kambu upma recipe in tamil, pearl millet recipe, nattu kambu upma, upma recipe in tamil, kambu recipe, millet recipe in tamil

நாட்டுக் கம்பு உப்புமா

சத்துக்கள் அதிகம் உள்ள சிறுதானிய வகையை சேர்ந்தது கம்பு. பொதுவாக கடைகளில் உருட்டு கம்பு, கம்பெனி கம்பு, ஹைப்ரிட் கம்பு என்று பல்வேறு பெயர்களில் சற்று பெரிதாகவும் உருண்டையாகவும் கம்பு கிடைகிறது.

இந்த வகை ஹைப்ரிட் கம்புகளை தவிர்த்து நமது நாட்டு காம்பினை பயன்படுத்துவது சிறந்தது. சற்று நீளமாகவும் பழுப்பு நிறத்திலும் இந்த நாட்டு கம்பு கிடைக்கும்.

kambu upma recipe in tamil, pearl millet recipe, nattu kambu upma, upma recipe in tamil, kambu recipe, millet recipe in tamil

இன்று சில இயற்கை அங்காடிகளில் இந்த நாட்டு கிடைகிறது அவற்றை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது கீழிருக்கும் வலைதள இணைபிலிருந்தும் நாட்டு காம்பினை பெற்றுக்கொள்ளலாம்.

புரதம், வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் நிறந்த சிறந்த தானியம். இட்லி, தோசை, கஞ்சி, கூழ், சாதம், உப்புமா, முறுக்கு, தட்டை, லட்டு என பல விதமான உணவுகளை இந்த நாட்டு கம்பில் செய்யலாம்.

இயற்கையாகவே நல்ல சுவை இருக்கக்கூடியது. பொதுவாக எந்த இரசாயனமும் இந்த கம்பிற்கு தேவைப்படாது சிறப்பாக வளரக்கூடியது.

இந்த இணைப்பிலிருந்து நாட்டுக் கம்பு வாங்கிக்கொள்ளலாம் – நாட்டுக் கம்பு

Nattu Kambu, kambu upma recipe in tamil, pearl millet recipe, nattu kambu upma, upma recipe in tamil, kambu recipe, millet recipe in tamil

தேவையான பொருட்கள்

  • 1 கப் நாட்டுக் கம்பு
  • 1 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • சிறு துண்டு இஞ்சி
  • ½ ஸ்பூன் உளுந்து
  • ½ ஸ்பூன் கடலை பருப்பு
  • சிறிது கல் உப்பு
  • சிறிது கொத்தமல்லி

தாளிக்க

  • 2 ஸ்பூன் பசு நெய்
  • சிறிது கடுகு
  • சிறிது சீரகம்
  • சிறிது கறிவேப்பிலை

செய்முறை

  • வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கம்பை சுத்தம் செய்து ஒன்னும் பாதியுமாக உடைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு பாத்திரத்தில் உடைத்த கம்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மலர வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

  • மண்சட்டியில் சிறிது பசு நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து உளுந்து, கடலை பருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
  • வதங்கியவுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • நீர் கொதிவந்தவுடன் வேக வைத்த கம்பு சேர்த்து கிளறவும்.

  • ஓரிரு நிமிடத்தில் அனைத்தும் ஒன்றுசேர வெந்தவுடன் அடுப்பை அணைத்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.
  • சுவையான சத்தான நாட்டுக் கம்பு உப்புமா ரெடி. காரட், பீன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
  • கம்பு புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், பொட்டாஷியம் நிறைந்து உள்ளது. கம்பை உணவில் சேர்ப்பதால் ரத்த கொதிப்பு, நீரழிவு, புற்று நோய் ஆகியவற்றை பெருமளவில் குறைக்கலாம். உடல் எடையை குறைக்க கம்பை காலை உணவாக சேர்த்து கொள்வது நல்லது. கம்பில் லோ-க்ளைசிமிக் அளவு உள்ளது. 

kambu upma recipe in tamil, pearl millet recipe, nattu kambu upma, upma recipe in tamil, kambu recipe, millet recipe in tamil

நாட்டுக் கம்பு உப்புமா

(2 votes)



இட்லி, தோசை, கஞ்சி, கூழ், சாதம், உப்புமா, முறுக்கு, தட்டை, லட்டு என பல விதமான உணவுகளை இந்த நாட்டு கம்பில் செய்யலாம். இயற்கையாகவே நல்ல சுவை இருக்கக்கூடியது. பொதுவாக எந்த இரசாயனமும் இந்த கம்பிற்கு தேவைப்படாது சிறப்பாக வளரக்கூடியது.


⏲️ ஆயத்த நேரம்
15 mins

⏲️ சமைக்கும் நேரம்
20 mins

🍴 பரிமாறும் அளவு
2

🍲 உணவு
காலை


தேவையான பொருட்கள்
  • 1 கப் நாட்டுக் கம்பு
  • 1 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • சிறு துண்டு இஞ்சி
  • ½ ஸ்பூன் உளுந்து
  • ½ ஸ்பூன் கடலை பருப்பு
  • சிறிது கல் உப்பு
  • சிறிது கொத்தமல்லி
தாளிக்க
  • 2 ஸ்பூன் பசு நெய்
  • சிறிது கடுகு
  • சிறிது சீரகம்
  • சிறிது கறிவேப்பிலை
செய்முறை
  1. வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. கம்பை சுத்தம் செய்து ஒன்னும் பாதியுமாக உடைத்துக் கொள்ளவும்.
  3. பின் ஒரு பாத்திரத்தில் உடைத்த கம்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மலர வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  4. மண்சட்டியில் சிறிது பசு நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து உளுந்து, கடலை பருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
  5. வதங்கியவுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  6. நீர் கொதிவந்தவுடன் வேக வைத்த கம்பு சேர்த்து கிளறவும்.
  7. ஓரிரு நிமிடத்தில் அனைத்தும் ஒன்றுசேர வெந்தவுடன் அடுப்பை அணைத்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.
  8. சுவையான சத்தான நாட்டுக் கம்பு உப்புமா ரெடி. காரட், பீன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
  9. கம்பு புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், பொட்டாஷியம் நிறைந்து உள்ளது. கம்பை உணவில் சேர்ப்பதால் ரத்த கொதிப்பு, நீரழிவு, புற்று நோய் ஆகியவற்றை பெருமளவில் குறைக்கலாம். உடல் எடையை குறைக்க கம்பை காலை உணவாக சேர்த்து கொள்வது நல்லது. கம்பில் லோ-க்ளைசிமிக் அளவு உள்ளது.

(2 votes)