கொடிப்பசலை கீரை – நம் கீரை அறிவோம்

கொடி பசலைக் கீரையும் குத்து பசலைக் கீரையும் ஒரே இனத்தை சேர்ந்தவையே. கொடி பசலை கீரையில் இரண்டு விதம் உண்டு. ஒன்று பச்சை நிறமுள்ள இலையுடனும் மற்றொன்று சிகப்பு நிற தண்டு இலையுடனும் இருக்கும். இதில் வெளுத்த பச்சை நிற கொடியினை வெள்ளைப் பசலை என்றும் சிகப்பு நிறக் கொடியை சிகப்பு பசலை என்றும், சில இடங்களில் சிலோன் பசலை என்றும் கூறுவதுண்டு. ஆனால் குத்து பசலைக் கீரையே பொதுவாக சிலோன் பசலைக் கீரையாகும்.

வைட்டமின் சத்துக்கள், தாது சத்துக்கள் கொண்ட இந்த கீரையின் இலையுடன் இளம் தண்டுகளையும் சேர்த்தே சமைக்கலாம். இதனை துவரம்பருப்பு அல்லது பாசிப் பருப்பு சேர்த்து வேகவைத்து கூட்டாக செய்தால் நல்ல ருசியாக இருக்கும். இந்த கொடிப்பசலைக் கீரையை விதைகள் மூலம் பயிரிடலாம். இந்த கொடிப்பசலை வீட்டின் கூரையில் படர விட அழகாக இருப்பது மட்டுமில்லாமல் குளு குளு வென்று மட்டும் இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய இந்த கீரையை தொடர்ந்து உண்பதால் இரத்த சோகை மறையும். அஜீரணம் சார்ந்த தொந்தரவுகள், மலச்சிக்கல் நீங்கும். தொடர்ந்து இந்த கீரையை உணவில் சேர்த்து வர நோய் எதிர்பாற்றல் அதிகரிக்கும். பல நோய்களைத் தடுக்கவும் கூடிய ஒரு அற்புதமான கீரை.

மூத்திரக்கடுப்பு, நீரடைப்பு, வெள்ளை வாந்தி போன்ற நோய்கள் தொந்தரவுகளுக்கு சிறந்தது. உடல் சூட்டை தணிக்கும் அற்புதமான கீரை. உடல் கழிவுகளை வெளியேற்றும். இந்த கொடிப்பசலைக் கீரையை உண்பதால் பித்த நோய்கள், சீதபேதி அகலும். கபத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளதால் கபம் உள்ளவர்கள் இந்த கீரையை அவ்வப்பொழுது உண்பதை தவிர்க்கவும்.

கொடிப் பசலை கீரை ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச் சத்து (100 கிராம் கீரைகள்)

  • புரதம் – 2.8 கிராம்
  • கொழுப்பு – 0 4 கிராம்
  • மாவுச்சத்துக்கள் – 4.2 கிராம்
  • நீர்ச்சத்து – 90.8 கிராம்
  • தாது உப்பு – 1.8 கிராம்
  • வெப்பம் – 32 கலோரி
  • நார்ச்சத்து – 2.2 கிராம்
  • சுண்ணாம்புச் சத்து – 200 மில்லி கிராம்
  • மணிச் சத்து – 35 மில்லிகிராம்
  • இரும்புச் சத்து – 10 மில்லிகிராம்

உயிர் சத்துக்கள்

  • வைட்டமின் ஏ – 12400 (10)
  • தையாமின் – 0.03 மில்லிகிராம்
  • ரிபோஃப்ளோவின் – 0.16 மில்லிகிராம்
  • நிகோடினிக் அமிலம் – 0.5 மில்லிகிராம்
  • வைட்டமின் சி – 10 மில்லிகிராம்
(16 votes)