எலும்பு வலு பெற

உடலுக்கு மிகமுக்கியமான அமைப்பையும் வடிவத்தையும் அளிக்கும் எலும்புகள் வலுவாகவும், பலமாகவும் இருக்க சில எளிய வழிமுறைகளையும் வீட்டுக் குறிப்புகளையும் பார்க்கலாம்.

காலை சூரிய ஒளி எலும்புகளை வலுபெற செய்யும். எப்பேர்ப்பட்ட எலும்பு நோய், மூட்டுவலி உள்ளவர்களும் காலையில் சூரிய ஒளியில் இருக்க நாளடைவில் அது மறையும்.

அனைவருக்கும் மிக எளிமையாகவும் சாமானியருக்கும் குறைந்த விலையில் நிறைந்த சத்துக்களைக் கொடுக்கும் கேழ்வரகு சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்த சிறுதானியம். அவ்வப்பொழுது ராகியை உண்டுவர எலும்புகள் பலப்படும்.

கீரைகளில் சுண்ணாம்பு சத்துக்கள் அதிகமுள்ளது. தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கீரைகள் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு கீரையை உண்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும், எலும்புகள் வலுபெறும்.

வண்ண மருத்துவ முறையில் அடர் நீல நிற (violet) ஒளி எலும்புகளை உறுதிப்படுத்தும்.

கோபுரம் தாங்கி மூலிகையின் வேரை நிழலில் உலர்த்தி பொடி கற்கண்டு சேர்த்து காலை, மாலை நெய்யில் சாப்பிட எலும்புகள் வலுபெறும்.

அன்றாடம் ஏதேனும் ஒரு வகையில் எள், உளுந்து போன்றவற்றை உண்ண எலும்புகள் உறுதியுடன் இருக்கும்.

(4 votes)