குழியடிச்சான் / குழி வெடிச்சான் அரிசி – நம் பாரம்பரிய அரிசி

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கான அரிசி இந்த குழிவெடிச்சான் என்ற குழியடிச்சான் அரிசி. சிகப்பு நிற அரிசி.

குழி வெடிச்சான் அரிசி பெயர் காரணம்

குழியில் இருக்கும் நீரைக் கொண்டே சிறப்பாக விளைச்சலை அளிக்கும் அரிசி என்பதால் குழியடிச்சான் அல்லது குழி வெடிச்சான் அரிசி என இந்த நெல் அரிசிக்கு பெயர் வந்தது. குழி நீர் என்றாலே தெரிந்துக் கொள்ளலாம், குறைந்த நீரிலே அதிக மகசூலை அளிக்கும் தன்மை கொண்ட பாரம்பரிய நெல் அரிசி.

குழிவெடிச்சான் அரிசி சிறப்புகள்

இந்த அரிசி சம்பா பட்டத்திற்கு ஏற்ற ரகம். இந்த அரிசி மோட்ட ரகம் மற்றும் சிகப்பு நிறதில்லிருக்கும். நூற்றிபத்து நாட்களில் மூன்று முதல் நான்கு அடிவரை வளைந்து விளைச்சலை அளிக்கும் அரிசி.

வறட்டிசியையும் தாங்கி வளரும் நெல் அரிசி, மேலும் பூச்சி நோய் தாக்குதல் இன்றியும் சிறப்பாக விளையக் கூடிய அரிசி. எந்த பூச்சிகொல்லிகளும், நச்சு இரசாயனமும் இன்றி இயற்கை உரங்களைக் கொண்டு சிறப்பாக இந்த நெல் மணிகள் விளையும்.

இந்த நெல் பயிர்கள் கடலோர விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம். காரணம் கடலோரத்திலும் சிறப்பாக விளையும் நெல் அரிசி இது. உவர் நிலம் என்று சொல்லக் கூடிய உப்பு மண்ணிலும் முளைத்து சிறப்பான சாகுபடியை அளிக்கும் பாரம்பரிய நெல் ரகம் இந்த குழி வெடிச்சான் நெல் ரகம்.

குழியடிச்சான் அரிசி சத்துக்கள்

சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கும் குழி வெடிச்சான் அரிசி பல சத்துக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. குறிப்பாக வைட்டமின் சத்துக்கள், தாது சத்துக்கள், நார்சத்துக்களும் கொண்ட அரிசி. பாரம்பரிய அரிசிகளின் ஆய்வுகளில் வெளிவந்த தகவலில் மிக அதிகமான புரத சத்துக்கள் கொண்ட இரண்டு அரசியில் ஒன்று குழியடிச்சான் அரிசி என்பது தெரிய வந்துள்ளது.

குழியடிச்சான் அரிசி நன்மைகள்

குடலில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்ட அரிசி. நீரிழிவு, ஹார்மோன் சார்ந்த நோய்கள், உடல் பருமன் போன்ற தொந்தரவுகளுக்கும் சிறந்த பலனை அளிக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

குழியடிச்சான் உணவுகள்

இந்த சிகப்பரிசியை அரிசியை மாப்பிள்ளை சம்பா அரிசியை சமைப்பதைப் போல் சாதமாகவும் சமைத்து உண்ணலாம் அல்லது இட்லி, தோசை, புட்டு போன்ற பலகார வகைகளுக்கும் ஏற்றது. குழந்தை பெற்ற தாய்மார்கள் இந்த அரிசியைக் கொண்டு கஞ்சி செய்து பருக சிறந்த பலனை பெறலாம். தாய்ப் பால் சுரக்க உதவும் அரிசி.

(1 vote)