மூங்கில் அரிசி

பிரபஞ்சஞ்சித்தின் படைப்பில் அனைத்துமே ரகசியம் நிறைந்ததாக இருக்கிறது. உலகின் தோற்றம், பஞ்சபூதங்களின் இயக்கம், உயிர்களின் சக்தி, பிறப்பு முதல் வாழ்வியல் அசைவுகள் முதல் அனைத்தின் சூட்சமமும் புரியாத புதிராகவே உள்ளது.

விஞ்ஞானம் பல பல கண்டுபிடுப்புகளை விண்ணை வியக்கும் அளவு அரங்கேற்றினாலும் அனைத்துமே இந்த உலகென்ற குடைக்குள் அடங்குகிறது. ரகசியத்தின் உச்சமாக பிறப்பு இறப்பு அமைந்திருப்பதுடன் ஒவ்வொரு நொடியும் புரியாத புதிராகத்தான் ஒவ்வொருவரின் வாழ்வையும் கடத்துகிறது.

இந்த பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில் நடக்கும் நாடகத்திற்கு பிரபஞ்சம் அளிக்கும் ஒத்துழைப்பும் ஆதரவும் எண்ணில் அடங்காததாக இருக்கிறது. சாமானியத்தில் புரிந்து கொள்ள இயலாத சூட்சமங்களுடன் இயற்கை தனது கொடையை விரிந்துள்ளது. காலத்திற்கும் நேரத்திற்கும் ஏற்றவாறு மனிதனின் அனைத்து தேவைகளுக்கும் தனது கருணைக் கைகளை விஸ்தாரமாக விரிந்துள்ளது.   

அவ்வாறான தேவையை பரிபூரணமாக மனிதனுக்கு அளிக்கும் இயற்கையின் ஒரு பிரம்மாண்டம் தான் மூங்கில் மரம். மூங்கில்மரம் ஒரு புல் வகையை சேர்த்த மரமாகும். ஆம், பல பல சூட்சமங்களை தனக்குள் வைத்திருக்கும் ஒரு பிரம்மாண்டமான மரம் தான் மூங்கில் மரம். 

ஒவ்வொன்றிக்கும் சாஸ்தர சம்பிரதாயத்தை வகுத்திற்கும் நமது சாமானிய முன்னோர்கள் இந்த முங்கில் மரத்தின் பயனிலும் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் கொண்டு அதன் ஒவ்வொரு பயனையும் வகுத்திருக்கின்றனர்.

சாமானிய மனிதர்களாக இருந்த அன்றைய மனிதர்கள் தங்களது வாழ்வியலை முழு கோணங்களிலும் வாழ்ந்திருக்கின்றனர். அறிவியல், விஞ்ஞானம் என்ன இன்றைய மனிதர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு ஒன்றை ஆராய்யும் இவர்கள் மற்ற அனைத்தையும் கோட்டைவிட்டுக்கொண்டு தான் நிஜத்தில் இருக்கின்றனர்.

இன்னமும் பல பல ஆராய்ச்சிகள் மூங்கில் மரத்தை நோக்கி இருந்தாலும் அதன் தன்மைகள் தேவைகளை அன்றைய நமது முன்னோர்கள் அருமையாக வகுத்து வைத்திருக்கின்றனர். 

மூங்கில் மரம்

உயிர்களின் ஜனனத்திற்கு அத்தியாவசியமான உயிர் காற்றினை வெளிப்படும் மரமாக இந்த மூங்கில் மரம் உள்ளது. உயிரைக்காக்கும் இந்த மரத்தினை ஒவ்வொரு இடத்திலும் வளர்த்த நமது முன்னோர்கள் அதன் தேவையை அன்றே கண்டிருந்தனர். உயிர் காக்க மட்டுமல்ல உயிரற்ற உடலை சுமக்கவும் தகுதியான மரம் இந்த மூங்கில்தான் என்பதனையும் அறிந்திருத்தவர்களாக இருந்திருக்கின்றனர்.

இலட்சங்களை கோடிகளையும் கொட்டி இராப்பகலாக இன்றோ நேற்றோ செய்த ஆராய்ச்சி அல்ல இது, ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முன் எந்த பிரத்தியேக வசதிகளும் இல்லாது கண்டறிந்த முழு உண்மை.    

