- புரதம், நார்சத்து, தாது உப்புக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து என்று அனைத்தையும் பக்குவமாய் கொண்டுள்ளது.
- மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த சிறுதானியம் பீட்ட காரட்டீன் சத்தையும் கொண்டுள்ளது.
- கை, கால், முட்டி வீக்கம் கொண்டவர்களுக்கு வரப்பிரசாதம். சக்கரை வியாதி, தைராய்ட், மாதவிடாய் தொந்தரவு உள்ளவர்களுக்கு சிறந்த உணவு.
- மேலும் தினை அரிசியின் பயன்கள் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ள இங்கு தொடரவும் – தினை அரிசி
- மற்ற சிறுதானியங்கள் பற்றிய நன்மைகள் மற்றும் பயன்கள் பற்றி தெரிந்துகொள்ள – சிறுதானியங்கள்.
தேவையான பொருட்கள்
- 1 கப் தினை அரிசி
- 5 நெல்லிக்காய்
- தேவையான அளவு செக்கு நல்லெண்ணெய்
- உப்பு
- 4 வர மிளகாய்
- ½ ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுந்த பருப்பு
- சிறிது பெருங்காயம்
- சிறிது கறிவேப்பிலை
- சிறிது கொத்தமல்லி
செய்முறை
- முதலில் தினையரிசியை 20 நிமிடம் ஊறவைத்து நன்கு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் தினையரிசியுடன் நன்கு கப் தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் வேகவிடவும்.
- தண்ணீர் கொதி வந்தபின் அடுப்பை சிறு தீயில் வைத்து ஐந்து நிமிடம் வேகவிடவும்.
- தினையரிசி நன்கு வெந்த பின் அடுப்பை அணைத்து மீதமிருக்கும் தண்ணீரை வடித்து விட வேண்டும். (எளிமையாக சிறுதானியத்தை சமைக்கும் முறையை கீழிருக்கும் காணொளியில் பார்க்கலாம்.)
- ஒட்டாமால் தனித்தனியாக உதிரியாக தினையரிசி சாதம் தயார்.
- சிறிது நல்லெண்ணெய், உப்பு சேர்த்து கிளறி உதிர் உதிராக சிறிது ஆறவைத்துக் கொள்ளவும்.
- பின் 5 நெல்லிக்காய்களை விதை நீக்கி, 2 வர மிளகாய், சிறிது கல் உப்பு சேர்த்து அரைக்கவும்.
- அடுப்பில் ஒரு மண்சட்டி வைத்து அதில் 1 ஸ்பூன் நல்ல எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்த பருப்பு, வர மிளகாய் போட்டு தாளித்து பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கியதும் உதிரியாக உள்ள தினை சாதத்தை சேர்த்து கிளறி கொத்தமல்லி தூவவும்.
- சத்தான சுவையான தினையரிசி நெல்லிக்காய் சாதம் தயார்.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பள்ளி அலுவலகங்களுக்கு எடுத்து செல்ல அற்புதமான உணவு.
தினை நெல்லிக்காய் சாதம்
புரதம், நார்சத்து, தாது உப்புக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து என்று அனைத்தையும் பக்குவமாய் கொண்டுள்ளது. மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த சிறுதானியம் பீட்ட காரட்டீன் சத்தையும் கொண்டுள்ளது. கை, கால், முட்டி வீக்கம் கொண்டவர்களுக்கு வரப்பிரசாதம். சக்கரை வியாதி, தைராய்ட், மாதவிடாய் தொந்தரவு உள்ளவர்களுக்கு சிறந்த உணவு.
பரிமாறும் அளவு : – 2
தேவையான பொருட்கள்
- 1 கப் தினை அரிசி
- 5 நெல்லிக்காய்
- தேவையான அளவு செக்கு நல்லெண்ணெய்
- உப்பு
- 4 வர மிளகாய்
- ½ ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுந்த பருப்பு
- சிறிது பெருங்காயம்
- சிறிது கறிவேப்பிலை
- சிறிது கொத்தமல்லி
செய்முறை
- முதலில் தினையரிசியை 20 நிமிடம் ஊறவைத்து நன்கு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் தினையரிசியுடன் நன்கு கப் தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் வேகவிடவும்.
- தண்ணீர் கொதி வந்தபின் அடுப்பை சிறு தீயில் வைத்து ஐந்து நிமிடம் வேகவிடவும்.
- தினையரிசி நன்கு வெந்த பின் அடுப்பை அணைத்து மீதமிருக்கும் தண்ணீரை வடித்து விட வேண்டும்.
- ஒட்டாமால் தனித்தனியாக உதிரியாக தினையரிசி சாதம் தயார்.
- சிறிது நல்லெண்ணெய், உப்பு சேர்த்து கிளறி உதிர் உதிராக சிறிது ஆறவைத்துக் கொள்ளவும்.
- பின் 5 நெல்லிக்காய்களை விதை நீக்கி, 2 வர மிளகாய், சிறிது கல் உப்பு சேர்த்து அரைக்கவும்.
- அடுப்பில் ஒரு மண்சட்டி வைத்து அதில் 1 ஸ்பூன் நல்ல எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்த பருப்பு, வர மிளகாய் போட்டு தாளித்து பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கியதும் உதிரியாக உள்ள தினை சாதத்தை சேர்த்து கிளறி கொத்தமல்லி தூவவும்.
- சத்தான சுவையான தினையரிசி நெல்லிக்காய் சாதம் தயார்.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பள்ளி அலுவலகங்களுக்கு எடுத்து செல்ல அற்புதமான உணவு.
குறிப்புகள்
எளிதாக சிறுதானியங்களை சமைக்கும் முறையினை இந்த காணொளியில் பார்க்கலாம்.
Nice mam