Kodo Millet Benefits Varagu Rice

வரகு அரிசி பயன்கள்

வரகு அரிசி எனப்படும் வரகரிசி என்றவுடன் பலரின் நினைவில் ‘வரகரிசியும் வழுதுணங்காயும்’ என அவ்வையில் வரிகள் நினைவிற்கு வரும். சங்க காலம் முதல் நம்மவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த சிறுதானிய அரிசி நம் வரகரிசி.

சங்க காலத்தில் வரகு

கோவில் கலசங்களில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வரகரிசியினை பயன்படுத்திய பழக்கம் கொண்டவர்கள் நம் தமிழர்கள். இதற்கு இடியைத் தாங்கும் தன்மை உள்ளது. வீடுகளில் கூரை வேய்வதற்கு வரகுத்தாளை பயன்படுத்த கோடைக்காலத்தில் நல்ல குளிர்ச்சியாக இருக்கும்.

இயற்கையாக வளரும் வரகு

ஐந்து மாதங்களில் வளரக்கூடிய இந்த வரகு ஆடிப்பட்டத்தில் விதைக்க ஏற்றது. களர் மண்ணில்கூட விளையும் தன்மையுடையது இந்த வரகு அனைத்து மண்வகைகளிலும் வளரக்கூடியது. இரசாயன உரம், பூச்சிகொல்லி என எந்த நச்சுக்களும் இல்லாமல் இயற்கையான முறையில் விளையக்கூடியது.

சிறுதானிய வகையை சேர்ந்த இந்த வரகரிசி தமிழகத்தில் மானவரியில் எந்த இரசாயனமும், பூச்சி கொல்லியும் இல்லாமல் விளையக்கூடியது. வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், பெரம்பலூர், இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகமாக விளையும் இந்த தானியத்தின் உமி சற்று தடியாக இருக்கும்.

வரகு அரிசியின் அடையாளம்

சிறுதானியங்களிலேயே சற்று பெரிதாகவும் இருக்கும். உமி நீக்கி தவிடு நீக்கப்படாத இந்த தானியம் வெந்தய நிறத்திலும் தவிடு நீக்கியது வெள்ளை நிறத்திலும் புழுங்கல் செய்தது அடர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். உமி நீக்கப்பட்ட ஒரு மாததிற்குள் இதனை உண்பது சிறந்த ஆற்றலை கொடுக்கும். 

வரகு அரிசியின் பயன்கள்

  • சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சிறந்த அன்றாட உணவாகும். சர்க்கரை அளவை குறைக்கிறது.
  • கால்லீரல் செயல்பாட்டிற்கு நல்லது. கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு.
  • உடலுக்கு தேவையான ஜீரண நீர் மற்றும் நிணநீரை சீராக சுரக்க உதவுகிறது. 
  • சிறுநீரக நோய்கள், சிறுநீரக நச்சுக்கள் மற்றும் கழிவுகள் நீங்க வரகரிசி சிறந்த உணவாக உள்ளது.
  • மலச் சிக்களுக்கு நிவாரணம் அளிக்கும் உணவாகவும் உள்ளது.
  • உடல் பருமனை குறைக்கும் ஆற்றல் கொண்டதாகவும் இருக்கும் இந்த வரகரிசி நார்ச்சத்துக்கள் நிறைந்தது. வரகரிசி கஞ்சி உடல்பருமனுக்கு சிறந்த உணவு.
  • சமச்சீர் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு.
  • சீரான இரத்த ஓட்டம், இருதய துடிப்பிற்கு ஏற்ற தானியமாகவும் இருக்கக்கூடியது இந்த வரகரிசி.
  • நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும்.
  • மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது.
  • மூட்டுவலியை குறைக்க உதவுகிறது.

வரகு அரிசி உணவு

பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசிக்கு சிறந்த மாற்று. வரகரிசி சாதம் முதல் பொங்கல், இட்லி, கஞ்சி, பிரியாணி, முறுக்கு, தட்டை என வித விதமான உணவுகள் பலகாரங்களை இந்த வரகரிசியில் தயாரிக்கலாம். வரகரிசி தேங்காய் சாதம் அல்லது வரகரிசி தேங்காய் பால் கஞ்சியை அவ்வப்போது உண்டு வர வயிறு சம்மந்தமான தொந்தரவுகள் நீங்கும்.

நம் மரபணுவிற்கு ஏற்ற உணவு. நார்ச்சத்து அதிகம் கொண்ட வரகரிசியில் தயாரித்த உணவை நன்கு எச்சிலுடன் கலந்து உண்ண பலகாலமாக கெட்டு வயிற்றில் படிந்து இருக்கும் உணவு துகள்கள் தேய்த்து கழுவி விட்டர்ப்போல் வெளியேறும். அதனுடன் உடலுக்கு தேவையான புரதம், இரும்பு சத்துக்களையும் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும் இந்த வரகரிசியில் நிறைந்துள்ளது. 

(13 votes)