மண் புழுக்கள் – வகைகள்

ஒவ்வொரு நிலத்திற்கும் ஏற்றவாறு உலகில் ஆயிரம் ஆயிரம் மண்புழுக்கள் உள்ளது. நிலத்தின் தன்மை, தட்பவெப்பம் போன்றவைகளுக்கு ஏற்ப உடலமைப்பை பெற்று மண்புழுக்கள் மண்ணில் வாழ்கிறது. வெப்பத்தையும், வெளிச்சத்தையும் உணரும் தன்மையைத்தவிர எந்த உணர்ச்சியும், உணர்ச்சி உறுப்புகளும் மண்புழுக்களுக்கு  இல்லை.

இருபாலினமான மண்புழுக்கள் மண்ணை துளையிட்டு பூமியின் ஆழம் வரை சென்று உள்ளிருக்கும் மண்ணையும் வளமானதாக மாற்றுகிறது. மண்ணரிப்பை கட்டுப்படுத்தும் மண்புழுக்கள் நிலத்தடி நீரையும் உயர்த்துகிறது. மண்ணை மட்டுமல்ல மொத்தத்தில் நமது சுற்றுப்புறத்தையும், ஆரோக்கியத்தையும்  வளமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. 

பல பல வகைகள் இருக்கும் மண்புழுக்களை மூன்று இரகங்களாக பிரிக்கலாம்

மூன்று வகை மண்புழுக்கள்

மேல் மட்ட மண்புழுக்கள்

இவற்றில் மேல் மட்ட மண்புழுக்கள் மண்ணின் மேல் வாழக்கூடியது, வளமான மண்ணை லேசாக எடுத்துப் பார்த்தால் இருக்கக்கூடியது இவைதான். மண்ணின் மேல் விழும் கழிவுகளான கால்நடைக் கழிவுகள், வீட்டுக்கழிவுகள், அங்ககக் கழிவுகள் போன்றவற்றை சிதைத்து வாழக்கூடியது. இவையே நமது வீட்டுக்கழிவுகளை உரமாக மாற்ற பெரிதும் பயன்படும் மண்புழுக்களாகும். 

நடுமட்ட மண்புழுக்கள்

மற்றவைகளான நடுமட்ட மண்புழுக்கள் மண்ணிற்கு சற்று கீழ் தொடங்கி மூன்று அடிவரை வாழக்கூடியது. இவை மண்ணின் மேலிருந்து கிடைக்கும் இலைதழை, மக்கும் குப்பைகள் போன்ற உணவை உண்டு மண்ணை வளமாக மாற்றும் இயல்பையுடையது.

கீழ்மட்ட மண்புழுக்கள்

கீழ்மட்ட மண்புழுக்கள் என்பது மூன்று மீட்டர் ஆழம் வரைக்கூட செல்லக்கூடிய இயல்பையுடைய மண்புழுக்கள். இவை மேல்மட்டத்திலிருக்கும் மக்கு உணவுகளையும், சத்துக்களையும் மண்ணின் அடிவரைக்கும் எடுத்துச்செல்லக்கூடியது. இதனால் மேலிருக்கும் மண் முதல் பல மையில் தூரம் வரை இருக்கும் மண்ணையும் செழுமையாகிறது.

இயற்கையாகவே இந்த மூன்று இரக மண்புழுக்களும் தொடர்வண்டி போல செயல்பட மேலிருக்கும் உணவினை சிதைத்து அடிஆழம் வரை எடுத்து செல்வதால் செழிப்பான மண் உருவாக்குகிறது.

இந்த மண்புழுக்களின் உடலில் பல வித திரவங்களும், நுண்ணுயிர்களும் உருவாகிறது, இவற்றால் மண் மேலும் மேலும் செழிப்படைகிறது. இந்த மண்புழுக்கள் கழிவு உணவை மட்டும் மண்ணிற்கு அளிப்பதில்லை, மண்ணிற்கு தேவையான காற்றோட்டம், பொலபொலப்பு, நீரேற்றம் போன்றவற்றையும் அளிக்கிறது.

ஒவ்வொருநாளும், தமக்கு கிடைக்கும் உணவினை சிதைத்து மண்ணின் அடிவரை கொண்டு சேர்த்து மண்ணை வளமாக மாற்றுவதுடன் இவை எந்த செலவுமின்றி மேலும் கீழும் மண்ணை உழுதுகொண்டே இருக்கிறது.

மனிதன் மாடுகளை வைத்து தனது நிலத்தில் அதன் கழிவுகள் இலைகள் போன்றவற்றை உழுது விட்டாலும், மண்புழுக்களே அவற்றை உரமாக மாற்றி மண்ணிற்கு அடிவரை கொண்டு சேர்க்கிறது. வேர்கள் அடிஆழம் வரை சென்று உணவை எடுத்துவர இது துணைபுரிகிறது. உண்மையில் மண்ணை மேலும் கீழுமாக பிரட்டி உழுதுகொண்டே இருக்கிறது. சற்று சிந்தித்து பாருங்கள்.. ஒரு சதுரஅடியில் பத்து மண்புழுக்கள் உள்ளது என்று வைத்துக்கொண்டாலும், அவை நாளொன்றுக்கு மேலும் கீழுமாக தனது உணவை எடுத்துச்செல்ல எத்தனை முறை உழுகிறது. மண் இதனால் பொலபொலப்பாகவும், மிருதுவாகவும் மாறுகிறது, தனது வேதியல், உயிர்தன்மைகளும் அதனுடன் மாறுகிறது.

மண்புழுக்கள் தொடர்ந்து மண்ணை உழுதுகொண்டே இருப்பதால் மண்ணிற்கு தனித்தனியாக சத்துக்கள் என்று வேறொன்றும் தேவையில்லை.

உண்மையில் மனிதனின் நண்பனான உழவன் மண்புழுக்கள். நண்பனின் துணைக்கொண்டு விவசாயம் செய்யும் நபர் நண்பனின் பெயரில் உழவன் என்றானான். 

மேலும்
மண்புழு உரம் தயாரிப்பது
மண் புழுக்கள் – ‘உழவனின் நண்பன்’

(7 votes)

2 thoughts on “மண் புழுக்கள் – வகைகள்

  1. தனபாலன்

    மீன் அமிலம் உபயோகப்படுத்தி பலன் ‌ கிடைப்பதில்லை

    1. admin Post author

      தழை சத்துக்கு சிறந்தது மீன் அமிலம். என்ன பதிப்புக்கு பலன் கிடைக்கவில்லை என்று கூறினால் சிறப்பு. நன்றி

Comments are closed.