விதைகளின் மருத்துவகுணங்கள்

துத்தி விதை

உடலில் ஏற்படும் உட்சூடு. குஷ்ட ரோகம், கை, கால்களில் ஏற்படும் கருமேகம் ஆகியவற்றிற்கு துத்தி விதையைத் தின்பதால் நிவாரணம் கிடைக்கும்.

மாதுளம் விதை

இனிப்புச்சுவை மிக்கது மாதுளம் விதைகள். ஆண்களுக்கும் உடல் பலத்தை அளிக்கும். சுக்கிலத்தைக் கெட்டிப்படுத்துவதில் நிகரற்றது இந்த மாதுளம் விதை. விந்தணுவில் ஏற்படும் குறைகளைப் போக்கி பல தொந்தரவுகளையும் குணப்படுத்தும் சக்தியும் இதற்குண்டு.

புளியம் விதை

புனியங் கொட்டையின் விதை துவர்ப்புச் சுவை கொண்டது. மூத்திரக்கடுப்பு, வெள்ளைபடுதல், சுக்கில மேகம் ஆகியவற்றைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

முருங்கை விதை

உடல் பருமனுக்கு சிறந்த விதை முருங்கை விதை. நீர்த்த இந்திரியத்தைக் கெட்டிப்படுத்தும் தன்மை கொண்டது. நரம்புகளை பலப்படுத்தும். முற்றின விதைக் கொண்ட முருங்கைக் காயை தொடர்ந்து இரண்டு மாதம் சூப் செய்து உண்பதால் எப்பேர்ப்பட்ட நரம்பு தளர்ச்சியும் பறந்தோடும்.

நெருஞ்சில் விதை

சதையடைப்பு, சிறுநீரக உபாதைகள் ஆகியவற்றைக் போக்கக் கூடியது நெருஞ்சில் விதை.

ஆளி விதை

ருசியின்மை, உடற்கடுப்பு. வாதவலி, ஓக்காளம், சோபை, அஸ்திச்சூடு, நரம்புச்சூலை என பல தொந்தரவுகளை நீக்கும். ஆளி விதையின் பலனைப் பெறவேண்டுமானால் ஆளி விதையை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. மரபு விதை மாற்றப்படாத ஆளி விதை அதிலும் இயற்கை முறையில் விளைந்ததாக இருப்பது அவசியம்.

மகிழம் விதை

மகிழம் விதை குளிர்ச்சித் தன்மை கொண்டது. கண்ணில் ஏற்படும் சில தொந்தரவுகளுக்கு சிறந்தது. உடலில் ஏற்படும் சுரத்தைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.

(2 votes)