பூசணிக்காய் வெள்ளரிக்காய் ஜூஸ்

உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றும் சிறந்த ஜூஸ் இந்த பூசணிக்காய் ஜூஸ். அஜீரணம், மலச்சிக்கல் தொடங்கி புற்றுநோய் தடுப்பு காரணியாகவும் இந்த ஜூஸ் இருக்கும். உடல் உஷ்ணத்தை குறைக்கும் அற்புத சாறாகவும் இருக்கும். மூலம், வயிற்றுப்

புண், செரிமானமின்மைக்கும் சிறந்தது.மருந்து மாத்திரைகளால் வரும் சிறுநீரக தொந்தரவுகள், சிறுநீரகத்தில் வரும் பதிப்புகளையும் நீக்கும் சாறு.

உடல் எடையை சீராக்கும் சிறந்த பானம். நீர் சத்துக்கள் அதிகம் கொண்ட சிறந்த பூசணி ஜூஸ்.

பல விதமான வைட்டமின் சத்துக்கள் குறிப்பாக வைட்டமின் சி, வைட்டமின் பி, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து, நார்சத்துக்களும் நிறைந்தது.

உடலில் ஏற்படும் நோய் தொற்றையும் அழித்து வெளியேற்றும் சிறந்த சாறு. காலையில் இதனை பருக உடல் ஆரோக்கியம் மேம்படும். வெண்பூசணி சாறு வேறு முறை – வெண்பூசணி சாறு.

தேவையான பொருட்கள்

  • 1 கப் பூசணிக்காய்
  • ½ கப் வெள்ளரிக்காய்
  • ½ எலுமிச்சை
  • சிறிது புதினா

செய்முறை

  • முதலில் பூசணிக்காய், வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.
  • பின் பூசணிக்காய், வெள்ளரிக்காய், புதினா ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் அரைத்தவற்றை துணியில் நன்கு பிழிந்து வடிகட்டிக் கொள்ளவேண்டும்.
  • இந்த சாறுடன் அரைமூடி எலுமிச்சை சாறு கலந்து அதனுடன் சிறிது மிளகுதூள், இந்துப்பு கலந்து பருகலாம்.
  • சத்தான சுவையான பூசணிக்காய், வெள்ளரிக்காய் சாறு தயார்.

பூசணிக்காய் வெள்ளரிக்காய் ஜூஸ்



உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றும் சிறந்த ஜூஸ் இந்த பூசணிக்காய் ஜூஸ். அஜீரணம், மலச்சிக்கல் தொடங்கி புற்றுநோய் தடுப்பு காரணியாகவும் இந்த ஜூஸ் இருக்கும். உடல் உஷ்ணத்தை குறைக்கும் அற்புத சாறாகவும் இருக்கும். மூலம், வயிற்றுப்புண், செரிமானமின்மைக்கும் சிறந்தது.


⏲️ ஆயத்த நேரம்
5 mins

⏲️ தயாரிக்கும் நேரம்
5 mins

🍴 பரிமாறும் அளவு
2

🍲 உணவு
பானம்


தேவையான பொருட்கள்
  • 1 கப் பூசணிக்காய்
  • ½ கப் வெள்ளரிக்காய்
  • ½ எலுமிச்சை
  • சிறிது புதினா
செய்முறை
  1. முதலில் பூசணிக்காய், வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.
  2. பின் பூசணிக்காய், வெள்ளரிக்காய், புதினா ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  3. பின் அரைத்தவற்றை துணியில் நன்கு பிழிந்து வடிகட்டிக் கொள்ளவேண்டும்.
  4. இந்த சாறுடன் அரைமூடி எலுமிச்சை சாறு கலந்து அதனுடன் சிறிது மிளகுதூள், இந்துப்பு கலந்து பருகலாம்.
  5. சத்தான சுவையான பூசணிக்காய், வெள்ளரிக்காய் சாறு தயார்.

1 thought on “பூசணிக்காய் வெள்ளரிக்காய் ஜூஸ்

  1. Hari

    5 stars
    Best Detox Drink

Comments are closed.