எண்ணெய் குளியல் நோய்களை விரட்டும் ஆயுதம்

தீபாவளிக்கு தீபாவளி தலைக்கு குளிக்கும் நவீன இளைய தலைமுறையினர் எண்ணெய் குளியலின் அவசியத்தை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் வாட்டும் கோடையில் நம்மை பாதுகாக்கும் கவசம் இந்த எண்ணைக்குளியல். 

நமது நாட்டு மருத்துவத்தில், நமது வீடுகளில் அன்றாடம் நடக்கக்கூடிய செயல்களில் ஒன்று தான் இந்த எண்ணெய் குளியல். இன்று இந்த எண்ணெய் குளியலும் ஒரு மருத்துவமாக விளங்குகிறது. பல ஆயுர்வேத மையங்களில் ஒருமணிநேரத்திற்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு சாதாரண எண்ணைக்குளியல் இன்று வழங்கப்படுகிறது. அதிலும் மூலிகை எண்ணெய், நோய்களுக்கான பிரத்தியேக சிகிச்சை முறையில் எண்ணெய் குளியல் என்றால் அதற்கு இன்னும் அதிக பணம் வசூலிக்கப்படுகிறது. உடலில் உள்ள வலிகள், சோர்வு மட்டுமல்ல உடலில் பல நோய்களும் இந்த என்னை குளியலினால் விலகுகிறது என்கின்றனர் இந்த ஆயுர்வேத நிபுணர்கள்.  

வெளிநாட்டு பயணம் வெளிநாட்டு மோகத்தை மட்டும் நம்மிடம் கொண்டுவரவில்லை. அவர்களது பல புரியாத பழக்க வழக்கங்களையும் நம்மிடையே ஊடுருவச் செய்திருக்கிறது. பல குளிர் நாடுகளில் அன்றாடம் குளிக்கும் பழக்கமே கிடையாது. காலைக்கடனுக்கு கூட அவர்கள் தண்ணீரில் கை வைக்க மாட்டார்கள். அனைத்துமே காகிதம் தான். லேசான வெயில் வந்துவிட்டாலே போதும் சூரியஒளி குளியல் (sunbath) எடுக்க தொடங்கிவிடுவார்கள். நாம் அதையெல்லாம் செய்யமுடியுமா? அந்த வெளிநாட்டவரோடு நாம் நம்மை ஒப்பிடலாமா?

அவர்கள் வாழ்கை வேறு, அவர்கள் பழக்கவழக்கம் எல்லாமே வேறு, அவர்கள் வாழும் நிலம் வேறு. நாம் வேறு அவர்கள் வேறு. அவர்கள் நாடு வேறு நம் நாடு வேறு, அவர்கள் மரபணு வேறு நம் மரபணு வேறு, அவர்கள் சூழ்நிலை வேறு அவர்களின் தட்ப்பவெட்ப நிலை வேறு, நம்முடைய தட்பவெட்ப நிலை வேறு இப்படி எல்லாமே வெவ்வேறாக இருக்கும் பொழுது அவர்களின் பழக்கத்தை திடீர் பழக்கமாக நாம் எடுத்துக் கொண்டால் நமது உடலுக்கு அது புரியுமா? அவர்கள் குளிக்காமலேயே தண்ணீரில் கை வைக்காமலேயே பலகாலம் ஓட்டுவார்கள். நாம் ஒருநாள் குளிக்கவில்லை என்றால் உடலின் உஷ்ணம் அதிகரித்து உடல் அசதியாக தோன்றும். அதுவே பலநேரங்களில் பல நோய்களுக்கும் காரணமாக அமையும். உடல் உஷ்ணம் அதிகமாகும் பொழுது நீர்க்கடுப்பு, மலச்சிக்கல், உடல் பருமன் போன்றவைகள் ஆரம்பமாகும்..

நமது பழக்க வழக்கமான எண்ணெய் குளியல் இன்றும் மறைந்துவிட்டது. அதெல்லாம் குழந்தைகள் செய்வது, நாம் என்ன குழந்தையா என்ற சாக்குபோக்குவேறு. பலர் எண்ணெய் குளியல் எவ்வாறு செய்வது என்று மேடை போட்டு பேச ஆரம்பித்துவிட்டனர். மேடைப்பேச்சாகவே பிரபலமாகிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் எண்ணெய் குளியலை மறந்ததால் நமது உடல் பல தொந்தரவுகளுக்கு ஆளாகி விட்டது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். காரணம் நம் மரபும் நம் சீதோஷ்ண நிலையும். பல ஆய்வுகள் உடலில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் புற்று நோயிலிருந்து வெளிவரமுடியும் என்கிறது…

இதற்கு காரணம் என்ன?

பெரும்பாலும் புற்றுநோய் என்பது ஒருவகையான கழிவுகள். அதாவது உடலுக்குத் தேவையில்லாத உடல் வெளியேற்ற முடியாத செல்கள் ஒன்றாக இணைந்து ரத்த ஓட்டம், பிராண சக்தி இல்லாமல் கட்டிகளாக ஒரு இடத்தில் தங்கிவிடுவதோடு அதனை சுற்றி இருக்கும் மற்ற செல்களையும் ரத்தத்தையும் சேர்த்து அழித்துக்கொண்டிருந்தால் அவற்றை புற்றுநோய் என்கிறோம். ஒரு இடத்தில் ரத்தம் தடைபட்டால் அல்லது பிராண சக்தி தடைபட்டால் என்னவாகும்? நம் செல்லுக்கு ரத்தமும் நம் செல்லுக்கு பிராணசக்தியும் இல்லை என்றால் பலவகையான தொந்தரவுகள் கண்டிப்பாக வரத்தானே செய்யும். 

புற்றுநோய்க்கும் எண்ணெய் குளியலுக்கும் இதுதான் சம்பந்தம். புற்றுநோயை விரட்ட கூடிய ஒரு அற்புத சக்தி நம் உடலில் உள்ள எலும்புகள் (எலும்பு மஜ்ஜைகள்). எலும்பு மஜ்ஜைகள் இரத்த சிவப்பணுக்கள், வெள்ளையணுக்களையும் உருவாக்கக்கூடிய வல்லமை கொண்டது. இந்த எலும்புகள், எலும்பு மஜ்ஜைகள் பலமாகும் ஆரோக்கியமாகவும் இருந்தால் புற்றுநோய் தன்னால் விரட்டப்படும், தானாகவே சரியாகிவிடும். ஆக, எலும்புகள் பலமாக இருந்தால் எலும்புகளுக்கு ஆற்றல் கொடுத்தால் புற்றுநோய் விலகிவிடும். அவ்வளவுதான். 

மேலும் எண்ணெய் குளியல் செய்வதால் என்னென்னை நோய்களில் இருந்து வெளிவரலாம் என்று தெரிந்துக்கொள்ள – மருந்தாகும் எண்ணெய் குளியல்

எண்ணெய் குளியல் எவ்வாறு செய்யவேண்டும், எண்ணெய் குளியல் மருத்துவம், எண்ணெய் குளியல் உணவுகளை தெரிந்துக்கொள்ள – நல்லெண்ணெய் குளியல் எவ்வாறு செய்வது?

(1 vote)

Do check our New English Recipe Website

-->