கிச்சிலி சம்பா அரிசி சமைக்கும் முறை

நவீன அரிசிகளைக் காட்டியும் இந்த பாரம்பரிய அரிசிகள் ஒவ்வொருவரின் பாரம்பரிய குணங்களை காப்பதுடன் அவற்றை அடுத்த தலைமுறையினருக்கு நல்ல முறையில் எந்த பாதிப்பும் இல்லாது கடத்தவும் உதவுகிறது. 

சன்ன ரகமான இந்த பாரம்பரிய அரிசியினை விளைவிக்க எந்த இரசாயனமும், பூச்சி கொல்லியும் (Organic Rice) தேவையில்லை. பாரம்பரிய அரிசி என்பதால் இந்த கிச்சிலி சம்பா இயற்கையாகவே நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இன்றி விளையும் தன்மை கொண்டது. இயற்கையாக, இயற்கையான முறையில் விளையும் இந்த அரிசி உடலுக்கும் நமது உறுப்புகளுக்கும் எந்த தீங்கும் அளிக்காது பாதுகாக்கிறது.

உடலுக்கும் மனதிற்கும் வலுவையும், தெம்பையும் அளிக்கும் அரிசியாகவும் இந்த பாரம்பரிய அரிசி உள்ளது. பட்டை தீட்டாத இந்த கிச்சிலி சம்பா அரிசியில் வைட்டமின், நார் சத்து, தாது உப்புக்கள் மற்றும் சிறு அளவில் புரதச்சத்தும் உள்ளது. இதுமட்டுமல்ல அன்று பால் சுரப்பிற்கு ஏற்ற அரிசியாகவும் இந்த அரிசி இருந்தது. அந்த காலங்களில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு இந்த அரிசி சோறு கொடுப்பது வழக்கமாக இருந்தது. 

அன்றாடம் பூச்சி கொல்லிகளும், ரசாயனங்களும் தெளித்த நவீன் அரிசியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் பருமன்,  சர்க்கரை வியாதி, உடல் வலி, உடல் களைப்பு, ரத்த சோகை, மலச்சிக்கல் உட்பட பல அன்றாடம் ஏற்படும் தொந்தரவுகளுக்கு மருந்தாக அமைகிறது இந்த கிச்சிலி சம்பா அரிசி.   

மேலும் கிச்சிலி சம்பா அரிசியைப்பற்றி பல சுவாரசியமான பல தகவல்களை தெரிந்துக்கொள்ள – கிச்சிலி சம்பா

வெள்ளை அரிசியை ஆரோக்கியமான சாதமாக தயாரிக்க நினைப்பவர்கள் பிரஷர் குக்கரை பயன்படுத்துவதை தவிர்ப்பது சிறந்தது.

கிச்சிலி சம்பா சாதத்தை வடித்து உட்கொள்வது உடலுக்கு பல பல நன்மைகளை அளிக்கும். குறிப்பாக நீரிழிவு, உடல்பருமனுக்கு சிறந்தது.

கிச்சிலி சம்பா அரிசி சமைக்க

தேவையான பொருட்கள்

  • 1 கப் கிச்சிலி சம்பா அரிசி
  • தண்ணீர்

கிச்சிலி சம்பா அரிசியை முதலில் ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளலாம்.

பின் ஒரு மண் சட்டியில் ஒரு பங்கிற்கு நான்கு முதல் ஐந்து பங்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதிவந்தபின் ஊறவைத்த அரிசியை அதனுடன் சேர்க்க வேண்டும். நன்கு கொதிவந்தபின் அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.

பத்து பதினைந்து நிமிடங்களில் அரிசி நன்கு வெந்து தயராக இருக்கும். அடுப்பை அணைத்து மீதமிருக்கும் நீரினை வடித்துவிடவேண்டும். அவ்வளவுதான் சூடான சத்தான கிச்சிலி சம்பா சாதம் தயார். நெய், பருப்பு, குழம்பு, ரசம், மோர் என அனைத்துடனும் உண்ண சுவையான சாதம்.

கிச்சிலி சம்பா அரிசி சமைக்கும் முறை

(4 votes)



அன்றாடம் பூச்சி கொல்லிகளும், ரசாயனங்களும் தெளித்த நவீன் அரிசியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் பருமன்,  சர்க்கரை வியாதி, உடல் வலி, உடல் களைப்பு, ரத்த சோகை, மலச்சிக்கல் உட்பட பல அன்றாடம் ஏற்படும் தொந்தரவுகளுக்கு மருந்தாக அமைகிறது இந்த கிச்சிலி சம்பா அரிசி.  


⏲️ ஆயத்த நேரம்
20 mins

⏲️ சமைக்கும் நேரம்
20 mins

🍴 பரிமாறும் அளவு
2

🍲 உணவு
சோறு


தேவையான பொருட்கள்
  • 1 கப் கிச்சிலி சம்பா அரிசி
  • தண்ணீர்
செய்முறை
  1. கிச்சிலி சம்பா அரிசியை முதலில் ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளலாம்.
  2. பின் ஒரு மண் சட்டியில் ஒரு பங்கிற்கு நான்கு முதல் ஐந்து பங்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  3. நன்கு கொதிவந்தபின் ஊறவைத்த அரிசியை அதனுடன் சேர்க்க வேண்டும்.
  4. நன்கு கொதிவந்தபின் அடுப்பை சிறுதீயில் வைத்து வேகவிடவும்.
  5. பத்து பதினைந்து நிமிடங்களில் அரிசி நன்கு வெந்து தயராக இருக்கும்.
  6. அடுப்பை அணைத்து மீதமிருக்கும் நீரினை வடித்துவிடவேண்டும்.
  7. அவ்வளவுதான் சூடான சத்தான கிச்சிலி சம்பா சாதம் தயார்.
  8. நெய், பருப்பு, குழம்பு, ரசம், மோர் என அனைத்துடனும் உண்ண சுவையான சாதம்.

(4 votes)

5 thoughts on “கிச்சிலி சம்பா அரிசி சமைக்கும் முறை

  1. Ammu

    வடிக்காம செய்யலாமா ?

    1. admin Post author

      வடித்து வெள்ளை அரிசி உண்பது சிறந்தது

  2. Savitri

    5 stars
    There are two opinions about draining. It’s said that along either starch, even micro nutrients are list when you drain the rice cooked water. Please can you clarify. I am really confused.

    1. admin Post author

      5 stars
      Thanks for your query. Yes, it contains some micronutrients. but no problem in draining polished white rice starch water as it contains more starch only. Don’t remove starch from traditional red rice or black rice.

Comments are closed.