வயிற்றுப்புண் குணமாக

வயிற்றுப்புண் வர பல காரணங்கள் உள்ளது. அளவிற்கு மிஞ்சிய உணவு, பசிக்காத உணவு, பசித்தும் உண்ணாமல் இருபது, நேரம் தவறிய உணவு என பல காரணங்களை சொல்லலாம். அதிலும் வயிற்றுப்புண்ணில் பல வகைகளும், விதங்களும் உள்ளது. அவற்றை எவ்வாறு எளிமையாக வீட்டு வைத்திய முறையில் நம் பாட்டி வைத்தியமாக குணமாக்கலாம் என பார்போம்.

  • அனைத்து விதமான வயிற்றுக்கோளாறுகளுக்கும் புதினா மிக சிறந்த மருந்து. புதினாவை துவையலாக அரைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் கொடுக்க விரைவில் நல்ல பலன் கிடைக்கும். புதினாவை வீட்டிலேயே சிறு தொட்டியில் வைத்து வளர்த்து காலையில் இரண்டு இலைகளை பச்சையாக அல்லது அவ்வப்பொழுது மெல்வதால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.

  • அம்மன் பச்சரிசி இலை, துவரம்பருப்பு சேர்த்து சமைத்து பகல் வேளையில் சாதத்துடன் ஒரு ஏழு நாட்கள் சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.
  • வயிற்று உப்புசம் குணமாக சீரகம், கருஞ்சீரகம் இரண்டையும் பொடி செய்து கருவேப்பிலை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, கிராம்பு சேர்த்து தயிருடன் கலந்து பருகலாம்.

  • வயிற்று புண், தொண்டை புண் குணமாக தேங்காய்ப்பால் கொப்பளித்து குடித்து வரலாம்.
  • குடல் வெந்து ஓட்டை விடுவதுதான் அல்சர். அந்த அல்சர் கண்டவர்கள் தினமும் ஒரு டம்ளர் திராட்சை பழச்சாறு குடித்து வர அல்சர் குணமாகும்.
  • வயிற்றுவலி, பித்த வெடிப்புக்கு மருத இலையை அரைத்து ஒரு கிராம் காலையில் சாப்பிட்டு வர விரைவில் தீரும்.

  • வயிற்றுக்கடுப்பு, பெரும்பாடு மறைய மாமரவேர் பட்டையை சிதைத்து கஷாயம் செய்து மூன்று வேளை சாப்பிட்டு வர பலன் கிடைக்கும்.
  • குடல் புண் ஆற வில்வபழம் பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டு வர குணம்தெரியும்.
  • இரத்த பேதி, வயிற்றுக் கடுப்பு நீங்க மாந்தளிர், மாதுளை இலையை அரைத்து ஒரு கிராம் மோரில் கலந்து குடிக்க நீங்கும்.

  • வயிற்று வலிக்கு கசகசாவுடன் கருப்பட்டி மற்றும் 4 கிராம்பு பொடி சேர்த்து மூன்று வேளை சாப்பிட குணம் தெரியும்.
  • வயிற்றுவலி தீர மாதுளம் பழத்தின் தோலை நெருப்பில் சுட்டு கரியாக்கி அந்த தூளை கோதுமை கஞ்சியுடன் கலந்து சாப்பிட்டு வரலாம்.
  • கொன்றைப் பூ கசாயம் குடிக்க வயிற்று வலி தீரும்.

  • வயிற்று நோய் குணமாக சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிட குணமாகும்.
  • ரத்த வாந்தி, வயிற்றுவலி தீர போன்ற தொந்தரவுகள் மறைய வெங்காயம் உப்பைத் தொட்டு தின்ன தீரும்.

  • வயிற்றுப்புண் தீர புளியம்பட்டை தூள், உப்பு சேர்த்து கசாயம் குடிக்க வயிற்றுப்புண் தீரும்.
  • வயிற்றுப் பொருமல் குணமாக வெற்றிலை, ஓமம் இடித்து பிழிந்து தேன் சேர்த்து சாப்பிடலாம்.