vaivu pirachanai, Flatulence, Stomach Gas, Bad Smell

வயிற்றுக் கடுப்பு மறைய

உடல் உஷ்ணம் அதிகமாவதால் வரக்கூடிய மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று வயிற்றுக்கடுப்பு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய ஒரு சாதாரண பிரச்சனை மட்டுமல்லாமல் வேதனைக்குரிய பிரச்சனையும் இந்த வயிற்றுக் கடுப்பு.

உடல் உஷ்ணம், அல்சர், பசி இல்லாமல் இருப்பது, சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளாமல் இருப்பது, பசித்து உணவு அருந்தாமல் இருப்பது, பசிக்காமல் உணவு உட்கொள்வது என பல காரணங்களும் இந்த வயிற்றுக் கடுப்பிற்கு காரணமாக சொல்லலாம். இந்த காரணங்களால் உணவு சரியான முறையில் செரிமானம் ஆகாமலும் வாயுக்கள் வயிற்றில் உருவாக, அந்த வாயுக்களாலும் வயிற்றுக்கடுப்பு ஏற்படுவதுண்டு. இப்படி பலவகைகளில் வரும் வயிற்றுக் கடுப்பை போக்க சில எளிய வழிமுறைகளை இனி பார்ப்போம்.

vaivu pirachanai, Flatulence, Stomach Gas, Bad Smell
vaivu pirachanai, Flatulence, Stomach Gas, Bad Smell

காலையில் எழுந்ததும் வெந்தயத்தை வாயில் போட்டு மென்று தயிரை குடிக்க வயிற்றுக் கடுப்பிலிருந்து விடுபடலாம். முதல் நாள் இரவே வெந்தயத்தை ஊறவைத்தும், மறுநாள் காலை அந்த வெந்தயத்தைத் ஊறிய வெந்தய தண்ணீருடன் சேர்த்து உண்பது நல்ல ஒரு பலனை அளிக்கும்.

நீங்க மாதுளம் பூவை கசாயம் செய்து குடிப்பதால் வயிற்றுக் கடுப்புநீங்கும். பலவிதமான மருத்துவ குணங்களைக் கொண்டது மாதுளைப் பூ, அவற்றில் மிக முக்கியமானது இந்த வயிற்று கடுப்பை நீக்குவது.

அரச இலைகள் பலவிதங்களில் மனிதர்களுக்கு நன்மை பயப்பவை. அரசனை போன்ற வாழ்வை கொடுக்கக்கூடிய இந்த அரச இலை கொழுந்தை அரைத்து மோருடன் கலந்து பருகுவதால் வயிற்றுக்கடுப்பு உடனடியாக நீங்கும்.

பலருக்கும் உடல் உஷ்ணம் அதிகரிப்பதும், வயிற்றுக்கடுப்பு அதிகரிப்பதும், அதனால் மூலக் கடுப்பு, ஆசனவாய் கடுப்பு அதிகரிப்பதும் உண்டு. இதற்கு இளம் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்து நீரை குடித்து வரலாம். நல்ல பலன் கிடைக்கும்.

இரத்த கடுப்பு குணமாக விளாம்பிசினுடன் அதே அளவு வெள்ளைப்பூண்டு சேர்த்து அரைத்து தயிரில் கலந்து குடிக்க இரத்தக் கடுப்பு உடனடியாக நிற்கும்.

வயிற்று கடுப்பு குணமாக தொட்டாற் சுருங்கி இலை சாறு எடுத்து தயிரில் கலந்து குடிக்க வயிற்று கடுப்பு குணமாகும்.

(6 votes)