தரைப்பசலை கீரை – நம் கீரை அறிவோம்

Portulaca quatrifida; தரைப் பசலை கீரை

பார்க்க அழகாக சின்னஞ்சிறு இலைகளுடன் இருக்கும் கீரை தரைப்பசலை கீரை. இந்த தரைபசலை பசலை கீரையில் ஒருவகை. விவசாய நிலங்களுக்கு அருகில் சாதாரணமாக பார்க்கக்கூடிய கீரை வகை. இந்த தரைப்பசலையில் கடையல் செய்து உட்கொள்ள நல்ல சுவையாக இருக்கும்.

இரத்தசோகை, மூட்டு வலி, நீரிழிவு, உடலில் ஏற்படும் வீக்கங்கள், சத்துகுறைபாடு, புரதசத்து காரணமாக வரும் நோய்கள், தொற்று நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்த பலனை அளிக்கும். மூளை வளர்ச்சிக்கு சிறந்த பலனை அளிக்கும். மலச்சிக்கல் தீர்க்கும். சிறுநீர்க் கற்களை கரைக்கும் சிறந்த மருந்தாகவும் இது இருக்கும்.