயாமின், நயாசின், தாது உப்புக்கள் மற்றும் நார்ச்சத்து கொண்டுள்ள இந்த சிறு சோளம் உடலில் உள்ள நீரினைப்பெருக்கும் சக்தியைக்கொண்டுள்ளது. இவ்வாறு நீரினை பெருக்கும் சக்தியைக்கொண்டுள்ள இந்த வெள்ளை இளவரசி உடலில் உள்ள நச்சுக்களையும், கற்களையும் கரைக்கக்கூடிய தன்மையை கொண்டிருக்கிறாள்.

சோள உணவை வாரத்திற்கு 2-3 நாட்கள் மற்ற சிறு தானியங்களுடன் அல்லது தனியாக எடுத்துக்கொள்ள – உடலில் உள்ள சிறுநீரக மற்றும் பித்தப்பை கற்கள் சீராக கரைய தொடங்கும். இந்த கற்களினால் ஏற்படும் வலியும் சில நாட்களிலேயே குறைய ஆரம்பிக்கும். நாற்பது வயதை தாண்டியவுடன் அழையா விருந்தாளியாக வரும் கற்கள், தொந்தரவுகள் எளிதில் மறையும். மேலும்…

சிந்தனை துளிகள் :

புத்து கண்டு கிணறு வெட்டு.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!