வெள்ளறுகு – நம் மூலிகை அறிவோம்

Enicostema axillare; வெள்ளறுகு; வல்லாரி

கரிசல் நிலத்தில் வளரும் இயல்புடைய இந்த செடி, தமிழகம் எங்கும் வளரக்கூடிய ஒரு சிறு செடி அமைப்பை சேர்ந்தது இந்த வெள்ளறுகு செடி. நான்கு கோணமான தண்டுகள் உடையது இந்த வெள்ளறுகு. ஈட்டி வடிவம் கொண்ட நீண்ட தனி இலைகளை எதிரிலை குறுக்கு மறுக்கு அடுத்ததில் அமையப்பெற்றிருக்கும் செடி வகை இது. வெளிறிய இலைகளை மாற்றடுக்கில் கொண்ட கணுக்களில் வெண்மையான சிறு பூக்கள் தொகுப்பாகக் காணப்படும்.

இதனுடைய சமூகமே மருத்துவ குணம் வாய்ந்தது. செடி முழுமையும் மருத்துவப் பயனுடையது. நோய் நீக்கி உடல் தேறவும், பசியை அதிகரிக்கவும், தாது பலம் பெருக்கவும் மருந்தாக பயன்படுகிறது. உடலுக்கு சிறந்த ஒரு வலிமையைக் கொடுக்கக்கூடியதகவும், மலமிளக்கியாகவும், வெப்பத்தை அழிக்கக்கூடிய தன்மையும் கொண்டு இந்த மூலிகை. இதன் சமூலமே கைப்பு (கசப்பு )சுவையைக் கொண்டது.

தோல் நோய்கள், நரம்புக் கோளாறுகள், வயிற்று வலி, அரிப்பு, குடல்வாயு, சிறுசிரங்கு, வாத நோய், ஆண்மை குறைவு, விஷம் அல்லது விஷக்கடி, கருப்பை கோளாறுகள் என பல பிரச்சனைகளுக்கு சிறந்த ஒரு மருந்தாக இருக்கக்கூடியது.

பெண்களுக்கு வெள்ளறுகு

பெண்களுக்கு வெள்ளறுகு – வெள்ளறுகு சமூலத்தை நன்கு அரைத்து ஒரு ஸ்பூன் அளவு மாதவிலக்கான மூன்று நாட்கள் கொடுக்க மாதவிலக்குக் கோளாறுகள், கருப்பை கோளாறுகள் தீரும்.

வெள்ளறுகு குடிநீர்

பல நோய்களுக்கு – வெள்ளறுகு சமூகத்தை குடிநீரில் கொதிக்க வைத்து பருகி வந்தால் தோல் நோய்கள், நரம்புக் கோளாறுகள், வயிற்று வலி, அரிப்பு, குடல்வாயு, சிறுசிரங்கு, வாத நோய், ஆண்மை குறைவு, விஷம் அல்லது விஷக்கடி, கருப்பை கோளாறுகள் போன்ற மேற்கூறிய அனைத்து விதமான நோய்களும் தீரும்.

வெள்ளறுகு பொடி

சமூலத்தை நன்கு உலர்த்தி பொடி செய்து சலித்து வைத்துக் கொண்டு, இரண்டு சிட்டிகை வீதம் நீரில் கலந்து அன்றாடம் காலையில் பருகிவர வாதநோய், வயிற்றுவலி, குடல் வாய்வு, ஆண்மை குறைவு, மாதவிலக்கு கோளாறு, நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.

விஷக்கடிக்கு

விஷக்கடிக்கு மிக சிறந்த மருந்து வெள்ளறுகு. வெள்ளறுகு சமூலத்தை நன்கு விழுதாக அரைத்து கடிவாயில் கட்டிக், இதன் சமூலத்தை சாறு எடுத்து 20 மில்லி அளவு உள்ளுக்கும் பருகி உப்பில்லாப் பத்தியம் இருக்க, வாந்தி பேதியாகி பாம்பு விஷம் வெளியேறும். இதுபோல ஓரிரு முறைகள் பருக வேண்டும்.

நரம்புக் கோளாறுகள், வாத நோய்கள் தீர

வாத நோய் தீர – வெள்ளறுகு சமூகத்தை ஒரு கைபிடி அளவு எடுத்து அதனுடன் மிளகு, சுக்கு, சீரகம் சேர்த்து இடித்து ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து கால் பங்காக சுண்டக் காய்ச்சி காலை, மாலை இரண்டு வேளை குடித்து வர நரம்புக் கோளாறுகள், குடல் வாதம் மேகக் கிரந்தி, வாத நோய்கள் தீரும்.

அரிப்பு, சொறி, சிரங்கு நீங்க

அரிப்பு, சொறி, சிரங்கு நீங்க – வெள்ளறுகு சமூகத்தை வெண்ணெய் போல அரைத்து வெந்நீரில் குழைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி அரை மணி நேரத்திற்கு பின் கழுவி வர ஊறல், அரிப்பு, சொறி, சிரங்கு போன்றவை நீங்கும்.

தோல் நோய்களுக்கு

தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக இதன் சமூலமே உள்ளது. வெள்ளறுகு கைப்பிடி அளவு கொண்டுவந்து ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து வதக்கி ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அதை இரண்டு பங்காக்கி காலை மாலை ஒரு நாளைக்கு இரண்டு வேளை கொடுத்து வந்தால் தோல் சம்மந்தமான சகல கோளாறுகளும் நீங்கும்.

(2 votes)