மூட்டுவலிக்கு மருந்தாகும் எண்ணெய் குளியல்

எலும்புகளுக்கு ஆற்றல் கொடுக்கும் எண்ணெய் குளியல்

எலும்புகளுக்கு எவ்வாறு ஆற்றல் கொடுப்பது? எலும்புகள் எதனால் உருவாக்கப்பட்டது? எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான் எலும்புகளுக்கு சுண்ணாம்பு சத்து அவசியம். சுண்ணாம்பு சத்து மட்டும் போதுமா என்றால் இல்லை, அவற்றிற்கு சூரிய ஒளி மிகவும் அவசியம். வைட்டமின் டி என்று நவீன மருத்துவம் கூறும் சூரிய ஆற்றல் வைட்டமின் உடலுக்குப் போதுமான அளவு கிடைத்தால் எலும்புகள் பலமாக இருக்கும் இந்த சூரிய ஆற்றலை உடலுக்கு ஈர்த்து தோல்களில் இருக்கும் செல்களின் வழியாக எலும்புகளுக்கு அளிக்கும் வேலையை நமது எண்ணெய்க்குளியல் அதாவது நல்லெண்ணை என்று கூறக்கூடிய எள்ளில் இருந்து பெறப்படும் எண்ணெய் குளியல் அளிக்கிறது.

பிறந்த குழந்தைகளின் உடலில் லேசாக நல்லெண்ணை தேய்த்து காலை இளம் வெயிலில் குழந்தையை காட்டுவதை இன்றும் மருத்துவமனைகளில் கூட பார்க்கலாம். உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்ப்பதால் எலும்புகள் பலம்பெறும். 

நல்லெண்ணெய் தேய்ப்பதால் ஏற்படும் உடல் மாற்றங்கள் என்ன?

எள்ளில் இருந்து பெறப்படும் எண்ணெய்தான் நல்லெண்ணெய். இந்த நல்லெண்ணையில் அதிகமான புரதச்சத்து, துத்தநாகசத்து, தாமிரசத்து மற்றும் பல வகையான சத்துக்கள் உள்ளன. இவை நம் சருமத்திற்கு செழிப்பை அளிப்பதுடன் கவசமாகவும் விளங்குகிறது. எண்ணெய் தேய்ப்பதால் தோலில் படர்ந்திருக்கும் அழிந்து போன செல்களை எளிமையாக எடுப்பதுடன் செல்லில் இருக்கும் துவாரங்கள் வழியாக எண்ணெய்யை உடலுக்குள் ஊடுருவி செல்ல துணைபுரிகிறது.  சத்துக்கள் அதிகம் நிறைந்த நல்லெண்ணெய் உடலில் ஊடுருவும் பொழுது எலும்பு, சதை, தோல் ஆகியவற்றை இணைக்கக் கூடிய பல செல்கள் புத்துணர்வு அடைகிறது. இதனால் சீரான ரத்த ஓட்டம், தடைபடாத பிராண சக்தி ஓட்டம் போன்றவை உடலில் உள்ள செல்களுக்கு கிடைக்கிறது. இதனால் செல்களில் இருக்கும் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. உடல் உஷ்ணம் தணிந்து குளிச்சியடைகிறது.

அதிகப்படியான கொழுப்புக்கள் நிறைந்த செல்கள் நமது நல்லெண்ணெயில் இருக்கும் நல்ல கொழுப்பை கண்டதும் கரைந்துவிடுகிறது. இதனால் உடல் பருமன் குறையும். நேரடியாக சுண்ணாம்புச் சத்து நிறைந்த நல்லெண்ணெய் இயற்கையான முறையில் எலும்புகளுக்கு கிடைக்கும் பொழுது எலும்புகள் பலம் பெறுகிறது. அசதிகள், உடலில் ஏற்படும் வலிகள் போன்றவை இந்த நல்லெண்ணெய்க் குளியலால் மறைந்து உடல் புத்துணர்வு அடைகிறது. ஒவ்வொரு உறுப்பும் புத்துணர்வடையும் பொழுது உதாரணத்திற்கு கணையம் புத்துணர்வு அடையும் பொழுது சர்க்கரை வியாதி மெல்லக் குறையத் தொடங்கும் கல்லீரல் புத்துணர்வு அடையும் பொழுது உடலில் தங்கியிருக்கும் கழிவுகள் நீங்கப் பெறும். சிறுநீரகம் புத்துணர்வு அடையும் பொழுது சிறுநீரக கல், சிறுநீர் கடுப்பு, எரிச்சல் மற்றும் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறும். நிணநீர் ஓட்டம் சீராகும். வயிறு சம்பந்தமான தொந்தரவுகள் அல்சர், புண்கள் போன்றவை சரியாகும். மொத்தத்தில் உடல் குளிர்ச்சி பெறும் கழிவுகள் நீங்கும் பொழுது உடல் தன்னுடைய இயல்பு நிலைக்குத் திரும்பும். இவை அனைத்துமே செக்கில் ஆட்டிய தூய நல்லெண்ணெய் குளியலில் கிடைக்கக் கூடியது. 

மேலும் எண்ணெய் குளியல் செய்வதால் எவ்வாறு புற்றுநோயிலிருந்து வெளிவரலாம் என்று தெரிந்துக்கொள்ள – புற்றுநோய்க்கு மருந்தாகும் எண்ணெய் குளியல்

எண்ணெய் குளியல் எவ்வாறு செய்யவேண்டும், எண்ணெய் குளியல் மருத்துவம், எண்ணெய் குளியல் உணவுகளை தெரிந்துக்கொள்ள – நல்லெண்ணெய் குளியல் எவ்வாறு செய்வது?