வரகு நெல்லிக்காய் சாதம்

வரகு அரிசி சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சிறந்த அன்றாட உணவாகும். கால்லீரல் செயல்பாட்டிற்கு நல்லது. உடலுக்கு தேவையான ஜீரண நீர் மற்றும் நிணநீரை சீராக சுரக்க உதவுகிறது. For English Kodo Millet Amla Rice Recipe.

பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசிக்கு சிறந்த மாற்று. சாதாரண சாதம் முதல் பொங்கல், இட்லி, கஞ்சி,  பிரியாணி, முறுக்கு, தட்டை என விட விதமான பலகாரங்களை இந்த வரகரிசியில் தயாரிக்கலாம். வரகரிசி தேங்காய் சாதம் அல்லது வரகரிசி தேங்காய் பால் கஞ்சியை அவ்வப்போது உண்டு வர வயிறு சம்மந்தமான தொந்தரவுகள் நீங்கும்.

மேலும் வரகரிசியின் பயன்கள், சத்துகள் மற்றும் நன்மைகளை தெரிந்துக்கொள்ள – வரகு அரிசி / Kodo Millet in Tamil.

தேவையான பொருட்கள்

  • ½ கப்  வரகரிசி
  • 3 பெரிய நெல்லிக்காய் 
  • 1 வர மிளகாய்
  • 2 பச்சை மிளகாய்

தாளிக்க

  • கடுகு
  • உளுத்தம்பருப்பு
  • கறிவேப்பிலை
  • பெருங்காயம்
  • மஞ்சள் தூள்
  • செக்கு நல்லெண்ணெய்
  • இந்துப்பு 

செய்முறை

முதலில் வராகரிசியை 20 நிமிடம் ஊறவைத்து நன்கு களைந்து கொள்ளவும். 

பின் ஒரு பானையில் இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிவந்ததும் வராகரிசியினை அதில் சேர்த்து ஐந்து முதல் எட்டு நிமிடம் வேகவிடவும். 

வரகரிசி நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து நீரினை நன்கு வடித்து விடவும்.

இப்பொழுது வரகு சாதம் தயார்.

இந்த வரகு சாதத்தினை ஒரு தட்டில் ஆறவைத்துக் கொள்ளவேண்டும். 

பெரிய நெல்லிக்காயை கழுவி கொட்டையை எடுத்து விட்டு பொடியாகத் துருவிக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் வாணலியை வைத்து செக்கு நல்லஎண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வர மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு தாளிக்க வேண்டும். 

அதனுடன் துருவிய நெல்லிக்காயைப் போட்டு நன்கு கிளற வேண்டும்.

சிறிது நேரம் வதங்கியவுடன் (இரண்டு அல்லது மூன்று நிமிடம்) அடுப்பிலிருந்து இறக்கி நெல்லிக்காய் கலைவையை ஆற வைத்த வரகு சாதத்துடன் சோ்த்து கிளற வேண்டும் (வரகு சாதம் குழையாமல் கிளறவேண்டும்). 

வரகு நெல்லிக்காய் சாதம் தயார்.

https://youtu.be/LsmcxZssVhA

வரகு நெல்லிக்காய் சாதம்

வரகு அரிசி சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சிறந்த அன்றாட உணவாகும். கால்லீரல் செயல்பாட்டிற்கு நல்லது. உடலுக்கு தேவையான ஜீரண நீர் மற்றும் நிணநீரை சீராக சுரக்க உதவுகிறது. வரகரிசியில் நெல்லிக்காய் சாதம் தயாரித்து உண்ண இரும்பு சத்துக்களும், வைட்டமின் சத்துக்களும் சீராக உடலில் சேரும்.
ஆயத்த நேரம் : – 20 minutes
சமைக்கும் நேரம் : – 15 minutes
மொத்த நேரம் : – 35 minutes
பரிமாறும் அளவு : – 1

தேவையான பொருட்கள்

  • ½ கப்  வரகரிசி
  • 3 பெரிய நெல்லிக்காய் 
  • 1 வர மிளகாய்
  • 2 பச்சை மிளகாய்

தாளிக்க

  • கடுகு
  • உளுத்தம்பருப்பு
  • கறிவேப்பிலை
  • பெருங்காயம்
  • மஞ்சள் தூள்
  • செக்கு நல்லெண்ணெய்
  • இந்துப்பு 

செய்முறை

  • முதலில் வராகரிசியை 20 நிமிடம் ஊறவைத்து நன்கு களைந்து கொள்ளவும். 
  • பின் ஒரு பானையில் இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிவந்ததும் வராகரிசியினை அதில் சேர்த்து ஐந்து முதல் எட்டு நிமிடம் வேகவிடவும். 
  • வரகரிசி நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து நீரினை நன்கு வடித்து விடவும்.
  • இப்பொழுது வரகு சாதம் தயார்.
  • இந்த வரகு சாதத்தினை ஒரு தட்டில் ஆறவைத்துக் கொள்ளவேண்டும். 
  • பெரிய நெல்லிக்காயை கழுவி கொட்டையை எடுத்து விட்டு பொடியாகத் துருவிக் கொள்ள வேண்டும். 
  • அடுப்பில் வாணலியை வைத்து செக்கு நல்லஎண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வர மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு தாளிக்க வேண்டும். 
  • அதனுடன் துருவிய நெல்லிக்காயைப் போட்டு நன்கு கிளற வேண்டும்.
  • சிறிது நேரம் வதங்கியவுடன் (இரண்டு அல்லது மூன்று நிமிடம்) அடுப்பிலிருந்து இறக்கி நெல்லிக்காய் கலைவையை ஆற வைத்த வரகு சாதத்துடன் சோ்த்து கிளற வேண்டும் (வரகு சாதம் குலையாமல் கிளறவேண்டும்). 
  • வரகு நெல்லிக்காய் சாதம் தயார்.