coconut, coconut benefits, thengai payanpgal, ilaneer, tender coconut, health n organics tamil, thennai maram, coconut tree benefits

தேங்காய் மருத்துவம்

ஒரு ஆண்டுக்கு எவ்வளவு நாட்கள் உண்டோ அவ்வளவு மருத்துவ குணங்களும் உபயோகமும் கொண்டது தேங்காய்.

இந்தியா மட்டுமில்லாமல் உலகில் பல நாடுகளில் இந்த தேங்காயை பயன்படுத்தும் பழக்கம் உண்டு.

தேங்காயில் உள்ள சத்துகளின் சதவீதம்
நீர்ச்சத்து 36 சதவீதம்
புரதச் சத்து 4.5 சதவீதம்
கொழுப்புச் சத்து 41 சதவீதம்
கார்போஹைட்ரேட் சத்து 13
பிற 4 முதல் 5 சதவீதம்

coconut, coconut benefits, thengai payanpgal, ilaneer, tender coconut, health n organics tamil, thennai maram, coconut tree benefits

100 கிராம் தேங்காயில் 1.7 கி இரும்பு, ௦.௦1 கி கால்சியம் ௦.24 கி பாஸ்பரஸ் ஆகிய சத்துக்களும் உண்டு. தேங்காய் சிறந்த கொழுப்புப் பொருளாயினும் எளிதில் சீரணமாகும் சிறப்புடையது. மற்ற எண்ணெய்களை விட தேங்காய் எண்ணெய் சுலபமாக ஜீரணமாகும். ஆனால் இந்த தேங்காயையும், தேங்காய் எண்ணெயையும் அடுப்பிலிட்டு சமைக்கும்பொழுது அதன் கொழுப்பு சத்துக்கள் உருக்குலைந்து கடினமாகவும், செரிமானமின்மையையும் அளிக்கும். இவ்வாறு அடுப்பில் கொதிக்கவைத்து உண்பது உடலுக்கும் உகந்ததல்ல.

  • மூலநோய் உள்ளவர்கள் தேங்காயை அடிக்கடி சேர்ப்பதால் அதன் உக்கிரம் குறையும்.
  • வாய்ப்புண் உள்ளவர்கள் தேங்காய்த்துருவல் வாயில் போட்டு மென்று அதையே உதட்டிலும் தடவி வர புண் ஆறும்.
  • வயிற்றுக்கட்டி நீங்க சில தேங்காய் கீற்றுகளை உப்புக்குள் அமிழ்த்தி வைத்திருந்து மறுநாள் ஒரு கீற்று சாப்பிடவும். உடல் நிலைக்கேற்ப மூன்று நாள் சாப்பிட கட்டி நீங்கும்.
  • கீரைப்பூச்சி வயிற்றிலிருந்து வெளியேற, அரை மூடி தேங்காயைத் துருவி பால் எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும்.
  • தேங்காய் பருப்பு இரத்தத்தை சுத்தம் செய்யும்.
  • தேங்காய் கீழ் வாதம், பாரிச வாதம் போக்கும். தாதுவை உண்டாக்கும்.
  • இடுப்பு வலியைப் போக்கவும், வாய் துர்நாற்றத்தை நீக்கும் ஆற்றலும் கொண்டது.
(1 vote)