சிறுநீரக கற்கள் கரைய 5 வழிகள்

சிறுநீரகத்துக்கு மிக சிறந்த ஒரு மூலிகை என்றால் சிறுபீளையும் (பொங்கல் பூ), சிறு நெருஞ்சியும். இந்த இரண்டு மூலிகைகளையும் சம அளவு எடுத்து மை போல் அரைத்து ஒரு கொட்டைப் பாக்கு அளவு தயிரில் கலந்து காலை, மாலை என இரண்டு மாதம் சாப்பிட கற்கள் கரையும்.

சிறு பீளையை ரசமாக அல்லது சூப்பாகவோ வைத்து அவ்வப்போது சாப்பிட நல்ல ஒரு பலனை பெறலாம். சிறுநெருஞ்சியை சிறிதளவு தண்ணீரில் சீரகம் சேர்த்து ஒரு இரவு ஊற வைத்து பின் அந்த தண்ணீரை எடுத்து குடிப்பதால் சிறுநீரகக்கற்கள் கரையும். இந்த முறையில் ஒரு வாரம் குடிப்பதால் நல்ல பலனை பெறலாம்.

சிறுநீரக கற்களை கரைக்க மற்றொரு மிகச்சிறந்த எளிமையான மருந்து வாழைத்தண்டு. இந்த வாழைதண்டினை அவ்வப்போது சமைத்து சாப்பிட சிறுநீரக கற்கள் விரைவாக கரையும். வாழைத்தண்டு சாறு தயாரித்து குடிக்க விரைவாக கற்கள் கரையும்.

சிறுகீரை வேர், நெருஞ்சில் வேர், சிறுபூனை வேர், சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து நசுக்கி தண்ணீரில் 100 கிராம் அளவு ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து கால் லிட்டர் ஆகும் வரை காய்ச்சி கசாயமாக தயாரித்து காலையில் அரை டம்ளர், இரவு அரை தம்ளர் என குடித்து வர கல்லடைப்பு தீரும்.

யானை நெருஞ்சில் என்ற பெரு நெருஞ்சில் மூலிகையும் சிறுநீரகக் கற்களை கரைக்கும் ஒரு அற்புதமான மருந்து. யானை நெருஞ்சில் செடிகளை தண்ணீரில் ஊறவைத்து பின் கிடைக்கும் கொழகொழப்பான தண்ணீரை எடுத்து பருகுவதால் சிறுநீரகக்கற்கள் ஒரு வாரத்திற்குள் கரையும்.

தொட்டாசிணுங்கி வேரை நன்கு இடித்து தண்ணீரில் இட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி ஒரு ஸ்பூன் அளவு நாள்தோறும் மூன்று வேளை அருந்தி வர சிறுநீரகக் கற்கள் கரையும்.

மேலும் சிறுநீரக கற்களைப்பற்றிய சில தகவல்களை சிறுநீரக கற்கள் என்ற பகுதியில் பார்க்கலாம்.

(1 vote)