மண் புழுக்கள் – ‘உழவனின் நண்பன்’

வீட்டுக்கழிவுகளை உரமாக்குவது எவ்வாறு என “இயற்கை உரம்” பகுதியில் பார்த்தோம். வீட்டின் குப்பைகளை வீணடிக்காது, உரமாக மாற்றுவதன் மூலம் பல நன்மைகள் உள்ளது.

இந்த பகுதியில் மண்புழுக்களைப் பற்றியும், மண்புழு உரம் தயாரிப்பதைப் பற்றியும் தெரிந்துகொண்டு நமது வீட்டுக்கழிவுகளில் இருந்து சுழற்சி முறை உரம் தயாரித்து நமது தோட்டத்திற்கு செலவில்லாமல் பயன்படுத்தி, வளமான விளைச்சலை எளிதாக எவ்வாறு எடுப்பது என தெரிந்து கொள்வோம். இதுவே  ஆரோக்கியமான வீட்டுதோட்டமாகும்.

எந்த செலவுமின்றி தேவையற்றவைகளின் (உடைந்த டப்பா, சமையலறைக் கழிவுகள், மக்கும் வீட்டுக் கழிவுகள்…) உதவியுடன் சுழற்சி முறையில் வீட்டுக்கு தேவையானவற்றைப் பெறுவதே (காய்கறிகள், கீரைகள்…) சிறந்ததும், தற்சார்புமானதும். இவ்வாறு இன்றும் நமது கிராமப்புறங்களில் புத்திசாலித்தனமாக பெண்கள் செலவில்லாமல் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப செடிகளை விளையவைக்கின்றனர். 

இதனை விடுத்து குப்பைகளை பிளாஸ்டிக் பைகளுடன் அடக்கி மண்ணிற்கும், நிலத்திற்கும் கேடுவிளைவித்துவிட்டு காய்கறிகள், பழங்கள், கீரை மட்டுமல்லாமல் மண், மண்புழு உரம், விதை என ஒவ்வொன்றையும் வெளியிலிருந்து விலைக்கு வாங்கி செடி வளர்ப்பது நமக்கும் நமது சுற்றுப்புறத்திற்கும் கேடுவிளைவிக்கும். பலப்பல நோய்களுக்கு இவையே முக்கிய காரணமாகவும் உள்ளது. 

உலகம், அன்றாடம் பலப்பல மாறுதல்களை உள்ளடக்கி,  தன்னை மேலும் மேலும் புதுப்பொலிவுடன், பச்சைபசேலென காட்சியளிக்க ஒன்று உதவுகிறது. அதுதான் மண்புழுக்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பல பல கழிவுகளை உருமாற்றி மனிதன் வாழ தகுந்த இடமாக இன்றும் காப்பது மண்புழுக்கள் தான்.

உலகம், அன்றாடம் பலப்பல மாறுதல்களை உள்ளடக்கி,  தன்னை மேலும் மேலும் புதுப்பொலிவுடன், பச்சைபசேலென காட்சியளிக்க ஒன்று உதவுகிறது. அதுதான் மண்புழுக்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பல பல கழிவுகளை உருமாற்றி மனிதன் வாழ தகுந்த இடமாக இன்றும் காப்பது மண்புழுக்கள் தான். இந்த மண்புழுக்கள் இல்லையானால் இன்று இந்த உலகம் குப்பைகளின் கூடாரமாக மாறியிருக்கலாம்.

மண்புழுக்கள் என்றதுமே நம் அனைவருக்கும் சிறுவயதில் பிடித்து விளையாடியது தான் ஞாபகத்திற்கு வரும்… மண் புழுக்கள் ‘உழவனின் நண்பன்’.

உண்மையில் மண்புழுக்கள் உழவனின் நண்பனா? அல்லது உழவனின் நண்பன் மனிதனா? 

