பக்கவாதம் – தடுக்கும் சில வழிகள்

உடலின் ஒரு பகுதியான கை, கால், முகம் ஆகியவை செயல் இழந்து போவதை பக்கவாதம், பாரிசவாதமாகும். மூளையின் ஒரு பாதியில் இரத்த ஓட்டம் தடைபடும் பொழுது இந்த பாதிப்பு ஏற்படும். இதுமட்டுமல்லாமல் இரத்த குழாய் அடைப்பு, கெட்ட இரத்தத்தால் ஏற்படும் தொந்தரவுகளாலும் பக்கவாதம் ஏற்படுவதுண்டு. இதிலிருந்து நம்மை பாதுகாக்க நமது இரத்தம் சுத்தமாவதும், சீரான இரத்த ஓட்டம் செயல்பாடுகளும் அவசியமாகிறது.

பக்கவாதம் அறிகுறிகள்

ஒரு பாதி உடல் மரத்துப் போதல், நடக்கும்போது தள்ளாட்டம் வருவது, மயக்கம் மற்றும் இரட்டை இரட்டையாகப் பொருள்கள் தெரிதல், பேச்சு குழறுதல், ஒரு பாதி முகம் செயல் அற்றுப் போதல், கையின் பிடிப்பு ஆற்றல் குறைதல், நடக்கும்போது இடறுதல், திடீரென்று ஒரு கண்ணில் பார்வை குறைதல் போன்றவை பக்கவாதத்தின் ஆரம்ப கட்ட அறிகுறிகள்.

பக்கவாதத்திலிருந்து நம்மை பாதுகாக்க

  • அன்றாடம் முத்ரா, யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துவதுடன் நரம்புகளையும் பலப்படுத்தும். இதனால் மூளையின் செயல்பாடுகள் சீராகும்.
  • அதிக கெட்ட கொழுப்புள்ள உணவுகளை தவிர்ப்பது அவசியம். அதிலும் துரித உணவுகளை தவிர்ப்பது சிறந்தது.
  • அதிகமாக பழங்கள், காய்கறிகள், கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.
  • பக்கவாதத்திற்கு சிறந்த அரிசியாக இலுப்பைப்பூ சம்பா அரிசி உள்ளது. அதனால் பக்கவாதத்தினால் பாதிக்கப் பட்டவர்கள் இலுப்பைப் பூ சம்பா அரிசியில் உணவு தயாரித்து எடுத்துக் கொள்வது சிறந்த பலனை அளிக்கும். இலுப்பைப் பூ சம்பா அரிசியை சாதமாகவும் தயாரித்து உண்ணலாம், இட்லி தோசை, கஞ்சி போன்ற உணவுகளுக்கும் ஏற்றது.
  • தினமும் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கியப் பின் சின்ன வெங்காயம் இரண்டினை எடுத்து பச்சையாக இடித்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து பருகிவர விரைவில் பக்கவாத நோயிலிருந்து வெளிவர உதவும்.
  • சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலனை விரைவில் அளிக்கும்.
  • வாத நாராயண கீரையை அவ்வப்பொழுது உணவில் சேர்த்துக் கொள்ளவது சிறந்தது.
  • நாட்டு அத்திப்பழத்தை உண்பது சிறந்தது. வாத நோய்க்கு எடுத்துக் கொள்ளும் உணவுகளையும், தவிர்க்க வேண்டிய உணவுகளையும் இதற்கும் பின்பற்றலாம்.

ஹார்மோன் தொந்தரவுகள், நீரிழிவு, இருதய நோய், உடல் பருமன் போன்ற நோய்கள் தாக்காமல பார்த்துக் கொள்வது அவசியம்.

(1 vote)