உயிர் காக்கா தேவையான காற்றினை மட்டுமா இந்த மூங்கில் மரம் மனிதனுக்கு அளிக்கிறது, உடலை ஆரோக்கியமாகவும் தேகத்தை திடமாகவும் வைத்திருக்க மனிதனுக்கு கிடைத்த ஒரு வரப் பிரசாதம் தான் மூங்கில் மரத்திலிருந்து கிடைக்கும் மூங்கில் அரிசி

ஆம், பலருக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும் மூங்கில் மரத்திலிருந்து மூங்கில் அரிசியா! என்று. மூங்கில் அரிசி என்ற பெயரை பலர் அரசால் புரசலாக கேள்விப்பட்டிருப்போம், மூங்கில் மரத்திலிருந்து தான் இந்த மூங்கில் அரிசி கிடைக்கிறது என்பது தான் அதிசயம். பின் ஏன் இந்த மூங்கில் அரிசியின் விலை மிக அதிகமாக இருக்கிறது என்ற கேள்வியும் பலருக்கு கிளம்பியிருக்கும்.   

மூங்கில் மரத்தினை அனைவரும் பார்த்திருப்போம், ஆனால் அதில் அரிசியை பார்த்தவர்கள் தான் சொச்சம். மூங்கில் மரத்திலிருந்து கிடைக்கும் பல பொருட்களை கைவினைக்காகவும், அழகு பொருட்கள் தயாரிக்கவும், வீடு கட்டவும், அலங்கார பொருட்கள் என பல வடிவங்களில் நம்மை வளம் வருகிறது.

மூங்கில் மரத்தினை நட்ட சில வருடங்களில் இருந்தே இந்த பொருட்களை தயாரிக்க தேவையான பகுதிகளை இந்த மரத்திலிருந்து எடுத்து பயன்படுத்தலாம். ஆனால் அதிசயம் என்ன வென்றால் மூங்கிலிலிருந்து கிடைக்கும் எல்லா பொருட்களும்  மூங்கில் நட்ட சில வருடங்களிலேயே பலன் கிடைக்கும் ஆனால் மூங்கில் அரிசியோ மூங்கில் மரத்தின் இறுதிக் காலத்தில் தான் கிடைக்கும்.

மூங்கில் அரிசி

இது என்ன பெரிய விஷயமா? என்கிறீர்களா. ஆம். மூங்கில் மரம் என்பது எதோ ஒரு வருடமோ இரண்டு வருடமோ அல்லது பத்து வருடமோ விளையக்கூடிய மரம் கிடையாது. நாற்பது வருடங்கள், அறுவது வருடங்கள் முதல் நூறு வருடம் வரை வாழக்கூடிய மரம் தான் இந்த மூங்கில் மரம்.

இப்படி இத்தனை வருடங்கள் வாழக்கூடிய மரமாக இருக்கும் இந்த மூங்கில் மரத்திலிருந்து கடைசியாக பூப்பது அதன் பின் அதிலிருந்து அரிசிகள் கிடைப்பது அதிசயம் தானே.

குறைந்தது நாற்பது வருடங்குக்கு பின் மட்டுமே கிடைக்கக் கூடிய அரிசிதான் இந்த மூங்கிலரிசி என்றால் அது அதிசயம் தானே.

மனிதனின் பாதி வாழ்நாளுக்கு விளையக்கூடிய அரிசி என்றால் சும்மாவா என்ன.. இன்று உண்ணும் அரிசிகளோ மிகக் குறைவாக மூன்று மாதங்கள் மற்றும் விளையக்கூடியனவாக இருக்கையில் மூங்கில் அரிசி இத்தனை வருடங்களுக்கு பின் கிடைக்கக் கூடியது என்றால் அதன் மருத்துவங்களும் அதன் தன்மைகளையும் பற்றி சற்று சிந்தித்துப் பார்ப்போம்.

குறைந்தது நாற்பது வருடங்கள் இந்த பிரபஞ்சத்தில் ரகசியங்களை பரிபூரணமாக பெற்று, பல வகையான தட்ப்ப வெப்பங்கள், கால மாற்றங்கள், இயற்கை சூழல்கள் போன்றவற்றில் உழன்று அதன் அத்தனை வீரியங்களையும் பாதுகாத்து, அவற்றை சேர்த்து வைத்துக்கொண்டு இறுதியாக பூத்து நெல்லாக காய்ப்பது என்பது தான் மூங்கிலரிசியின் பலமே. 

