மூங்கிலரிசி அல்வா

உடலுக்கு ஊட்டமளிக்கும் அரிசி மூங்கிலரிசி. உடலை தேற்றி ஆரோக்கியத்தை மீட்க்க இந்த அரிசி உணவுகளை அவ்வப்பொழுது உண்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

மூங்கிலரிசி பற்றி சுவாரசியமான தகவல்களை தெரிந்துகொள்ள – மூங்கில் அரிசி.

உடலுக்கு ஆரோக்கியத்தையும் பலத்தையும் அளிக்கும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசியில் எளிமையாக தயாரிக்கக்கூடிய மூங்கிலரிசி அல்வா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. வெள்ளை சர்க்கரையை தவிர்த்து நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத்தைக் கொண்டு தயாரிக்க கூடுதல் இரும்புச்சத்தையும் பெறலாம்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் மூங்கிலரிசி மாவு
  • ¼ கப் சிறு சோளம் மாவு
  • 1 கப் நாட்டு சர்க்கரை
  • 1 ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை
  • ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள்
  • செக்கு நல்ல எண்ணெய்
  • பசு நெய் 
  • சிறிது தேங்காய் பூ

செய்முறை

மூங்கில் அரிசியை மாவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மூங்கிலரிசி மாவை நீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்

நாட்டு சர்க்கரையை நீர் விட்டு கரைத்து வடிகட்டவும். 

வாணலியை அடுப்பில் வைத்து நாட்டு சர்க்கரை கரைசலை சேர்த்து கொதி வருகையில் கரைத்த மூங்கிலரிசி மாவை ஊற்றவும்.

கலவை கெட்டியாகும்போது பசு நெய், நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறி, பளபளவென மாவு வெந்து, கடாயில் ஒட்டாத பதத்துக்கு வரும்போது ஏலக்காய்த்தூள், வறுத்த வேர்க்கடலை, தேங்காய்ப்பூ சேர்த்து இறக்கவும். 

இதை அப்படியே பரிமாறலாம். 

மூங்கிலரிசி அல்வா

உடலுக்கு ஊட்டமளிக்கும் அரிசி மூங்கிலரிசி. உடலை தேற்றி ஆரோக்கியத்தை மீட்க்க இந்த அரிசி உணவுகளை அவ்வப்பொழுது உண்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
ஆயத்த நேரம் : – 15 minutes
சமைக்கும் நேரம் : – 30 minutes
மொத்த நேரம் : – 45 minutes
பரிமாறும் அளவு : – 4

தேவையான பொருட்கள்

  • 1 கப் மூங்கிலரிசி மாவு
  • ¼ கப் சிறு சோளம் மாவு
  • 1 கப் நாட்டு சர்க்கரை
  • 1 ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை
  • ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள்
  • செக்கு நல்ல எண்ணெய்
  • பசு நெய் 
  • சிறிது தேங்காய் பூ

செய்முறை

  • மூங்கில் அரிசியை மாவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த மூங்கிலரிசி மாவை நீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்
  • நாட்டு சர்க்கரையை நீர் விட்டு கரைத்து வடிகட்டவும். 
  • வாணலியை அடுப்பில் வைத்து நாட்டு சர்க்கரை கரைசலை சேர்த்து கொதி வருகையில் கரைத்த மூங்கிலரிசி மாவை ஊற்றவும்.
  • கலவை கெட்டியாகும்போது பசு நெய், நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறி, பளபளவென மாவு வெந்து, கடாயில் ஒட்டாத பதத்துக்கு வரும்போது ஏலக்காய்த்தூள், வறுத்த வேர்க்கடலை, தேங்காய்ப்பூ சேர்த்து இறக்கவும். 
  • இதை அப்படியே பரிமாறலாம்.