ஊட்டச்சத்து பற்றாக்குறையால் மாதவிடாய் சமையங்களில் ஏற்படும் வாயிற்று வலி, அதிக உதிரப்போக்கு, சோம்பல், உடல் அசதி போன்றவற்றிற்கு மாமருந்து நம் பாரம்பரிய சிறு தானிய வகையான சாமை அரிசி.
பெண்களுக்கு மட்டுமில்லாது ஆண்களின் விந்து எண்ணிக்கையையும் அதிகரிக்க சாமை அரிசி உணவுகள் துணைசெய்கிறது. நார்சத்து அதிகம் கொண்ட இந்த சிறுதானியம் மலச்சிக்கலை நீக்குவதோடு சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு சக்கரையின் அளவை இரத்தத்தில் உடனடியாக ஏறாதவாறு பாதுகக்கவும் செய்கிறது.
சாமை அரிசி பயன்கள், நன்மைகளை தெரிந்துக்கொள்ள – சாமை அரிசி.
தேவையான பொருட்கள்
- 1 கப் சாமை அரிசி
- 1 வெங்காயம்
- 1 தேங்காய்
- செக்கு கடலை எண்ணெய்
- 50 கிராம் சிறு சோளம் மாவு
- 5 மிளகாய் வற்றல்
- பெருங்காயம்
செய்முறை
சாமை அரிசியை 30 நிமிடம் ஊறவைத்துக் கொள்ளவும்.
துருவிய தேங்காயுடன் பெருங்காயம், உப்பு, மிளகாய் மற்றும் சாமை அரிசியை கெட்டியாக அரைக்கவும்.
அதனுடன் சிறுசோள மாவு, கருவேப்பிலை, கொத்தமல்லி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பிசைந்து வைக்கவும்.
மாவில் தண்ணீர் கூடிவிட்டால் சிறிது சிறுசோள மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
இதனை சிறிது சிறிது வடைகளாக தட்டி எண்ணையில் போட்டு இரண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுக்கவும்.
இதற்கு வெங்காயச் சட்னி, புதினா சட்னி பொருத்தமாக இருக்கும்.
குழந்தைகள் விரும்பி உண்ண ஏற்ற மாலை சிறுதானியப் பலகாரம்.
சாமை தேங்காய் வடை
தேவையான பொருட்கள்
- 1 கப் சாமை அரிசி
- 1 வெங்காயம்
- 1 தேங்காய்
- செக்கு கடலை எண்ணெய்
- 50 கிராம் சிறு சோளம் மாவு
- 5 மிளகாய் வற்றல்
- பெருங்காயம்
செய்முறை
- சாமை அரிசியை 30 நிமிடம் ஊறவைத்துக் கொள்ளவும்.
- துருவிய தேங்காயுடன் பெருங்காயம், உப்பு, மிளகாய் மற்றும் சாமை அரிசியை கெட்டியாக அரைக்கவும்.
- அதனுடன் சிறுசோள மாவு, கருவேப்பிலை, கொத்தமல்லி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பிசைந்து வைக்கவும்.
- மாவில் தண்ணீர் கூடிவிட்டால் சிறிது சிறுசோள மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
- இதனை சிறிது சிறிது வடைகளாக தட்டி எண்ணையில் போட்டு இரண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுக்கவும்.
- இதற்கு வெங்காயச் சட்னி, புதினா சட்னி பொருத்தமாக இருக்கும்.
- குழந்தைகள் விரும்பி உண்ண ஏற்ற மாலை சிறுதானியப் பலகாரம்.