பற்பசை – பல் பொடி

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது அனைவரும் அறிந்ததே, இருந்தும் மாறுவதற்கு அடம்பிடிக்கும் அணியை சேர்ந்தவர்களாகவே நாம் இருக்கிறோம்.

நாட்டு நடப்பு, உலக நடப்பு என்று ஒன்றையும் விட்டு வைக்காமல் நல்லது கெட்டது என்று அனைத்தையும் பற்றி அறிந்திருந்தும் மாறுதல் என்றவுடன் அடுத்தவரை முதலில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

ஏதோ தேவையற்றதற்கு இவ்வாறு இருந்தால் சரிதான். ஆரோக்கியத்திற்கும் இவ்வாறு இருந்தால் இழப்பு நமக்கே. நம்மில் பலருக்கும் எதெல்லாம் நல்லது எதெல்லாம் கெட்டது என்று நன்றாகவே தெரியும், தெரிவது மட்டுமல்ல அவற்றை பற்றி பெருமையாக மற்றவர்களிடம் தனது பெற்றோர்கள், மூதாதயர்கள், ஊரில் அனைவரும் இவ்வாறு தான் இருந்தார்கள் என்றெல்லாம் கூறிக்கொண்டிருப்போம். நாம் மாறாமல் அவற்றைப் பற்றி பெருமை பேசுவதால் என்ன பயன்?

எந்த காரணமும் சொல்லாது நல்ல செயல்களுக்கான மாற்றத்தை முதலில் செயல்முறைப்படுத்தி மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பதால் நமக்கும் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் நன்மை பயக்கும்.  .

இயற்கை நமக்கு அளித்த கொடைகளை ஒவ்வொன்றாக குறைத்துக்கொண்டு செயற்கைக்கு பெருமையாகவும், நாகரீகமாகவும் மாறியதில் நாம் இழந்தது ஒன்றிரண்டல்ல. அதிலும் அதிசயம் மட்டுமே நிறைந்த நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானதாகக் கருதப்படும் பற்களும் அந்தப் பட்டியலில் அடக்கம். 

“நொறுங்கத் தின்றால் நூறு வயது”

“நொறுங்கத் தின்றால் நூறு வயது” என்பது அனைவரும் அறிந்தது. ஆக நூறு வயது வாழ வேண்டும் என்றால் நமக்கு தேவை ஆரோக்கியமான பற்கள்தானே. உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல முக அழகிற்கும் முக்கியமானது பற்கள்.

இன்று எத்தனைபேருக்கு ஆரோக்கியமான பற்கள் உள்ளது? மாங்காய், நெல்லிக்காய், புளியங்காய் போன்ற புளிப்பு காய்களை உண்டால் பற்கள் கூசுகிறது, கரும்பை மட்டுமல்ல தேங்காய்யைக் கூட கடித்து உண்ண சிரமமாகத்தான் இன்று உள்ளது. 

பற்கள் முழுவதுமாக முளைத்ததோ இல்லையோ பல் சொத்தை, பல் வலி, ஈறு வலி, பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் ஆட்டம், வாய் நாற்றம், பல் அரணை, சீழ் வடிதல் என்று தொந்தரவுகளுக்கு குறைவே இல்லை.

‘ஆலும், வேலும் பல்லுக்குறுதி’ மட்டுமல்ல பற்களுக்கு சாம்பல், உப்பு, கரித்தூள் என்று வாழ்ந்தவர்களுக்கெல்லாம் பற்கள் ஆரோக்கியமாகத் தான் அன்று இருந்தது. இன்றோ விதவிதமான பற்பசைகள், பற்பொடிகள் வந்தாலும் பற்கள் ஆட்டம்காட்டிக் கொண்டு தான் இருக்கிறது. 

எதையுமே யோசிப்பதுமில்லை, நல்லவற்றை எளிதாக ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டவர்கள் போல் நாமும் இருக்கிறோம்.

