சிறுநீரக கற்கள்

விளையாட்டாகவும் விருப்பத்திற்காகவும் உண்ணும் பல உணவுகள் நமக்கு வினையாக அமைவது இயல்பு. இன்றோ நேரமின்மை, அவசர யுகம், வேலை, குழந்தைகளின் விருப்பம், பறக்கும் தொழில்நுட்பம் என பலபலக் காரணங்களால் வீடுகளில் சமைக்காது பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், நிறமூட்டிகள், சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள் என சந்தையில் கிடைக்கும் செயற்கை உணவுகளை அடுக்கி கொண்டே போகலாம்.

இந்த உணவுகளில் இருக்கும் அதிகப்படியான செயற்கை உப்புக்கள் நாக்கிற்கு சுகமான சுவையைக் கொடுக்க நமது உடலை அன்றாடம் எந்த வெருப்பையும் காட்டாது தூய்மைப்படுத்தும் சிறுநீரகத்தை அதிகமாக பாதிக்கிறது.

நாங்கள் பழைய பஞ்சாங்கங்கள் இல்லை நவீன இல்லத்தரசிகள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சந்தையில் கிடைக்கும் பொட்டல உணவுகளை அளிக்க, அவற்றால் அதிகம் பாதிக்கப் படுவது என்னவோ ஆண்கள் தான் என்ற நிலை இன்று மாறி பெண்களும் இதற்கு விதிவிலக்கில்லை என்ற நிலை உருவாகி உள்ளது.

குப்பை உணவுகளால் அதிகமாக பதிக்கப்படும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது. பொதுவாக நாற்பது வயதை கடந்தவர்களுக்குத் தான் இந்த பாதிப்புகள் ஏற்பட்டது ஆனால் இன்று எல்லா வயதினரும் இந்த சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுகின்றனர்.

வலியும் வேதனையும் அதிகம் நிறைந்த இந்த கற்கள் சிறிய அளவு முதல் பெரிய அளவு வரை பலரை பாதிக்கிறது. ஒருமுறை கற்கள் உருவாக உணவில் மற்றதை ஏற்படுத்தவில்லை என்றால் அடுத்தடுத்து பாதிப்புகள் அதிகரிக்கிறது.

உடனே அறுவைசிகிச்சை என்பது தான் வழி என்று இல்லாது அதிக நீர் சத்துள்ள சாறுகளை குடிப்பதன் மூலமும் மண் பானையில் ஆறிய தண்ணீரை ஊற்றி அதனை உட்கொள்வதன் மூலமும் கல்லை கரைத்து வெளியேற்றலாம்.

சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற சில எளிய வழிகள்…

ஒவ்வொரு நாள் காலையும் ஒவ்வொரு சாறுகள் என்று குடித்தாலே கல் மட்டுமில்லாது பல பல தொந்தரவுகளும் காணாமல் கரைந்து விடும்.

சிறு நெருஞ்சில்

மண் தரையில் நடந்த பலருக்கு பந்து போல் இருக்கும் முட்களால் தாக்குதல் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். இந்த முட்களின் காய்களையும் சிறு சிறு மஞ்சள் பூக்களையும் கொண்டிருக்கும் கொடி தான் சிறு நெருஞ்சில். இந்த நெருஞ்சில் செடியின் இலைகளை சுக்கு மல்லி காபியுடன் சேர்த்து கொதிக்க விட்டு அருந்துவதாலும் அல்லது சாறை எடுத்து பசு மோருடன் கலந்து அருந்துவதாலும் இந்த கல்லை சுலபமாக கரைக்கலாம்.

யானை நெருஞ்சில்

சிறு சிறு முட்கள் கொண்ட காய்களை கொண்டிருக்கும் சிறுநெரிஞ்சில் மட்டுமல்லாது யானை நெருஞ்சில் என்று சொல்லக்கூடிய பெரு நெருஞ்சில் எளிதாக சிறுநீரக கல்லை கரைத்து வெளியேற்றும்.

சிறு முற்களாக இல்லாமல் சற்று பெரிய முட்களைக் கொண்ட காய்களைக் கொண்டிருக்கும் செடி தான் இது, இந்த முட்களின் தாக்குதலும் மண்ணில் நடந்தவர்களுக்கு நிச்சயம் இருக்கும்.

எல்லா இடங்களிலும் வளரக்கூடிய இந்த யானை நெருஞ்சில் செடிகளை நன்கு அலசி ஒரு பாத்திரத்தில் குடிநீரை ஊற்றி அதில் இதனை நன்கு மணிநேரம் ஊறவைக்கவேண்டும். நன்கு மணி நேரம் கழித்து இந்த செடிகளை அகற்றி அந்த நீரினை அருந்த கற்கள் கரையும். இந்த நீர் சற்று கொழ கொழப்பாக ஜெல் போல இருக்கும். இதனை ஒரு வாரம் தொடர்ந்து அருந்த நல்ல பலன் கிடைக்கும்.

மூக்கிரட்டை கீரை

சென்னை முதல் சிறு பட்டி தொட்டி வரை அனைத்து வெப்பமான இடங்களிலும் வளரக்கூடிய மற்றொரு கீரை மூக்கிரட்டை கீரை. இந்த கீரையின் இலைகளை சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகு சேர்த்து கொதிக்க வைத்து சூப்பாக அருந்த சிறுநீரை பெருக்கி கல்லை கரைக்கும்.

கீரைகள்

கீரைகளின் வரிசையில் கருவேப்பிலை, கொத்தமல்லி சாறுகளையும் எடுத்து அதனுடன் சிறிது மிளகு அல்லது பனங்கருப்பட்டி சேர்த்து காலையில் அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை சாறு, இயற்கையில் விளைந்த வாழைத்தண்டு சாறு, நாட்டு இளநீர், பூசணி சாறு, முள்ளங்கி சாறு போன்றவைற்றையும் தேவைப்பட்டால் கருப்பட்டி அல்லது மிளகு சேர்த்து அருந்த கல் கரையும். 

எந்த வலியும் இல்லாது இந்த சாறுகளை அன்றாடம் எடுத்துக்கொள்ள சிறுநீர் கல் கரைவது மட்டுமில்லாது மீண்டும் வராமலும் தடுக்கலாம்.

சிர்நீரக கற்களை பற்றியும் சிறுநீரக கற்களை கரைக்கும் சில வழிகளையும் இந்த காணொளியில் காணலாம். மேலும் எளிமையாக 5 வழிகளில் எவ்வாறு சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்றலாம் என்றும் தெரிந்துக்கொள்ளலாம்.

சிறுநீரக கற்களை கரைத்து சிறுநீரகத்தை பலப்படுத்தும் சிறுபீளை ரசம்

https://www.youtube.com/watch?v=njE9OL_Zy1E

சிறுநீரக கற்களைப் பற்றியும் சிறுநீரக கற்கள் உருவாக காரணங்கள், அறிகுறிகள் மற்றும் உட்கொள்ள வேண்டிய தவிர்க்க வேண்டிய உணவுகள்…

https://www.youtube.com/watch?v=r2ZqZ6nm8b0

சிறுநீரக கற்களை மிக எளிமையாக கரைக்கும் சிறு நெரிஞ்சில் நீர்…

https://www.youtube.com/watch?v=1vLg2uaYoM4