அத்திப்பழம் ஜூஸ் / Dry Fig Juice

கருப்பைக்கு பலத்தை அளிக்கும் சிறந்த அத்திப்பழம் ஜூஸ். ஆண்மைக் குறைபாட்டிற்கு சிறந்த பலனளிக்கும். கருசிதைவை தடுக்கும். தோல் நோய், மூல நோய், ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, வயிற்று நோய், கண் சம்மந்தமான தொந்தரவுகளுக்கும் சிறந்தது. கருவுற்ற பெண்கள் பருக சிறந்தது. உடலுக்கு தேவையான பல சத்துக்களை அளிக்கும் அற்புத பானம் இந்த அத்திப்பழம் ஜூஸ். குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் தேவையான பல சத்துக்களை கொண்டுள்ளது. அவ்வப்பொழுது தயாரித்துக் கொடுக்க நல்ல பலனை பெறலாம். நாட்டு ரக அத்திப் பழங்கள் கிடைக்கும் காலங்களில் அவற்றை பக்குவப்படுத்தி இயற்கை முறையில் பதப்படுத்தி சேமித்து வைக்க வருடமுழுவதும் பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

  • 10 உலர்ந்த அத்திப்பழம்
  • 2 கப் தண்ணீர்
  • 2 ஸ்பூன் தேன்
  • 1 சிட்டிகை ஏலக்காய்த்தூள் விரும்பினால் சேர்த்துக் கொள்ளலாம்.

செய்முறை

  • ½ கப் தண்ணீரில் பத்து உலர்ந்த அத்திப் பழங்களை 6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  • 6 மணி நேரத்திற்குப் பின் அத்திப் பழங்களை மிக்ஸியில் இட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அரைத்தவற்றுடன் மேலும் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து அதனுடன் தேன் ஏலக்காய்த்தூள் சேர்த்து பருகலாம்.
  • சுவையான அத்திப்பழம் ஜூஸ் தயார்.

உலர் அத்திப்பழம் ஜூஸ்

கருப்பைக்கு பலத்தை அளிக்கும் சிறந்த அத்திப்பழம் ஜூஸ். ஆண்மைக் குறைபாட்டிற்கு சிறந்த பலனளிக்கும். கருசிதைவை தடுக்கும். தோல் நோய், மூல நோய், ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, வயிற்று நோய், கண் சம்மந்தமான தொந்தரவுகளுக்கும் சிறந்தது.
ஆயத்த நேரம் : – 6 hours
மொத்த நேரம் : – 6 hours

தேவையான பொருட்கள்

  • 10 உலர்ந்த அத்திப்பழம்
  • 2 கப் தண்ணீர்
  • 2 ஸ்பூன் தேன்
  • 1 சிட்டிகை ஏலக்காய்த்தூள் விரும்பினால் சேர்த்துக் கொள்ளலாம்

செய்முறை

  • ½ கப் தண்ணீரில் பத்து உலர்ந்த அத்திப் பழங்களை 6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  • 6 மணி நேரத்திற்குப் பின் அத்திப் பழங்களை மிக்ஸியில் இட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அரைத்தவற்றுடன் மேலும் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து அதனுடன் தேன் ஏலக்காய்த்தூள் சேர்த்து பருகலாம்.
  • சுவையான அத்திப்பழம் ஜூஸ் தயார்.