விளம்பரங்களுக்கும், தனிப்பட்ட நிறுவனத்தின் சூழ்ச்சிக்கு, வியாபார தந்தரத்திற்கும் நமது குழந்தைகளை காவு கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்றால் மிகையாகாது. 

இதற்கு சிறந்த உதாரணம்,
இருபத்தைந்து வருடங்களுக்கு முன் வந்த ஒரு பற்பசை விளம்பரத்தில் அவர்கள் கேட்ட கேள்வி “உடலுக்கு பாலும், பாதமும்… பற்களுக்கு உப்பும், கரித்தூளுமா… என்ன கேவலம்” என்றது.

இன்று அதே விளம்பரம் “உங்க பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா?” என்கிறது… 

நமது மூதாதையர்களின் பழக்கத்தை நாம் மாற்றிக்கொண்டதாலும், மறந்து விட்டதாலும் கிடைத்த பரிசு வலுவற்ற பற்கள். ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் அடையாளமாகவும் இருந்த பற்களை நமது முன்னோர்கள் இயற்கையான முறையிலும், மூலிகைகள் கொண்டும் சுத்தம் செய்தனர்.

ஆலங்குச்சி, வேலங்குச்சி, வேப்பங்குச்சி, பூலாங் குச்சி, நாயுருவி குச்சி என பல வகையான குச்சிகளைக் கொண்டும், உப்பு, சாம்பல், கரித்தூள், கருவேலம்பட்டை போன்ற பட்டை வகைகளைக் கொண்டும் பல் துலக்கினர்.

நாகரீகம் கருதி அவற்றை தவிர்த்து பலவகையான பற்பசைகளையும், இரசாயன பற்பொடிகளையும் பயன்படுத்த தொடங்கிய பின்னரே பற்கள் வலுவிழக்கத் தொடங்கியது. அதிலும் பற்கள் வெண்மையாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலும் அதிக இரசாயனங்கள் கொண்ட பற்பசைகளும் பயன்பாட்டிற்கு வந்தது. 

பற்கள் அனைவருக்கும் வெண்மையாகவே இருக்காது. அவரவர் உடல் நிலையினைப் பொறுத்து நிறங்கள் மாறுபடும். விளம்பரங்களைப் பார்த்து விட்டு அந்த வெண்மை வேண்டும் என்று பற்பசையை உபயோகிக்க பற்களின் உறுதிதான் குறையும்.

இவற்றால் வந்த விளைவுகள் பல் கூச்சம், பல் சொத்தை, ஈறு வீக்கம் போன்றவை மட்டுமல்ல, உறுப்பு கோளாறுகள், வயிற்று தொந்தரவுகள், நுரையீரல் தொந்தரவுகள், உடல் பலகீனமும் ஏன் புற்றுநோயும் தான்.
பற்களுக்கும் உடல் பலகீனத்திற்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா? 

வெண்மையாக்கவும், நன்கு நுரைவரவும், நல்ல மணத்துடன், சுவையுடன் இருக்கவும் அதிக இராசயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படுவது தான் இந்த பற்பசைகள். அதுமட்டுமல்லாது பயப்படுத்துபவருக்கு ஒருவகை ஈர்ப்பையும், அடிமைத்தனத்தையும் அளித்து தொடர்ந்து இந்த பற்பசையையே உபயோகிக்கும் எண்ணத்தையும் தூண்டுகிறது.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களாலும், நிகோடின் போன்ற பொருட்களாலும் உறுப்புகள், நுரையீரல் பாதிக்கப்பட்டு புற்றுநோயும் உருவாக காரணமாகிறது.

ஒரு சிகரெட்டில் இருக்கும் நிகோடின் அளவை விட அன்றாடம் ஒருமுறை பயன்படுத்தும் பற்பசையில் அதிக நிகோடின் உள்ளது. மீண்டும் மீண்டும் தங்களது பற்பசையையே வாங்க வேண்டும் என்பதற்காகவே நிகோடின், சுவையூட்டிகள் போன்றவற்றை அந்தந்த தயாரிப்புகள் சேர்க்கின்றனர். இதில் சேர்க்கப்படும் சுவையூட்டிகளால் குழந்தைகள் பற்பசையை முழுங்க மேலும் தொந்தரவுகள் அதிகரிக்கிறது.

