வெங்காயத்தின் பயன்கள்

பண்டைக்காலம் தொடங்கி வெங்காயத்தை இந்தியாவில் நாம் பயன்படுத்தும் ஒரு பழக்கம் உள்ளது. வெங்காயத்தின் பிறப்பிடம் வடமேற்கு இந்தியா, ரஷ்யா, ஆப்கானிஸ் போன்ற நாடுகள் ஆகும். பல விதமான சத்துக்களும் பலவிதமான நன்மைகளும் கொண்ட ஒரு அற்புதமான உணவுப் பொருள் இந்த வெங்காயம்.

நேபாளத்தில் இறைவனுக்கு கூட வெங்காயம் நிவேதனம் செய்யப்படுகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் என பலவிதமான சத்துக்கள் உள்ளது. அது மட்டும் இல்லாமல் நம் நாட்டு மருத்துவத்திலும் அதிகமாக வெங்காயத்தை பயன்படுத்தும் பழக்கமும் உள்ளது. பலவிதமான நோய்களுக்கும் பலவிதமான உடல் தொந்தரவுகளுக்கு வெங்காயம் நல்ல பலன் கொடுக்கக் கூடிய ஒரு உணவுப் பொருள்.

தலை வழுக்கை, பொடுகு, புழுவெட்டு மாதிரியான தொந்தரவுகளுக்கும் சிறந்த ஒரு மருந்து. வெங்காயத்தில் அதிக சத்துக்களையும் பயன்களையும் அளிக்கும் வெங்காயமாக சின்ன வெங்காயம் உள்ளது. பல பயன்களையும் நன்மைகளையும் கொண்ட இந்த வெங்காயத்தை வீட்டிலேயே வளர்க்க சிறந்தது.

வெங்காயம் இரத்த விருத்தியை அதிகரிக்கக்கூடியது, எலும்புகளுக்கு வலிமை அளிக்கக் கூடிய ஒரு அற்புதமான உணவுப் பொருள். பித்த நோய்கள், கண் நோய்கள், வாத நோய்களுக்கு சிறந்த ஒரு மருத்துவப் பொருளாகவும் உள்ளது. பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்திற்கு உதவுகிறது, ரத்த அழுத்தத்தை குறைக்கும். இழந்த சக்தியை மீட்க்க உதவுகிறது.

இந்த வெங்காயத்தை எவ்வாறு, எந்த விதத்தில் தொந்தரவுகளுக்குப் என பார்க்கலாம். அன்றாடம் வெங்காயத்தை அதிலும் மூன்று நான்கு சின்ன வெங்காயத்தை பச்சையாக உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.

பித்தம் குறைய

நான்கைந்து வெங்காயத்தை சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம், பித்தத்தால் வரக்கூடிய பிரச்சனைகள் குறையும்.

மூலச்சூடு குறைய

வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்கக்கூடியது. வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும், மூலச்சூடு குறையும்.

கட்டிகள் உடைய

வெங்காயத்தைச் சுட்டு சிறிது மஞ்சள் சிறிது நெய் சேர்த்து பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

வயிற்றுக் கோளாறுகள், இருமல் நீங்க

வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். வெங்காயச் சாற்றை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். வெங்காயச் சாற்றையும் வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து வெறும் வெங்காயப் வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும்.

உடல் பலம் அதிகரிக்க

வெங்காயத்தை அவித்து தேன் கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலம் அதிகரிக்கும்.

ஆண்மை பெருக

வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

நரம்புத் தளர்ச்சி குணமாக

வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

படை, தேமல், மூர்ச்சை

படை, தேமல் போன்ற தொந்தரவுகளுக்கு வெங்காயச் சாற்றை பூசிவர மறைந்து விடும். மூச்சினால் திடீரென்று தொந்தரவு ஏற்பட்டால் அதற்கு வெங்காய சாறு நல்ல ஒரு பலன் கொடுக்கும். வெங்காயத்தை கசக்கி முகர்ந்தாலே போதும் மூர்ச்சை தெளியும்.

தூக்கம் வர

வெங்காய சாருடன் நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும். பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரக் கூடிய ஒரு சிறந்த பொருள்.

மேகநோய் குறைய

வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

உடல் பருமனுக்கு

வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து கொண்ட ஒரு சிறந்த உணவுப் பொருள் எனவே உடல் பருமனாக உள்ளவர்கள் தாராளமாக வெங்காயத்தை பயன்படுத்தலாம், சிறந்த ஒரு பலனை அளிக்கும். உடல் பருமன் குறையும்.

நுரையீரல் சுத்தமாக

தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை சிறிதளவு பருகி வர நுரையீரல் சுத்தமாகும்.

மூட்டுக்களில் ஏற்படும் வலிக்கு

வெங்காயச் சாற்றுடன் கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலிக்கு தடவி வர வலி தொந்தரவு தீரும்.

முகப்பருக்கு

வெங்காயத்தை நறுக்கி முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் போதும் முகப்பரு விரைவில் நீங்கிவிடும்.

தொண்டை வலி குறைய

ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் விரைவில் பலன் கிடைக்கும். தொண்டைவலி ஏற்பட்டிருந்தால் வெங்காயத்தை அரைத்து வெளிப்பூச்சாக தொண்டையில் பற்றுப்போட தொண்டை வலி விரைவில் குறையும். வெங்காயம் சாப்பிடுவதால் தொண்டை கரகரப்பு நீங்கும்.

சிறுநீர் கடுப்பு நீங்க

சிறிதளவு வெங்காயத்தை எடுத்து தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி பருகினால் சிறுநீர் கடுப்பு எரிச்சல் நீங்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

தொற்று நோய்கள் பரவக் கூடிய காலங்களில் வெங்காயத்தை உண்ண சிறந்த பலனை பெறலாம். தொற்று நோயால் அவதியுறுபவர்கள் பச்சை வெங்காயத்தை மென்று தின்றால் போதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் நோயிலிருந்து நம்மை மீட்கும் இந்த வெங்காயம் நமக்கு உதவும்.

நீரிழிவு நோய்க்கு

வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் வெங்காயத்தை தவறாமல் பயன்படுத்த சிறந்தது. இயற்கையான இன்சுலினாக இது நமக்கு உதவக் கூடியதாக இருக்கும்.

தலைக்கு

தலையில் திட்டுத்திட்டாக பலருக்கு முடி உதிர்வு ஏற்படும். வழுக்கை விழுந்தாற்போல் இருக்கும். அதற்கு சிறிய வெங்காயம் சிறந்த ஒரு பலன் கொடுக்கக் கூடியது. சிறிய வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அந்த இடத்தில் நன்கு சூடு பறக்கத் தேய்த்து வர விரைவில் முடி வளரும்.

வாதநோய் குறைய

அன்றாடம் சிறிது சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வர வலிப்பு நோய் குறையும், வாதநோய் குறையும்.

தாது பலம் ஏற்பட

வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட தாது பலம் ஏற்படும்.

பெண்களுக்கு

தினசரி மூன்று வெங்காயத்தை பெண்கள் பச்சையாக சாப்பிட்டு வர உதிரச் சிக்கல் நீங்கும், மாதவிடாய் கோளாறுகள் அகலும்.

மலச்சிக்கல் குறைய

வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட மலச்சிக்கல் குறையும்.

(1 vote)