தேங்காய் பால் தயாரிப்பது எப்படி

அன்றாடம் பலவிதமான உணவுகளுக்கு நாம் தேங்காயையும் தேங்காய் பாலையும் உபயோகப்படுத்துகிறோம். தேங்காய் பால் கீரைகள் அல்லது காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் இயற்கை இனிப்பு கீர், பாயசம், தேங்காய் பால் கஞ்சி என பல உணவுகளுக்கும் மாட்டுப்பாலுக்கு மாற்றாக தேங்காய் பால் பருகவும் தேங்காயிலிருந்து தேங்காய் பால் எடுக்க வேண்டும். இது சாதாரண விசயமாக தோன்றலாம் ஆனால் தேங்காயிலிருக்கும் கெட்ட கொழுப்பு கொஞ்சம் கூட வராமல் தேங்காயிலிருந்து நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்த பாலை எடுக்க வேண்டுமே.. அதற்கான சில குறிப்புகளுடன் எவ்வாறு தேங்காய்ப் பால் எடுக்கலாம் என பார்போம்.

தேங்காயில் பல விதமான சத்துக்கள் நிறைந்துள்ளது. மனிதர்களுக்கு தேவையான நோய் எதிர்பாற்றலை அளிக்கும் அற்புத உணவு தேங்காய். தேங்காயின் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தேங்காயில் மருத்துவ முறைகள் பல உள்ளன. பலவிதமான உணவுகளை தயாரிக்க தேங்காய் பால் அவசியமானது. அதற்கு தேங்காயிலிருந்து தேங்காய் பாலை எடுக்கிறோம். எவ்வாறு தேங்காயிலிருந்து தேங்காய்ப் பால் எடுப்பது என பார்ப்போம்.

  • தேங்காய்ப் பால் தயாரிக்க நமக்கு தேவையானது ஒரு முற்றிய தேங்காய்.
  • தேங்காயை (சிவப்பு பகுதி வராத அளவு) துருவிக் கொள்ள வேண்டும்.
  • சில்லெடுத்து தயரிப்பதானால் முதலில் சில்லெடுத்து அதன் பின் சிவப்பு தோலை தோல் சீவியை கொண்டு சீவி விட வேண்டும்.
  • பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
  • இந்த தேங்காய் துண்டுகளை அல்லது தேங்காய் பூவை அரவையில் (மிக்ஸியில்) இட்டு அரைத்து அதன் பின் வடிகட்டியை வைத்து வடிகட்டலாம்.
  • கைகளால் அழுத்திப் பிழித்து மெல்ல பிழிய வேண்டும்.
  • அதிகம் அழுத்திப் பிழிகையில் அதில் சிறிதளவு உள்ள கெட்ட கொழுப்புகள் வரக்கூடும்.
  • அதற்கு மாற்றாக அரவையில் முதல் முறை அரைத்து வடிகட்டிய பிறகு மறுபடியும் சிறிது தண்ணீர் விட்டு இரண்டு சுற்று ஓடவிட்டு வடிகட்டலாம்.
  • அதுபோல் இரண்டு மூன்று முறை செய்து பாலை வடித்துக் கொள்ளலாம்.
  • இதை அப்படியேவும் குடிக்கலாம், பாலுக்கு மாற்றாக குடிக்கலாம், கஞ்சி, பாயசம், கொத்தமல்லி போன்ற கீரை சாறுடன் சிறிது தேன் / வெல்லம் சேர்த்தும் பருகலாம்.
  • ஊட்டம் மிகுந்தது, மெல்ல சுவைத்துக் குடித்தால் செரித்தல் சிக்கல் வராது.
(1 vote)