மூங்கில்மரத்திலிருந்து கிடைக்கும் இந்த நெல் சிறு சிறு மணிகளாக சற்று சிகப்பு நிறத்திலிருக்கும். பொதுவாக மூங்கில் மரங்கள் காடுகளிலும், மலைகளிலும் பெரும்பாலும் வளர்க்கப் படுவதால் இந்த அரிசிகளும் மலைவாழ் மக்களே அதிகம் பயன்படுத்தும் அரிசியாக இருக்கிறது.

மூங்கிலரிசியின் நிறம், குணம், தன்மை

மூங்கில் மரங்கள் பூத்து குலுங்க தொடங்கியதுமே இந்த மக்கள் அதனைச் சுற்றி இருக்கும் இடங்களை தூய்மை செய்யத் தொடங்கி விடுவார்கள். காரணம் பூத்த அதிலிருந்து கிடைக்கும் நெல் மணிகளை சீராக சேமித்து பாதுகாக்கத் தான். பின் அந்த நெல் மணிகளை இடித்து உமியை நீக்கி அரிசியாக்குவார்கள். இந்த அரிசிகள் பார்ப்பதற்கு கோதுமையைப் போலவும், சற்று சிறிதாகவும், கோதுமை நிறத்திலும் காணப்படும்.

மூங்கிலரிசி எங்கு விளையும்

ஆயிரத்திற்கும் அதிகமான மூங்கில் மரங்களில் இந்தியாவில் சில வகைகள் மட்டுமே உள்ளது. அதிலும் கேரளா, தமிழகம், வட கிழக்கு மாநிலங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் போன்ற இடங்களில் மூங்கில் மரங்களும், மூங்கில் அரிசிகளும் அதிகம் விளையக்கூடிய இடங்களாக உள்ளது.

இவ்வாறு கிடைக்கும் மூங்கிலரிசியை உண்ண தள்ளாடும் கிழவனும் துள்ளி குதிப்பான் என்பது நம் முன்னோர்களின் வழக்கு.

இவ்வாறு கிடைக்கும் மூங்கிலரிசியை உண்ண தள்ளாடும் கிழவனும் துள்ளி குதிப்பான் என்பது நம் முன்னோர்களின் வழக்கு.

உடல் பலவீனமாகவும், பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும் இந்த மூங்கிலரிசியினால் தயாரித்த உணவை உண்ண நல்ல பலன் கிடைக்கும். 

மூங்கிலரிசி சத்துக்கள்

நார்ச்சத்துக்கள், புரதம், வைட்டமின் சத்துக்கள் நிறைந்த அரிசி இந்த மூங்கிலரிசி. 

மூங்கிலரிசியை சமைக்கும் முறை

இந்த மூங்கிலரிசியை குறைந்தது இரண்டு மணி நேரமாவதும் ஊறவைத்து பின் அதனை சிறு தீயில் ஒரு பாத்திரத்தில் வேகவைக்க வேண்டும். இந்த மூங்கிலரிசி சாதத்துடன் குழம்பு, ரசம், மோர் என அனைத்தையும் சேர்த்து உண்ணலாம். 

மூங்கிலரிசி சற்று இனிப்பு சுவை நிறைந்த அரிசியாக இருப்பதால் இந்த அரிசியில் இனிப்பு உணவுகள் தயாரிப்பது நல்ல சுவையாக இருக்கும். 

‘அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’

குறைந்தது நாற்பது வருடங்கள் கழித்து விளையும் இந்த அரிசியாக இருப்பதால், இதில் அதிக சத்துக்கள் உள்ளது. இதனை அளவோடு உண்பது சிறந்தது. ‘அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதிற்கு ஏற்ப இந்த அரிசி அமிர்தமாக இருக்க அளவோடு உண்பது சிறந்தது. 

சாதமாக இந்த அரிசியினை உண்பதை விட மாவாக அரைத்து தினமும் கஞ்சியாகவும், இட்லி தோசையுடனும் தயாரித்து உண்பது எளிதாக உண்ண உதவும், ஒவ்வொரு நாளிற்கும் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

வரக்கூடிய விசேஷங்களுக்கும் பண்டிகைகளுக்கு ஏற்ப இந்த மூங்கிலரிசியில் பலகாரங்களும் தயாரிக்கலாம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடியதாக இருக்கும். வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவாக இந்த மூங்கிலரிசி இருக்கும்.