Bajra Spicy Porridge | Kambu Masala Kanji | Pearl Millet Recipe

கம்பு மசாலா கஞ்சி / Kambu Porridge

நாட்டுக் கம்பில் புரோட்டின் சத்து உள்ளது. தானிய வகைகளில் (அரிசி, கோதுமையும் சேர்த்து) வைட்டமின் ‘A’ மற்றும் folic acid அதிகம் உள்ளது கம்பில் தான். கம்பில் இரும்பு சத்தும், பீட்டா கரோட்டீன் சத்தும் அதிகம் உள்ளது. இது நம் உடம்பு பீட்டா கரோட்டீனை, வைட்டமின் ‘A’ சத்தாக மாற்றும். எனவே பீட்டா கரோட்டீனை, வைட்டமின் ‘A’ க்கான ஆதாரம் எனலாம். நம் தோல் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், கூர்மையான பார்வைக்கும் வைட்டமின் ‘A’ அவசியம். நார்ச் சத்து, வைட்டமின் ‘B’, வைட்டமின் ‘E’, கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்தும் கம்பில் அதிகம். கொழுப்பைக் கரைக்கக் கூடியது.

Nattu Kambu, kambu upma recipe in tamil, pearl millet recipe, nattu kambu upma, upma recipe in tamil, kambu recipe, millet recipe in tamil

பொதுவாக கம்பு என்றவுடன் அனைவரின் நினைவிலும் வருவது கம்பங் களியும் கம்பங் கூழும் தான். அவை மட்டும் தானா, இந்த நாட்டுக் கம்பில் விதவிதமான சுவையான பல பாரம்பரிய மற்றும் நவீன உணவுகளையும் தயாரிக்கலாம். கம்பு இட்லி, கம்பு தோசை, கம்பு அடை, கம்பு உப்புமா, கம்பு புட்டு, கம்பு வடை, கம்பு சட்னி, கம்பு குழிப்பணியாரம் என்று பல பல கார வகைகளில் தொடங்கி கம்பு சாதம், கம்பு பிஸிபேளாபாத், கம்பு தயிர் சாதம், கம்பு பிரியாணி என கம்பில் செய்யும் உணவுகளை பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம். இந்த வரிசையில் நாம் கம்பை வைத்து எவ்வாறு எளிமையான கம்பு மசாலா கஞ்சி செய்வது என்று பார்ப்போம்.

சுவையான சத்தான காலை மற்றும் இரவு உணவிற்கும் சிறந்த கஞ்சி. நல்ல காரசாரமான சுவை மட்டும் கமகம மணமும் நிறைந்த உணவு.

தேவையான பொருட்கள்

  • ¼ கப் நாட்டுக் கம்பு உடைத்து ( (குருணை))
  • 6 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 பச்சை மிளகாய்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 கைப்பிடி புதினா
  • ½ ஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது
  • ¼ ஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • உப்பு
  • 1 ஸ்பூன் நல்லெண்ணெய்

செய்முறை

  • நாட்டுக்கம்பினை ஒன்றும் பாதியுமாக குறுணைபோல் உடைத்துக் கொள்ளவும்.
  • அதில் 1 1/2 கப் தண்ணீர் விட்டு வேக வைக்கவும் அல்லது  காய்ச்சவும். 
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சின்ன  வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும். 
  • பிறகு பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள்,  தக்காளி, உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
  • புதினா, கொத்தமல்லி சேர்க்கவும். 
  • நன்கு வதங்கியதும் வேகவைத்த கம்பு குருணையை இதில் சேர்க்கவும். 
  • ஈசி கம்பு  மசாலா கஞ்சி ரெடி. 
  • இதனை காலை உணவாக விரைவாக எடுத்துக்கொள்ளலாம்.
Bajra Spicy Porridge | Kambu Masala Kanji | Pearl Millet Recipe

கம்பு மசாலா கஞ்சி

காலை உணவிற்கு சிறந்த சத்தான கம்பு கஞ்சி. நல்ல ஒரு சுவையான உணவு. எளிதில் செரிமானமாகக் கூடியது. உடல் பருமன், நீரிழிவு, மலச்சிக்கலுக்கு சிறந்தது. உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்த உதவக்கூடியது.
ஆயத்த நேரம் : – 10 minutes
சமைக்கும் நேரம் : – 15 minutes
மொத்த நேரம் : – 25 minutes
பரிமாறும் அளவு : – 2

தேவையான பொருட்கள்

  • ¼ கப் நாட்டுக் கம்பு உடைத்து ( (குருணை))
  • 6 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 பச்சை மிளகாய்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 கைப்பிடி புதினா
  • ½ ஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது
  • ¼ ஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • உப்பு
  • 1 ஸ்பூன் நல்லெண்ணெய்

செய்முறை

  • நாட்டுக்கம்பினை ஒன்றும் பாதியுமாக குறுணைபோல் உடைத்துக்கொள்ளவும்.
  • அதில் 1 1/2 கப் தண்ணீர் விட்டு வேகவைக்கவும் அல்லது  காய்ச்சவும். 
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சின்ன  வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும். 
  • பிறகு பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள்,  தக்காளி, உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
  • புதினா, கொத்தமல்லி சேர்க்கவும். 
  • நன்கு வதங்கியதும் வேகவைத்த கம்பு குருணையை இதில் சேர்க்கவும். 
  • ஈசி கம்பு  மசாலா கஞ்சி ரெடி. 
  • இதனை காலை உணவாக விரைவாக எடுத்துக்கொள்ளலாம்.