பற்பசைகளை அதிக அளவு எடுத்துக்கொள்வதாலும், அதிக நேரம் பற்களை துலக்குவதாலும் பற்களின் எனாமல் பாதிக்கப்படுவதுடன், நாக்கின் சுவை முட்டுக்கள் உணர்விழந்து நரம்புமண்டலம் வரை பாதிப்பை உருவாக்குகிறது.

வாய் துறுநாற்றத்திற்கு முக்கிய காரணம் சீரான உணவு பழக்கமின்மையும், சரியான உணவும் இல்லாதது தான். அதனை சரி செய்யாது பற்பசையைக்கொண்டு சீர் செய்து விடலாம் என்பதே பல வகைகளில் உடலுக்கு தீங்கினை விளைவிக்கிறது.

உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான சுவைமுட்டுக்களை பற்பசைகள் குலைக்கிறது என்றால் நம்பவே முடியவில்லை தானே.. 

அக்காலத்தில் வேப்பங்குச்சி போன்ற குச்சிகளைக் கொண்டு பற்களை சுத்தம் செய்யும்பொழுது பற்கள் மட்டும் சுத்தமாகவில்லை ஈறுகள் பலமாவதுடன் உடலுக்கு தேவையான கசப்பு மற்றும் துவர்ப்பு சுவைகளும் அதன் சத்துக்களும் உடலுக்குள் சேர்ந்தது.

இதனால் உடலுக்கு தேவையான நோய்யெதிர்ப்பு சக்தி கிடைத்ததுடன் சிறந்த கிருமி நாசினியாகவும் அது செயல்பட்டது. பற்களில் மட்டுமல்லாது  உடலில் தங்கியிருந்த நச்சுக்களும், கிருமிகளும் எளிதில் வெளியேறியது, உடலும், பற்களும் ஆரோக்கியமாக விளங்கியது.

அது எப்படி பற்களை சுத்தம் செய்வதற்கும் நச்சுக்கள் நீங்குவதற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? நமது நாக்கு வயிற்றுக்குள் வரவிருக்கும் உணவின் சுவையினை முதலில் உணர்வுகள் மூலமாக அறிவிக்க அதனைக் கொண்டு ஜீரண உறுப்புக்கள் அந்த உணவிற்கு ஏற்றவாறு சுரப்பிகளை சுரந்து சீரான ஜீரணத்திற்கு துணைபுரிகிறது. நாக்குகள் நேரடியாக அதன் சுவையினையும், கசப்பு தன்மையினையும் உடலுக்கு அனுப்ப மற்றவேலைகள் தன்னால் நடக்கிறது. 

இன்று இந்த குச்சிகள், பட்டைகள் இல்லாமல் பற்பசைகளை உபயோகிப்பதால் இரசாயனங்கள் நமது சுவை முட்டுக்களையும், உணவு குழாய்யையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. உடலுக்கு தேவையான நோய்யெதிர்ப்பு சத்தும், நச்சு கிருமி முறிவும் காணாமல் போய்விட்டது, உடலும் குப்பைக் கூலமாக மாறிவிட்டது.

உடல் குப்பையாக மாற அதனை பற்கள் வலியாகவும், வீக்கமாகவும் வெளிப்படுத்த துறுநாற்றம் உருவாகிறது. இதெல்லாம் சாதாரண பற்பசைகளில் தான் என்று நினைக்க வேண்டாம், மூலிகைகள் கலந்த பற்பசையும் இவ்வாறுதான்.

பற்பசையில் இவ்வளவு ஆபத்துக்கள் இருப்பதெல்லாம் சரிதான், இந்த காலத்தில் வேப்பாங்குச்சி, அலங்குச்சி, பட்டைகளுக்கும் எங்கு செல்வது.. அதெல்லாம் சாத்தியமா எங்கிறீர்களா?
அனைத்துமே சத்தியம் தான், நாம் நினைத்தால். மனமிருந்தால்  மார்க்கமுண்டு. முதலில் ஆரோக்கியமான உடல் நிலைக்கு மாறவேண்டும் என்ற எண்ணத்துடனும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கவேண்டும் என்று மாறுதலுக்குத் தயாராக வேண்டும்.

