நரைமுடி கருமையாக எளிய வழிகள்

நமது முன்னோர்களில் காலத்தில் பொதுவாக வயதானவர்களுக்கு வரக்கூடியதாக பிரச்சைனையாக இருந்தது நரைமுடி. ஆனால் காலம் மாறிய இன்று உணவு நஞ்சான காலத்தில் நமது முன்னோர்களில் பழக்கங்களும் மறைந்து போக பிறந்த குழந்தைகள் முதல் அனைவரின் உடலாரோக்கியமும் கேள்விக் குறியாக மாறிவிட்டது. இதில் இன்றைய இளைய சமூகம் பெருமளவில் பதிக்கப் படக்கூடிய ஒரு தொந்தரவு நரைமுடி. இளமையிலேயே வரக்கூடிய நரைமுடி.

நரை முடி காரணம்

கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே ஆண் பெண் பிள்ளைகளுக்கு இன்று இந்த நரைமுடி தொந்தரவு உள்ளது. இதற்கு மிக முக்கியமான காரணம் உணவும், போதுமான ஓய்வும் இல்லாதது. அர்த்த இராத்திரி வரை கைபேசியையும், கணினியையும் பார்க்க முதலில் முடி உதிர்வும், உடல் உஷ்ணம் படையெடுக்கும். அதனை தொடர்ந்து உடல் பலகீனம், சத்துகுறைபாடும் ஏற்பட உடலில் சில புரத சத்துக்கள் குறைய இளநரை ஏற்படுகிறது.

நரைமுடி விலக உணவுகள்

அதனால் உணவில் சத்துக்கள் நிறைந்திருக்கும் பழங்கள், காய்கறிகள், பயிறு வகைகள், முளைகட்டிய தானியங்கள், கீரைகள் நிறைந்தவாறு எடுத்துக் கொள்வது சிறந்தது. ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தோடு உறங்கச் செல்வது மிகவும் அவசியமானது. இவற்றோடி மேலும் சில எளிய வழிமுறைகளை இனி பார்போம்.

நரை முடி வருவதால் பலவிதமான மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடும். இதனை முற்றிலும் விரட்ட கூடிய ஒரு அற்புதமான மருந்து கரிசாலை இலைகள். இந்த இலைகளையும் பூக்காத கொட்டை கரந்தை இலைகளையும் எடுத்து நன்கு நிழலில் உலர்த்தி பொடித்து சலித்து எடுத்து வைத்துக்கொண்டு அவை இரண்டையும் சம அளவு எடுத்து தேன் சேர்த்து குழைத்து சாப்பிட்டு வர இளநரை விரைவில் மறையும்.

பொன்னாங்கண்ணி எண்ணெயை தலைக்கு தடவி வர நல்ல பலன் கிடைக்கும். கரிசலாங்கண்ணி சாறு பருகவும் நல்ல பலனை பெறலாம்.

இளநரைக்கு நல்ல பலனளிக்கக் கூடிய மிக முக்கியமான மற்றொரு உணவு நெல்லிக்காய். ஒவ்வொருநாளும் நெல்லிக்காயை ஏதாவது ஒரு வகையில் அதாவது பச்சை நெல்லிக்காய், நெல்லிக்காய் சட்னி, நெல்லிக்காய் பொடி, தேன் நெல்லிக்காய், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் வற்றல், நெல்லிக்காய் தண்ணீர் போன்ற பலவிதமான நெல்லி போன்ற உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ள இளநரை மறையும்.

https://www.youtube.com/watch?v=ZVsHLQ4AP84

கொட்டை கரந்தை மூலிகையை உலர்த்தி பொடி செய்து கற்கண்டு சேர்த்தும் சாப்பிட இளநரை தீரும், உடல் பலம் பெறும்.

முளைக்கீரையை வாரம் ஒரு நாள் என தொடர்ந்து சாப்பிட்டு வர இளநரை தொந்தரவு விரைவில் குணமாகும்.

மூக்கிரட்டை மூலிகையும் இளநரைக்கு மிக சிறந்த மருந்து. மூக்கிரட்டை மூலிகையை பாலில் அரைத்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

கூந்தல் கருகருவென்று வளர நெல்லிக்காயை தொடர்ந்து கற்றாழையும் சிறந்த பலனை அளிக்கும். கற்றாழை சாறு, நெல்லிக்காய் சாறு சேர்த்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

https://www.youtube.com/watch?v=i2W8p_nzcZk

முடி நரைக்காமல் நீண்டு வளர கருவேப்பிலை சாறு, கரிசலாங்கண்ணி சாறு, பால் ஆகியவற்றை நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி தலை முடிக்கு ஆறு மாதம் தடவ பலன் கிடைக்கும்.

இளநரையை போக்க பீர்கங்காய் எண்ணெய் சிறந்த பலனை அளிக்கும்.

https://www.youtube.com/watch?v=Ql7-pQON91E
(4 votes)