This image has an empty alt attribute; its file name is earthworm-farmers-friend-in-tamil-manpulu-uram-benefits-manpulu-uram-in-tamil-vermicompost-preparation-in-tamil-earthworm-fertilizer-500x185.jpg

மண்புழுக்களின் துணையோடு மண்ணை உழுது விவசாயம் செய்யும் மனிதன் உழவனாவான். எப்படி என்கிறீர்களா.. ‘உன் நண்பனைப்பற்றி சொல் உன்னைப்பற்றி சொல்கிறேன்’ என்பார்கள்.. அப்படிதான் மண்புழுக்கள் உண்மையில் மண்ணை உழுவதுடன் விவசாயம் செய்யும் மனிதனுக்கு  நண்பனாக இருப்பதால் அந்த மனிதனை உழவன் என்கிறோம். 

மனிதன் தனக்கு தேவையான இடத்தினை மட்டும் இந்த மண்புழுக்களை பார்த்து உழுகிறான். ஆனால் மண்புழுக்கள் எல்லா இடங்களையும் எல்லா நேரமும் உழுது கொண்டே இருக்கிறது.

இந்த உலகில் புல், பூண்டு முளைத்த காலம் முதல் இன்று வரை இந்த மண்ணையும், நிலத்தையும் உழுதுகொண்டே இருப்பது மண்புழுக்கள் தானே. மனிதன் தனக்கு தேவையான இடத்தினை மட்டும் இந்த மண்புழுக்களை பார்த்து உழுகிறான். ஆனால் மண்புழுக்கள் எல்லா இடங்களையும் எல்லா நேரமும் உழுது கொண்டே இருக்கிறது. காடுகள், மலைகள் என அனைத்து நிலங்களையும் உழுதுகொண்டே இருக்கிறது. அப்பேற்பட்ட மண்புழுக்கள் இன்று இரசாயனங்களாலும், பூச்சிக்கொல்லிகளாலும் அழிகிறது. மண்ணை விட்டு இவை வெளியேறுவதால், மண் மலடாக மாறுகிறது.

மண் வளமானதாகவும், செழுமையாகவும் இருக்க மண்புழுக்கள் அவசியம். இவற்றை தவிர்த்து டன் டன்னாக எவ்வளவு உரத்தை கொட்டினாலும் செழிப்பான விளைச்சலை எடுப்பது தற்காலிகமானது. 
பல்லாயிரம் ஆண்டுகளாக காடுகள், செடிகள் செழிப்பாக வளர்ந்ததுடன், விவசாயமும் செழிப்பாக இருந்தது. சீரான முறையில் இயற்கையின் துணையுடன் எந்த இரசாயனமும் இன்றி பல நூற்றாண்டுகளாக விவசாயம் செய்ததால் மழைப்பொழிவு, மண், சுற்றுப்புறம், கால நிலை, தட்பவெப்பம் போன்றவை சீராக இருந்தது.

இவற்றிற்கும் மண்புழுக்களே முக்கிய காரணம். சமீபத்தில், குறைந்தது ஐம்பது அறுபது ஆண்டு காலமாக இரசாயனங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் மண்ணில் கொட்ட விவசாய நிலத்தில் இருக்கும் மண்புழுக்கள் இரசாயனங்களாலும் உணவு கிடைக்காமலும் அழிந்தன. இதனால் மண்ணின் நீர்மட்டம் குறைந்தது, மண் இறுகியது, வேர்கள் மண்ணில் செல்ல முடியாது விளைச்சல் குறைந்தது, இரசாயனங்கள் அதிகரித்தது, மழைப்பொழிவு குறைந்தது, புவி வெப்பமயமாக்கல் அதிகரித்தது.

மேலும் குப்பைகள் அழுகி மண்ணையும், காற்றையும் மாசுபடுத்துகிறது, அபாயகரமான வாயுக்கள் உருவாகிறது, மொத்தத்தில் மனிதனின் ஆரோக்கியம் நலிந்து எங்கு பார்த்தாலும் நோய். இவை அனைத்திலும் இருந்து மீண்டு ஆரோக்கியம் மேம்பட  மீண்டும் மண்ணை செழிப்பாக மாற்ற வேண்டும். அதற்கு  மண்புழுக்களை நமது தோட்டத்திற்கும், விவசாய நிலத்திற்கும் வரவழைக்கவேண்டும், மண்புழு உரத்தை நமது செடிகளுக்கும் அளிக்கவேண்டும்.

மேலும்
மண்புழு உரம் தயாரிப்பது
மண் புழுக்கள் – வகைகள்