வரகு அரிசி எலுமிச்சை சாதம்

வரகு அரிசி சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சிறந்த அன்றாட உணவாகும். கல்லீரல் செயல்பாட்டிற்கு நல்லது. உடலுக்கு தேவையான ஜீரண நீர் மற்றும் நிணநீரை சீராக சுரக்க உதவுகிறது. 

பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசிக்கு சிறந்த மாற்று. சாதாரண சாதம் முதல் வரகு பொங்கல், வரகு இட்லி, வரகு கஞ்சி, வரகு பிரியாணி, முறுக்கு, தட்டை என வித விதமான உணவுகளையும் பலகாரங்களையும் இந்த வரகரிசியில் தயாரிக்கலாம்.

வைட்டமின் சத்துக்கள், இரும்பு, சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்த வரகு எலுமிச்சை சாதம் மிகவும் எளிமையாக தயாரிக்கக் கூடியது. நீரிழிவு, உடல் பருமன், மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு ஏற்றது. இரத்த சோகை உள்ளவர்கள் அவ்வப்பொழுது உட்கொள்ள சிறந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.

மேலும் வரகரிசியின் பயன்கள், சத்துகள் மற்றும் நன்மைகளை தெரிந்துக்கொள்ள – வரகு அரிசி / Kodo Millet in Tamil.

தேவையான பொருட்கள்

  • 1 கப் வரகு அரிசி
  • 1 எலுமிச்சை (பெரியது)
  • 1 சிட்டிகை  மஞ்சள் தூள்
  • செக்கு கடலை எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • 2 பச்சை மிளகாய்
  • 2 பல் பூண்டு

  • சிறு துண்டு  இஞ்சி
  • உப்பு
  • சிறிது கடுகு
  • சிறிது சீரகம்
  • சிறிது உளுந்து
  • சிறிது கடலை பருப்பு
  • சிறிது வறுத்து தோல் நீக்கிய வேர்கடலை

செய்முறை

  • வராகரிசியை நன்கு களைந்து இருபது நிமிடம் ஊறவைக்கவும். 
  • பின் ஒரு பாத்திரத்தில் ஆறு கப் தண்ணீரை கொதிக்கவிடவும். 
  • அதனில் வரகரிசியினை சேர்த்து கொதிவந்ததும் ஐந்து முதல் எட்டு நிமிடம் வெந்ததும் வரகு வெந்ததை சரிபார்த்துவிட்டு அடுப்பை அணைத்து மீதமிருக்கும் நீரினை வடித்து விட்டு லேசாக கிளறி விடவும். 
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலைபருப்பு தாளித்து பச்சைமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு (இடித்து சேர்க்கவும்) சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், உப்பு வேர்கடலை சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும். 
  • வரகு சாதத்தில் இவற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலக்கவும். கொத்தமல்லி தூவவும்.  

.

5 from 1 vote

வரகு எலுமிச்சை சாதம்

வரகு அரிசி சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சிறந்த அன்றாட உணவாகும். கால்லீரல் செயல்பாட்டிற்கு நல்லது. உடலுக்கு தேவையான ஜீரண நீர் மற்றும் நிணநீரை சீராக சுரக்க உதவுகிறது. 
ஆயத்த நேரம் : – 20 minutes
சமைக்கும் நேரம் : – 20 minutes
மொத்த நேரம் : – 40 minutes
பரிமாறும் அளவு : – 2

தேவையான பொருட்கள்

  • 1 கப் வரகு அரிசி
  • 1 எலுமிச்சை ((பெரியது))
  • 1 சிட்டிகை  மஞ்சள் தூள்
  • செக்கு கடலை எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • 2 பச்சை மிளகாய்
  • 2 பல் பூண்டு
  • சிறு துண்டு  இஞ்சி
  • உப்பு
  • சிறிது கடுகு
  • சிறிது சீரகம்
  • சிறிது உளுந்து
  • சிறிது கடலை பருப்பு
  • சிறிது வறுத்து தோல் நீக்கிய வேர்கடலை

செய்முறை

  • வராகரிசியை நன்கு களைந்து இருபது நிமிடம் ஊறவைக்கவும். 
  • பின் ஒரு பாத்திரத்தில் ஆறு கப் தண்ணீரை கொதிக்கவிடவும். 
  • அதனில் வரகரிசியினை சேர்த்து கொதிவந்ததும் ஐந்து முதல் எட்டு நிமிடம் வெந்ததும் வரகு வெந்ததை சரிபார்த்துவிட்டு அடுப்பை அணைத்து மீதமிருக்கும் நீரினை வடித்து விட்டு லேசாக கிளறி விடவும். 
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலைபருப்பு தாளித்து பச்சைமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு (இடித்து சேர்க்கவும்) சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், உப்பு வேர்கடலை சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும். 
  • வரகு சாதத்தில் இவற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலக்கவும். கொத்தமல்லி தூவவும்.  

1 thought on “வரகு அரிசி எலுமிச்சை சாதம்

  1. Himi

    5 stars
    How to cook in cooker

Comments are closed.