அடுத்ததாக வீட்டிலேயே எளிதாக எந்த ரசாயன சேர்க்கையும் இன்றி பற்பொடிகளை தயாரித்து பயன்படுத்தலாம். வாரம் ஒருமுறையேனும் நாம் வாழும் இடத்தில் உள்ள தட்ப வெப்பத்தில் கிடைக்கக் கூடிய மரம், செடி, மூலிகை, குச்சிகளை கொண்டு பற்களை சுத்தம் செய்யலாம்.

இதனால் உமிழ் நீர் சீராக சுரப்பதுடன் ஜீரணமும் சீராகும்.
 மாவிலை, வாழைப் பழத்தோல், புதினா, எலுமிச்சை, உப்பு, கிராம்பு, கடுகு எண்ணையுடன் மஞ்சள் தூள், ஆரஞ்சு பழத்தோல், பிரிஞ்சி இலையுடன் எலுமிச்சை சாறு கலந்து கொண்டு பற்களை தேய்க்கலாம்.

வெண்ணீரில் உப்பு கொண்டு வாய் கொப்பளித்தல், நல்லெண்ணெய் கொண்டு வாயினை கொப்பளித்தல் (oil pulling), ஒவ்வொரு வேளை உணவிற்கு பின் வாயினை நடுவிரலைக் கொண்டு தேய்த்து சுத்தப்படுத்துவது இதெல்லாம் பற்களை சுத்தப்படுத்த சிறந்த வழிகள்.

தேங்காய், கரும்பு, கேரட் போன்ற கடினமானவற்றை நன்கு கடித்து உண்பதும் பற்களை உறுதியாக வைக்கும். ஒவ்வொரு நாளும் காலையும் இரவும் ஈறுகளை நன்கு அழுத்தம் கொடுப்பதும், தேய்த்தும் விடுவது நல்லது. 

பற்பொடிகளையும் தயாரித்து அன்றாடம் பயன்படுத்தலாம்.

புதினா பற்பொடி:

புதினாவினை காயவைத்து அதனை பொடித்து சரிசமமாக இந்துப்பினை சேர்த்துவைத்துக்கொண்டு பயன்படுத்தலாம். 

சுக்கு பற்பொடி:

சுக்கு, கடுக்காய், இந்துப்பு சமஅளவில் சேர்த்து பயன்படுத்தலாம்.

மூலிகை பற்பொடி:

மஞ்சள் கரிசலாங்கன்னி இலைகள், புதினா இலைகள், நாவல் இலைகள், கொய்யா இலைகள், மாந்துளிர்கள் இவற்றை காயவைத்து அதனுடன் இந்துப்பு, கிராம்புத்தூள் கலந்து பயன்படுத்தலாம்.

பட்டைப் பற்பொடி:

ஆலமரவிழுதுப்பொடி, கருவேலம் பட்டை தூள், லவங்கப்பட்டை தூள், மிளகுத் தூள், சீரகத்தூள், இந்துப்பு இவற்றை சரிசமமாக கலந்து பயன்படுத்தலாம்.

இவ்வாறு வேர்கள், மூலிகைகள், பட்டைகள், குச்சிகள் கொண்டு எளிதாக பற்பொடிகளை தயாரித்து பயன்படுத்த பற்கள் உறுதியாகும், பற்களில் ஏற்படும் தொந்தரவுகள் நீங்கும்.

மாற்றத்தை நோக்கி நாம் மாறாதிருந்தால் விரைவில் வேப்பங்குச்சிகளையும், அலங்குச்சிகளையும் அயல்நாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு நிறுவனங்களும் போட்டிபோட்டு சந்தைப்படுத்தும். 

(1 vote)