வேப்ப எண்ணெய் கரைசல்

இயற்கை பூச்சி விரட்டி தயாரிக்கும் முறை

இரசாயன உரங்களால் உடல் ஆரோக்கியமும், மண்வளமும் பெரியளவில் பாதிப்படைவதுடன் சுற்றுசூழலும் மாசடைகிறது. இதற்கு சிறந்த மாற்றாக இயற்கை உரங்களும் இயற்கை பூச்சி விரட்டிகளும் உள்ளது.

இயற்கை விவசாயத்தில் ஒரு முக்கிய பூச்சி விரட்டியாக செயல்படும் தன்மை கொண்டது வேப்ப எண்ணெய் கரைசல். இதனை குறைந்த செலவில் தயாரித்து பயிர்களுக்கு தெளிப்பதால் பூச்சி, நோய் தாக்கத்திலிருந்து பயிரை பாதுகாக்கலாம். இயற்கை விவசாயம் செய்பவர்கள் மற்றும் மாடித் தோட்டம், வீட்டு தோட்டம் செய்பவர்கள் பயன்படுத்த சிறந்த பலனளிக்கும்.

செடிகளில் ஏற்படும் பூச்சி தாக்குதலை போக்கும் சிறந்த பூச்சி விரட்டியாக பாதுகாப்பை அளிக்கும் கரைசல் இந்த வேப்ப எண்ணெய் கரைசல்.

வேப்ப எண்ணெய் முற்றிலும் இயற்கையானது மற்றும் கரிமமானது. இந்த பாரம்பரிய பூச்சிக்கொல்லி வீட்டு தாவரங்களில் பொதுவான பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும், விரட்டவும் மிக பயனுள்ளதாக இருக்கும். இது பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது.

வேப்ப எண்ணெய் கரைசல் தயாரிக்கும் முறை

ஒரு தேக்கரண்டி வேப்ப எண்ணெயை ஒரு லிட்டர் தண்ணீரில் கலக்கவும். அவ்வளவு தான் வேப்ப எண்ணெய் கரைசல் தயார்.

இதனை தாவரங்களில் தெளிக்கவும். இலைகளில் தெளிக்க வேண்டாம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க சிறந்த பலனளிக்கும்.அனைத்து வகையான பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் சிறந்த எளிமையான கரைசல்.

பூச்சிகளை கட்டுப்படுத்த வேம்பு

நாம் பயன்படுத்தும் வேம்பில் 18 வகையான ஆல்கலாய்டு உள்ளது. இதில் முக்கியமானது அஸாடிராக்டின் என்ற ஆல்கால்ய்டு. இதனால் வேப்ப விதையில் எடுக்கப்படும் வேப்பெண்ணை சிறந்த இயற்கை முறைப் பூச்சி மருந்தாகவும், நோய்களை கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது.

மேலும் பல இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டிகளுக்கு

(1 vote)