தூயமல்லி அரிசி – நம் பாரம்பரிய அரிசி

நவீன உலகில் பல பல இயந்திரங்களுடன் வாழ்ந்து வரும் நாம் அந்த இயந்திரங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட நமது உடலுக்கு கொடுப்பதில்லை என்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

முகம் காட்டும் கண்ணாடி

இதையே அந்தக்காலத்தில், ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்றனர். அப்படி முகத்தில் வெளிப்படும் மாற்றங்களை எளிதாக தெரிந்துகொள்ள முகம் காட்டும் கண்ணாடி என்ற பகுதியில் பார்க்கலாம்.

நமது எண்ணங்கள் மட்டுமில்லாது உடலில் ஏற்பட்டிருக்கும் சத்து குறைபாடுகள், கழிவுகளின் தேக்கம், நச்சுக்களின் அளவு இவற்றை தோல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அழகு கெடுவது மட்டுமல்ல தோலில் ஏற்படும் பல பல தொந்தரவுகளான கட்டிகள், புண்கள், சிராய்ப்பு, சொறி போன்றவற்றிற்கும் இவையே காரணமாகிறது.

அழகு என்றதும் தோலினை அழகுபடுத்தும் நமக்கு அந்த தோல் தான் சிறந்த கண்ணாடியாக இருக்கிறது என்பது பலமுறை மறந்து விடுகிறது. எந்த பிரத்தியேக நவீன ஸ்கேன்னும் தேவையில்லை நமது உடலின் ஆரோக்கிய நிலையை தெரிந்து கொள்ள என்ற அற்புதமான படைப்பை மறந்து விட முடியுமா.. 

தோலில் ஏற்படும் அனைத்து தொந்தரவுகளுக்கு காரணமானது உடலில் சேரும் அதிகப்படியான நச்சுக்களே என்பதை மறந்து விடமுடியாது.

சேரக்கூடாது உணவுகளாலும், அதிக ரசாயன, பூச்சிகொல்லிகள் கலந்த உணவுகளாலும் ஏற்படும் வேதியல் மாற்றத்தினால் தோல் பாதிப்படைகிறது. அதே போல் அதிக இரசாயனங்கள் கலந்த பூச்சுக்கள், சோப்புகள், இரவு வேலையின் காரணமாக தூக்கமின்மை, உடல் சூடு போன்ற பழக்கங்களாலால் வரும் கழிவுகளாலும் தோலின் நிறமும், மினுமினுப்பும் குறையும்.  

இவற்றை எளிதில் நமது உணவுகளின் மூலமாக சீராக்கிக்கொள்ளலாம். அதுவும் இரசாயனங்கள் சேராத நல்ல காய்கறி, பழங்கள், கீரைகளால் உடல் பொலிவை மெருகூட்டும் என்றாலும், நமது உணவு கலாச்சாரத்தில் 80% அரிசியாக இருப்பதால் சிறந்த பாரம்பரிய அரிசியான தூயமல்லி அரிசியினைக் கொண்டு மேலும் மெருகூட்டலாம்.

நமது உணவில் காலை பலகாரம், பகல் உணவு, இரவு உணவு என அனைத்திலும் ஏதோ ஒரு வகையில் அரிசியின் சாயல் வந்துவிட சுலபமாக பாரம்பரிய அரிசியினைக் கொண்டு அழகாகலாம்.

அழகூட்டும் அரிசி – தூயமல்லி அரிசி

தூயமல்லி அரிசி என்றதுமே அரிசியின் நிறமும் அதன் குணமும் தெரிந்திருக்கலாம். தூய்மையான வெளிர்  நிறைத்தைக் கொண்ட இந்த அரிசி மல்லிகைப் பூவைப்போல் இருப்பதுடன், உடல் கழிவுகளை வெளியேற்றவும், மேனி பளபளப்பையும் கூட்ட உதவுகிறது.  

தூயமல்லி அரிசியின் சத்துக்கள்

உடலின், இரத்தத்தில், உறுப்புகளில் அடைந்திருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவும் இந்த பாரம்பரிய அரிசியான தூயமல்லி பல தாது உப்புக்களையும், வைட்டமின் சத்துக்களையும் கொண்டுள்ளது.

உமியை மட்டும் நீக்கி தவிடு நீக்காத இந்த அரிசியில் மேலும் பல பல சத்துக்கள் அடங்கியுள்ளது. அன்றாட சமையலுக்கு அனைவரும் எளிதாக மாற்றிக்கொள்ள உதவும் இந்த தூயமல்லி அரிசி சிறந்த சுவையினைக் கொண்டது. 

நமது உடலென்னும் இயந்திரம் சீராகவும், சிறப்பாகவும் வேலைசெய்ய அதற்கு நல்ல பராமரிப்பு தேவை. அவ்வாறு பராமரிக்க சிறந்த உணவினையும், உடலுக்கு புரியும் உணவும் தேவை. அவற்றை இந்த பாரம்பரிய அரிசியினை கொண்டு சிறப்பாக அளிக்கலாம். 

என்ன செய்யலாம் இந்த தூயமல்லி அரிசியில்

  • எல்லா வகை குழம்பு, கூட்டு, ரசம், மோர் என சிறப்பாக இந்த தூயமல்லி வெள்ளை அரிசி சாதத்துடன் உட்கொள்ள சுவையாக இருக்கும்.
  • இவைமட்டுமல்ல புலாவ், பிரியாணி, தக்காளி சாதம் போன்ற சாத வகைகளுக்கும் இந்த தூயமல்லி அரிசி ஏற்றது.
  • சிறுகுழந்தைகளுக்கு ஏற்படும் பல வகையான புதுப் புது வியாதிகளுக்கும், பெரியவர்களுக்கு ஏற்படும் சக்கரை வியாதி, இரத்த கொதிப்பிற்கும் நல்ல மருந்தாக இந்த அரிசி இருக்கும்.
  • தூயமல்லி, தூய உடலை மட்டுமல்ல தூய மனதையும், தூய எண்ணத்தையும் உடலுக்கு கொடுக்க தேஜஸான பொலிவை அனைவரின் மத்தியிலும் வெளிப்படுத்தும் சிறந்த அரிசி.
(4 votes)

2 thoughts on “தூயமல்லி அரிசி – நம் பாரம்பரிய அரிசி

  1. சக்திவேலு

    அருமை

Comments are closed.