வரகு இட்லி

நீரிழிவு, உடல் பருமன், சத்துகுறைபாடு போன்ற பல தொந்தரவுகளுக்கு சிறந்தது இந்த வரகரிசி. பல விதமான வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் நிறைந்தது. எளிமையாக தயாரிக்ககூடிய சிறந்த உணவு இந்த வரகு அரிசி இட்லி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.

மேலும் வரகரிசியின் நன்மைகள், பயன்கள் மற்றும் மருத்துவ குணங்களை தெரிந்துக்கொள்ள – வரகு அரிசி. சிறு தானியங்களைப் பற்றி தெரிந்துக்கொள்ள – சிறு தானியங்கள்.

தேவையான பொருட்கள்

  • 4 கப் வரகு புழுங்கல் அரிசி
  • 1 கப் உளுந்து
  • ¼ ஸ்பூன் வெந்தயம்
  • உப்பு

செய்முறை

  • வரகு புழுங்கல் அரிசியை வெந்தயம் சேர்த்து நன்கு கழுவி மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • உளுந்தை நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • பின் உளுந்தை அரைத்து வரகரிசியையும் அரைத்து உப்பு சேர்த்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

  • மாவு நன்கு புளித்த பின் இட்லி தட்டில் துணி போட்டு அல்லது எண்ணெய் தடவி மாவை ஊற்றி வேகவிடவும்.
  • வெந்ததும் இட்லியை எடுத்து சாம்பார், சட்னியுடன் உண்ணலாம்.

வரகு இட்லி

நீரிழிவு, உடல் பருமன், சத்துகுறைபாடு போன்ற பல தொந்தரவுகளுக்கு சிறந்தது இந்த வரகரிசி. பல விதமான வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் நிறைந்தது.
ஆயத்த நேரம் : – 11 hours
சமைக்கும் நேரம் : – 10 minutes
மொத்த நேரம் : – 11 hours 10 minutes
பரிமாறும் அளவு : – 4