சீந்தில் கொடி – நம் மூலிகை அறிவோம்

நம்மை சுற்றி இருக்கும் ஒரு சிறந்த மூலிகை இந்த சீந்தில் கொடி. காடுகள், கிராமங்கள், நகரங்களில் வேலியோரங்கள், மரக்கிளைகள் என எல்லா இடங்களிலும் படர்ந்திருக்கும் ஒரு மூலிகை இந்த சீந்தில் கொடி. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் இதனைப் பார்க்க முடியும்.

அமிர்தவல்லி, சோமவல்லி, சாகா மூலி, சஞ்சீவி, ஆகாசவல்லி என பல பெயர்களும் இதற்கு உண்டு.

இதனுடைய இலைகள் இதய வடிவத்திலும் சாறுள்ள தண்டுகளாகவும் இருக்கும். இதன் விழுதுகள் தரையில் பட்டாலும் தழைத்து வளரும்.

இதன் வேர், தண்டு, இலை எல்லாமே மருந்தாக பயன்படுகிறது. இது நல்ல ஜீரண சக்தியைத் தரும். தாது புஷ்டியை அதிகரிக்கும். இதன் இலை புண்ணை ஆற்றும். தாய்ப் பாலை அதிகரிக்கும். சகல காய்ச்சலுக்கும் சஞ்சீவி போன்றது.

சீந்தில் சர்க்கரை

இந்த சீந்தில் கொடியின் முதிர்ந்த இலைகளையும் கொடிகளையும் நறுக்கி அதனை நன்கு இடித்து குடி நீரில் கரைத்து வைக்க வேண்டும். பின் இதனை வடிகட்டி அசையாது சில மணி நேரம் வைத்திருக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து இந்த நீரை வடித்து பார்த்தால் அடியில் வெண்ணிறமான மாவு படிந்திருக்கும். இதை மீண்டும் நீர்விட்டு கரைத்து தெளிய வைத்து இறுத்து எடுத்து வெண்ணிறமான மாவு கிடைக்கும். இந்த மாவை உலர்த்தி வைக்கப் பளிச்சென்று வெண்ணிறமாக பொடி கிடைக்கும். இந்த பொடியே சீந்தில் சர்க்கரை எனப் படும். இது ஒரு கற்ப மருந்தாகும். பல பிணிகளும் பிணிகளுக்கு இது சிறந்த ஒரு மருந்து.

மலேரியாவிற்கு சிறந்த சீந்தில்

மலேரியாக் காச்சலுக்கு கைகண்ட மருந்து இந்த சீந்தில். சோம்பு, அதிமதுரம், கருவேப்பிலை, சீந்தில் சாறு பிழிந்து பக்குவமாக மருந்து தயாரித்து மூன்று நாள் பருகி வநதால் மலேரியாக் காய்ச்சல் குணமாகிவிடும்.

குளிர்க் காய்ச்சல்

சீந்தில் கொடி, நிலவேம்பு, மிளகு, ஏலக்காய், சுக்கு, பற்பாடகம், ஆகியவற்றை பத்து கிராம் எடுத்து அம்மியில் வைத்து ஒன்றிரண்டாக அரைத்து ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டு அரை காப்பாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி மூன்றில் ஒரு பங்கை பகல் நேரத்திலும், மீதமுள்ள ஒரு பங்கை மாலை ஆறு மணிக்கும் பருக வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் பருக குளிர் ஜுரம் குணமாகி நீங்கும். மேலும் காய்ச்சினால் மேலும் மூன்று நாட்களுக்கு கொடுக்க பூரண குணம் உண்டாகும்.

புண்ணை ஆற்றும் சீந்தில்

நீண்ட நாள் புண்ணுக்கு சிறந்தது இந்த சீந்தில். சீந்தில் இலையை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறதளவு வேப்பெண்ணையை விட்டு, இலையை நன்றாக வதக்கி எடுத்து புண்ணின் மேல் போட்டு அதன் மேல் வெற்றிலையை வைத்து நன்றாக கட்டிவிர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து போடா வெகு நாட்களாக ஆறாமலிருந்த புண் மூன்றே நாளில் ஆற ஆரம்பிக்கும். புண் பூரணமாக ஆறும்வரை தினசரி இதே போல் இலையை வதக்கி வைத்து கட்டிவிட வேண்டும்.

மூலத்தை குணமாக

அஷ்ட மூலத்திற்கும் இந்த சீந்தில் சிறந்த மருந்தாகும். காட்டு கருணை, கிழங்கு கருணை கிழங்கு, சீந்தில் கொடி இலை, சீந்தில் கொடி வேர், மிளகு, சுக்கு, சித்திரமூலம் போன்ற பொருட்களை கொண்டு லேகியம் தயாரித்து உண்பதால் நல்ல ஒரு பலன் கிடைக்கும். இந்த லேகியத்தை சாப்பிடும் பொழுது மிளகாய் காரம், புளி, கடுகு, பூசணிக்காய், பாகற்காய் போன்றவற்றை சாப்பிடக்கூடாது. காரத்திற்கு மிளகையும், புளிப்பு எலுமிச்சையும் சேர்த்துக்கொள்ளலாம். தொடர்ந்து இந்த சீந்தில்கொடி லேகியத்தை 40 நாட்கள் உண்டு வர நல்ல ஒரு மாற்றத்தை விரைவில் காணலாம்.

(1 vote)