தினை அரசி
குருவிகளும், பறவைகளும் விரும்பி உண்ணும் தினை, சங்க காலம் முதல் மனிதர்களின் உணவு என்பதற்கு சான்று நம் சங்க கால பழக்க வழக்கங்கள். தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு பரிச்சயமான உணவு நம் தேனும் தினை மாவும்.


உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானியம் நம் தினை தானியம். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம் குறிஞ்சி நிலங்களில் விளையும் இந்த தானியம் பல சத்துக்களை கொண்டுள்ளது. புரதம், நார்சத்து, தாது உப்புக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து என்று அனைத்தையும் பக்குவமாய் கொண்டுள்ளது.
மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த சிறுதானியம் பீட்ட காரட்டீன் சத்தையும் கொண்டுள்ளது. கை, கால், முட்டி வீக்கம் கொண்டவர்களுக்கு வரப்பிரசாதம். சக்கரை வியாதி, தைராய்ட், மாதவிடாய் தொந்தரவு உள்ளவர்களுக்கு சிறந்த உணவு.
எல்லா வயதினருக்கும் ஏற்ற இந்த தினை தமிழகத்தில் பல இடங்களிலும் குறிப்பாக குறிஞ்சி நிலங்களில் விளையக் கூடியது.


மானாவரியில் விளையும் இந்த தினைக்கு எந்த இரசாயனமும் பூச்சி கொல்லிகளும் தேவையில்லை. முழுக்க இயற்கை முறையில் பெரும் சத்தான தானியம். மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த தானியத்தின் உமியை நீக்கினால் மஞ்சள் நிறத்திலான சற்று இனிப்பு சுவை கொண்ட தினை அரிசி கிடைக்கும்.
தினையரிசியை அன்றாடம் செய்யும் சாதத்திற்கு மாற்றாக உண்ணலாம் அல்லது எதாவது ஒரு கலவை சாதமாகவும் செய்யலாம். தினையரிசியில் செய்யும் பாயாசம், தேன் உருண்டை, இனிப்பு பொங்கல் போன்ற இனிப்பு பலகாரங்களும் உணவுகளும் நல்ல மணத்துடன் சுவைக்கும்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறுதானியம் என்ற வரிசையில் தினை அரிசியையும் நம் அன்றாட உணவில் வாரம் ஒருமுறையேனும் சேர்த்துக் கொள்ளவேண்டும். எளிய முறைகளில் பல உணவுகளை தயாரிக்கவும் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற அருமையான சிறுதானிய அரிசி நம் தினையரிசி.


அவ்வாறான சிறுதானிய அரிசியான தினையில் எத்தனை எத்தனை வகை உணவுகளை செய்யமுடியும் என்று சிந்தித்தால் எண்ணிலடங்காது. அதுவும் நம் தமிழக உணவு வகைகளில் என்று யோசித்தால் 50 வகை பாயசம் மற்றும் பலகாரம், 20 வகை இட்லி, 30 வகை தோசை, 50 வகை சாதவகைகள், 50 வகை இனிப்பு பலகாரங்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலம்.
அன்றாடம் சிற்றுண்டியாகவும் தினையில் செய்த பலகாரங்களை உண்ணலாம். அதுவும் எளிதாக முருகப்பெருமானுக்கு பிடித்த தினையும் தேனுருண்டையும் உண்டு வர உடல் பலம்பெறும். தாது உப்பு சமன்பாடு பெரும். அனைத்து ஊட்டச்சத்துக்களும் எளிதாக உடலுக்கு கிடைக்கும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்ற உணவு.
எட்டாக் கனியைப் பார்த்து இச்சித்து என்ன பலன்.
சமீபத்திய கருத்துகள்