தினை முறுக்கு

ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள், மாவுச்சத்து மற்றும் வைட்டமின் “பி’, பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து என பல சத்துக்களை உள்ளடக்கிய சிறு தானியம் நம் தினை.

முருகன் வள்ளி எனும் புராண கதைகளில் வரும் தினையும் தேனும் என்பதிலிருந்து தினை எவ்வளவு பழமையான தானியம் என்று தெரிந்து கொள்ளலாம்.

பழமை மட்டுமா மலைகளில் விளையும் இந்த தானியம் நம் மரபணுவில் அதிக பரிட்சயம் கொண்டது என்றும் தெரிந்து கொள்ளலாமே.

சிறு மஞ்சள் நிற தானியமான இந்த தினை இதயத்தை பலப்படுத்துவதற்கு உதவுகிறது. இனிப்பு சுவை கொண்ட பலகரங்களுக்கு ஏற்றது இந்த தானியம். 

மேலும் தினை அரிசியின் பயன்கள் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ள இங்கு தொடரவும் – தினை அரிசி

மற்ற சிறுதானியங்கள் பற்றிய நன்மைகள் மற்றும் பயன்கள் பற்றி தெரிந்துகொள்ள – சிறுதானியங்கள்.

தேவையான பொருட்கள்

  • 1 ¼ கப் தினை மாவு
  • ½ கப் கடலை மாவு
  • சிறிது எள்
  • சிறிது சீரகம்
  • தேவையான அளவு செக்கு கடலை எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு
  • சிறிது பெருங்காயம்

செய்முறை

  • தினை மாவு, கடலை மாவு, எள், சீரகம், சிறிது எண்ணெய், பெருங்காயம் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக சிறிது தண்ணிர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும். 
  • முறுக்கு அச்சில் பிசைந்த மாவைப் போட்டு முறுக்குகளாகப் பிழிந்து வைத்து கொள்ளவும். 
  • வாணலியில் முறுக்கு பொரிப்பதற்குத் தேவையான செக்கு எண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் பிழிந்த முறுக்கைப் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
  • சுவையான முறுமுறு தினை முறுக்கு தயார். 

தினை முறுக்கு

ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள், மாவுச்சத்து மற்றும் வைட்டமின் "பி', பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து என பல சத்துக்களை உள்ளடக்கிய சிறு தானியம் நம் தினை.
முருகன் வள்ளி எனும் புராண கதைகளில் வரும் தினையும் தேனும் என்பதிலிருந்து தினை எவ்வளவு பழமையான தானியம் என்று தெரிந்து கொள்ளலாம்.
பழமை மட்டுமா மலைகளில் விளையும் இந்த தானியம் நம் மரபணுவில் அதிக பரிட்சயம் கொண்டது என்றும் தெரிந்து கொள்ளலாமே.
சிறு மஞ்சள் நிற தானியமான இந்த தினை இதயத்தை பலப்படுத்துவதற்கு உதவுகிறது. இனிப்பு சுவை கொண்ட பலகரங்களுக்கு ஏற்றது இந்த தானியம். 
ஆயத்த நேரம் : – 10 minutes
சமைக்கும் நேரம் : – 30 minutes
மொத்த நேரம் : – 40 minutes