வேப்ப இலை மருத்துவம்

வேப்ப மரம் சிறந்த கிருமி நாசினி மட்டுமல்லாமல் வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு சிறப்பை கொண்டுள்ளது. சில நாடுகளில் மட்டுமே விளையும் இந்த வேப்ப மரம் நமது நாட்டின் வரப்பிரசாதம் என்று கூறலாம். இதன் வேர், பட்டை, உட்பாகம், பிசின்கள், கொழுந்து, இலை, பூ, காய், பழம், ஈர்க்கு, விதை, எண்ணெய் என அனைத்து பாகமுமே மருத்துவப் பயனுடையவை. வேப்பங் கொழுந்தின் மருத்துவ பயன், வேப்பம் பூவின் மருத்துவ பயனை அறிந்து கொண்டதோடு வேப்ப இலை மருத்துவம் மற்றும் மருத்துவ பயன்களையும் பார்க்கலாம்.

neem leaves

முகப்பரு

இளைஞர்கள் முகப்பருவால் அவதிப்பட்டு பல விளம்பரங்களைப் பார்த்து பலவித ‘கிரீம்’களைப் பூசி எந்த விதமான பயனுமில்லை என சலித்துக்கொள்வார்கள். அதற்கு வேப்ப இலையையும், சிறிது மஞ்சளையும் சேர்த்து அரைத்துப் பருக்களின் மேல் பூசி வந்தாலே போதும் எந்த செலவும் இல்லமால் உடனடியாக இந்த வேப்பிலை பூச்சு பருவைச் சீரழிக்கும். முகம் பளபளக்கும்.

குழந்தைகளுக்கு

குழந்தைகளுக்கு நோய் வராமல் இருக்க வேப்பங் கொழுந்து இலைகளுடன் சீரகம், மிளகு சேர்த்து அரைத்துச் சிறு உருண்டைகளாக உருட்டி, தாய்ப்பாலில் அல்லது வெந்நீரில் கலக்கி, எண்ணெய் குளியல் செய்தவுடன் கொடுக்க கபம் வெளியேறும், வயிற்றுப் பூச்சிகள் செத்தொழியும். பிற நோய்கள் அண்டாது.

கழிச்சல்

குழந்தைகளுக்கு எந்த மருந்தைக் கொடுத்தாலும் கழிச்சலாகப் பீச்சி அடிப்பது நிற்கவில்லை என்றால் வேப்ப இலையையும், வசம்பையும் அரைத்து உள்ளுக்குக் கொடுக்க உடனே கழிசல் சட்டென்று நிற்கும்.

அம்மை நோய்

எல்லா வித அம்மை நோய்க்கும் வேப்பிலை மிக சிறந்த மருந்து. வேப்ப இலை இருக்கும் வரை கவலையில்லை என்றால் அது மிகையாகது. அம்மை நோயை அடித்து விரட்ட ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை எடுத்து சிறிது மஞ்சளும் சேர்த்து அரைத்து பாலில் கலக்கிக் குடிக்க விரைவில் அம்மை தணியும்.

பொன்னுக்கு வீங்கி

பொன்னுக்கு வீங்கி என்ற ‘மமஸ்’ வந்து காதின் அடிப்பாகம் வீங்கி சுரம் அடிக்க, வாயை அசைக்க முடியாத நிலையிருந்தால் இதற்கு வேப்பிலையையும் சிறிது மஞ்சளையும் அரைத்துப் பற்றுப் போட தன்னால் வீக்கம் குறையும். இதற்கு சிறந்த வைத்தியம் இதுவே.

இந்த வேப்பிலை மஞ்சள் பூச்சையே பித்த வெடிப்புக்களுக்கும் போட குணமாகும்.

கட்டிகள்

வேப்ப இலையை நல்லெண்ணெய் தடவி வதக்கி கட்டிகளின் மேல் வைத்துக் கட்டி வந்தால் கட்டிகள் பழுத்து உடையும்.

புண்

துர்நாற்றம் உள்ள புண்களைக் கழுவ இன்று பல இரசாயன கிருமிநாசினிகளை பயன்படுத்துகிறோம் இவற்றை தவிர்த்து வேப்ப இலை கஷாயத்தை கிருமி நாசினியாகப் பயன்படுத்தலாம். வேப்பிலையை நன்கு நீரில் கொதிக்கவிட்டு எடுத்து அதனுடன் சிறிது மஞ்சள் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ பயன்படுத்தலாம்.

சித்தப்பிரம்மை

சித்தப்பிரம்மை போன்ற மனநோய்களுக்கும் நரம்பு சம்பந்தமான கோளாறுகளுக்கும் வேப்ப இலையின் மருத்துவத்தன்மை பயன்படுகிறது. பேய் விரட்ட வேப்பிலை உதவுவதாகச் சொல்வதெல்லாம் இப்படி ஏற்பட்ட ஒரு நம்பிக்கையே!

(2 votes)