இஞ்சி பூண்டு சோறு

உடலில் ஏற்படும் அசதி, வலிகளுக்கு மிக சிறந்த உணவு. செரிமானத்தை அதிகரிக்கும். அவ்வப்பொழுது இதனை தயாரித்து உண்பதால் உடலில் ஏற்படும் பல தொந்தரவுகள் நீங்கும்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் கிச்சிலி சம்பா புழுங்கல் அரிசி (எந்த புழுங்கல் அரிசியை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்)
  • சிறிது உளுந்து
  • சிறிது சீரகம்
  • 2 துண்டு இஞ்சி
  • 15 – 20 பல் பூண்டு

  • 4 – 5 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • 2 ஸ்பூன் மல்லித் தூள்
  • 10 வெங்காயம்
  • உப்பு
  • பெருங்காயம்

செய்முறை

  • பின் ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சீரகம், உளுந்து தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயத்துடன் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கிய பின் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு விழுது, பெருங்காயம், மல்லித்தூள் சேர்த்துக் கிளறவும்.

  • பச்சை வாசனை போகும்வரை வதக்கிவிட்டு உப்பு சேர்த்து அடுப்பை அணைத்து வடித்த கிச்சிலி சம்பா சாதத்தையும் சேர்த்து கிளறவும்.
  • அவ்வளவுதான் சூடான சுவையான இஞ்சி பூண்டு சாதம் தயார்.
5 from 1 vote

இஞ்சி பூண்டு சோறு

உடலில் ஏற்படும் அசதி, வலிகளுக்கு மிக சிறந்த உணவு. செரிமானத்தை அதிகரிக்கும். அவ்வப்பொழுது இதனை தயாரித்து உண்பதால் உடலில் ஏற்படும் பல தொந்தரவுகள் நீங்கும்.
Main Course
Indian
Ginger Garlic Rice Recipe
ஆயத்த நேரம் : – 1 hour
சமைக்கும் நேரம் : – 20 minutes
மொத்த நேரம் : – 1 hour 20 minutes

தேவையான பொருட்கள்

  • 1 கப் கிச்சிலி சம்பா புழுங்கல் அரிசி (எந்த புழுங்கல் அரிசியை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்)
  • சிறிது உளுந்து
  • சிறிது சீரகம்
  • 2 துண்டு இஞ்சி
  • 15 – 20 பல் பூண்டு
  • 4 – 5 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • 2 ஸ்பூன் மல்லித் தூள்
  • 10 வெங்காயம்
  • உப்பு
  • பெருங்காயம்

செய்முறை

  • முதலில் கிச்சிலி சம்பா புழுங்கல் அரிசியை இரண்டு மூன்று முறை நனறாக களைந்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து சாதமாக வடித்துக்கொள்ள வேண்டும்.
  • இஞ்சி பூண்டை நன்கு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • பின் ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சீரகம், உளுந்து தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயத்துடன் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கிய பின் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு விழுது, பெருங்காயம், மல்லித்தூள் சேர்த்துக் கிளறவும்.
  • பச்சை வாசனை போகும்வரை வதக்கிவிட்டு உப்பு சேர்த்து அடுப்பை அணைத்து வடித்த கிச்சிலி சம்பா சாதத்தையும் சேர்த்து கிளறவும்.
  • அவ்வளவுதான் சூடான சுவையான இஞ்சி பூண்டு சாதம் தயார்.
(1 vote)

1 thought on “இஞ்சி பூண்டு சோறு

Comments are closed.